என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமையில் நடந்தது.
    • பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 340 மனுக்களை கலெக்டரிடம் வழங்கினார்கள்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் பொதுமக்கள் மின்சார வசதி, சாலை வசதி, வீட்டுமனை பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 340 மனுக்களை கலெக்டரிடம் வழங்கினார்கள்.அந்த மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர், அதன் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை கீழ் இயங்கும் பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் 2021-2022 ம் ஆண்டில் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்பட்டு முதல் இடம் பிடித்த அஞ்செட்டி அரசு பிற்படுத்தப்பட்டோர் நல பள்ளி மாணவர் விடுதி காப்பாளர் முருகனுக்கு ரூ.10 ஆயிரம் மதிப்பில் பரிசுத்தொகையும், இரண்டாம் இடம் பிடித்த பர்கூர் அரசு மிகப்பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி மாணவிகள் விடுதி காப்பாளினி சந்திராவிற்கு ரூ.5 ஆயிரம் மதிப்பில் பரிசுத்தொகை மற்றும் மூன்றாம் இடம் பிடித்த போச்சம்பள்ளி அரசு மிகப்பிற்படுத்தப்பட்டோர் நல பள்ளி மாணவிகள் விடுதி காப்பாளினி லட்சுமிக்கு ரூ.3 ஆயிரம் மதிப்பில் பரிசுத்தொகை என மொத்தம் 3 காப்பாளர்களுக்கு ரூ.18 ஆயிரம் மதிப்பிலான பரிசுத்தொகை, விருது, கேடயங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.

    • பாகலூர் சாலை பகுதி வழியாக நடந்து சென்றார்.
    • தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி விட்டனர்

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி பஸ்தி நகர் 3-வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மனைவி பத்மாவதி (வயது 49). இவர் பஸ்தி நகர் 1-வது கிராஸ் பாகலூர் சாலை பகுதி வழியாக நடந்து சென்றார்.

    அப்போது 25 வயது மதிக்கத்தக்க 2 மர்ம நபர்கள் அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தனர்.பத்மாவதி அருகே வந்தவுடன் அவர் கழுத்தில் அணிந்திருந்த சுமார் நான்கரைபவுன் தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி விட்டனர்.

    இது குறித்து பத்மாவதி கொடுத்த புகாரின்பேரில் ஓசூர் ஹட்கோ போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம திருடர்களை தேடி வருகின்றனர்.

    • மர்ம ஆசாமி உண்டியலை உடைத்து அதில் இருந்த பணம், அம்மன் கழுத்தில் இருந்த நகை முதலியவற்றை திருடினான்.
    • அந்த திருடனை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டணம் அருகே யுள்ள மலையாண்ட அள்ளிபுதூர் பகுதியில் அங்காளம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் கோவிலின் கமிட்டி மெம்பராக இருப்பவர் முனியப்பன் (வயது 54).

    சம்பவத்தன்று இந்த கோவிலில் புகுந்த மர்ம ஆசாமி உண்டியலை உடைத்து அதில் இருந்த பணம், அம்மன் கழுத்தில் இருந்த நகை முதலியவற்றை திருடினான்.

    ஆனால் முனியப்பன், அந்த பகுதியில் இருந்தவர்களும் சேர்ந்து அந்த திருடனை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

    காவேரிபட்டணம் போலீசார் அந்த ஆசாமியை விசாரித்தபோது அதே பகுதியை சேர்ந்த சின்னசாமி மகன் சதீஷ்குமார் (22) என்பதும், இதேபோல 6-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகளில் தொடர்பு உள்ளதும் தெரியவந்தது.

    சதீஷ்குமாரை கைது செய்த போலீசார் அவனிடம் இருந்து பணம்,நகையை மீட்டனர்.

    • ஆதார் எண் இணைக்கும் பணி தொடங்கி வருகிற டிசம்பர் 31ந் தேதி வரை நடக்கிறது.
    • வீட்டை மாற்றும்போது புதிதாக குடியிருக்க வருவோர் தங்களது ஆதாரை இணைக்கலாம்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட மின் பகிர்மான அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி, ஓசூர் மின் பகிர்மான அலுவலகங்களின், 71 மையங்களில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் பணி தொடங்கி வருகிற டிசம்பர் 31&ந் தேதி வரை நடக்கிறது.

    அதன்படி கிருஷ்ணகிரி கோட்டத்தில் கிருஷ்ணகிரி மின்வாரிய அலுவலகத்தில் 8 மையங்கள், சூளகிரியில் 6, காவேரிப்பட்டணத்தில் 4 மையங்கள் உள்பட, 18 பிரிவு அலுவலகங்களில் இப்பணி தொடங்கி உள்ளது. அதேபோல போச்சம்பள்ளி மின் பகிர்மான வட்டத்தில் 19 மையங்கள், ஓசூர் மின் பகிர்மான வட்டத்தில் 34 மையங்களிலும் இப்பணி நடக்கிறது.

    இதில், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க, மின் இணைப்பு எண்ணுடன், நுகர்வோர் தங்கள் மொபைல் எண்ணை வழங்க வேண்டும். வீட்டில் உரிமையாளர் தங்கள் மின் இணைப்புடன் ஆதார் எண் மற்றும் அவர்களது மொபைல் எண்ணை இணைக்க வேண்டும்.

    ஒருவர் எத்தனை வீடுகள் வைத்திருப்பினும், அத்தனை இணைப்புகளுக்கும் அவர்களது ஆதார் எண்ணையே பயன்படுத்தி கொள்ளலாம். வீட்டு உரிமையாளர் அனுமதியுடன், வாடகை வீட்டில் உள்ளவர், அவரது எண்ணையும் பதிவு செய்து கொள்ளலாம். வாடகைதாரர் வீட்டை மாற்றும்போது புதிதாக குடியிருக்க வருவோர் தங்களது ஆதாரை இணைக்கலாம்.

    ஆதார் எண்ணை இணைக்க விட்டாலும் மின்வாரிய அலுவலகங்களில் மின் கட்டணம் தொடர்ந்து செலுத்தலாம். ஆனால் ஆன்லைனில் மின்கட்டணம் செலுத்த முடியாது. மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வருபவர்கள் வேலை நாட்களில் காலை, 9:30 மணி முதல் மாலை, 5:15 வரை தங்களது விவரங்களை வழங்கலாம். மொபைல் எண்ணிற்கு ஓ.டி.பி.,எண் வருவதில் சிரமம் இருப்பினும் பதிவு செய்யும் பணியில் பாதிப்பிருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • கல்லூரி மாணவிகள் விடுதியில் நேற்று மாலை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    • அடிப்படை வசதிகள் முறையாக உள்ளதா என கேட்டறிந்தார்.

    பர்கூர்,

    கிருஷ்ணகிரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பீலா ராஜேஷ், மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டியுடன், பர்கூரில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி மாணவிகள் விடுதியில் நேற்று மாலை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது மாணவிகளிடம், உணவு, குடிநீர், மின்சார வசதிகள், உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக உள்ளதா என கேட்டறிந்தார்.

    பின்னர் அருகில் உள்ள ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவர் விடுதியை ஆய்வு செய்த அவர், எந்தெந்த மாவட்டங்களிலிருந்து மாணவர்கள் படிக்கிறீர்கள் எனவும், அவர்களது கல்வி, விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.

    ஏதேனும் குறைகள் இருப்பின் உடனடியாக தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும் எனவும் கூறினார். அப்போது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அய்யப்பன் தாசில்தார் பன்னீர்செல்வி மற்றும் விடுதி காப்பாளர்கள் உடன் இருந்தனர்.

    • போதிய தண்ணீர் இல்லாமல் மகசூல் குறைவு காரணமாக மா தென்னை விவசாயம் அழிவு பாதையில் சென்றது.
    • இடை பருவ காலத்தில் அறுவடை செய்யப்படும் மாங்காய்க்கு 5 முதல் 10 மடங்கு வரையில் அதிக விலை கிடைக்கிறது.

    மத்தூர்,

    தமிழகத்தில் மாங்காய் உற்பத்தியில் பெயர் பெற்ற மல்கோவா மாம்பழம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் தான் அதிக பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக போச்சம்பள்ளி பகுதியில் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மா சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக மழை இல்லாமல் நிலத்தடி நீர் மட்டம் குறைவு காரணமாக போதிய தண்ணீர் இல்லாமல் மகசூல் குறைவு காரணமாக மா தென்னை விவசாயம் அழிவு பாதையில் சென்றது.

    மேலும் குறைந்த அளவில் அறுவடை செய்யப்பட்ட மாங்காய்களை வெளி மாநிலங்களுக்கு விற்ப னைக்கு அனுப்பினாலும் போதிய வருவாய் இல்லாமல் மா சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கலக்கம் அடைந்து வருவது ஆண்டுதோறும் வாடிக்கையான ஒன்றாக இருந்தது. இதனால் பல ஆயிரம் ஏக்கர் மா தென்னை மரங்கள் வெட்டப்பட்டு செங்கல் சூளைகளுக்கு அடுப்பு எரிக்க அனுப்பி வைத்தனர்.

    இந்நிலையில் தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குறிப்பாக போச்சம்பள்ளி, காட்டுவான்ற ஹள்ளி, ஒட்டத்தெரு, மத்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் பல மடங்கு லாபம் தரும் இடை பருவ மா சாகுபடியில் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மா விளைச்சலில் ஆர்வம் காட்டி வருகின்றனர். பொதுவாக மா மரங்கள் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பூக்கத் தொடங்கும். இந்த பருவத்துக்குப் பதிலாக புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, மா பூக்காத பருவமான அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் பூக்கச் செய்து அதிக அளவில் மாங்காய் மகசூல் பெறுகின்றனர்.

    மாங்காய் பருவ காலத்தில் கிடைக்கும் வருவாயைக் காட்டிலும், இடை பருவ காலத்தில் கிடைக்கும் மகசூல் மூலம் பல மடங்கு வருவாய் ஈட்டி வருகின்றனர். இதுகுறித்து போச்சம்பள்ளியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரும் விவசாயிமான ஞனமூர்த்தி கூறுகையில்:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 8 ஆண்டுகளாக இடை பருவ மாங்காய் சாகுபடி செய்யப்பட்டு வருகிறோம். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்தத் தொழில்நுட்பம் மூலம் செந்தூரா, பெங்களூரா, அல்போன்சா போன்ற பழ ரகங்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. வழக்கமாக பருவ காலத்தில் அறுவடை செய்யப்படும் ஒரு டன் மா ரூ.7 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரையில் விற்கப்படுகிறது. அந்த மாங்காய்களை நாங்களாகவே பறித்து அதனை மாங்காய் மாங்கூழ் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு கொண்டு சென்று விற்பனை செய்ய வேண்டும். அவர்கள் சொல்லும் தொகைக்கு நாங்கள் கொடுத்து விட்டு வர வேண்டிய சூழல் இருந்தது. ஆனால் இந்த இடை பருவ காலத்தில் அறுவடை செய்யப்படும் மாங்காய்க்கு 5 முதல் 10 மடங்கு வரையில் அதிக விலை கிடைக்கிறது.

    அதிக பரப்பளவில் இடை பருவ கால மாங்காய் சாகுபடி செய்யப்ப டுவதால் வியாபாரிகள் நேரடியாக மா தோட்ட ங்களுக்கு வந்து கொள்முதல் செய்கின்றனர். இந்த இடை பருவ மாங்காய்களுக்கு அயல் நாடுகளில் தேவை அதிகம் இருப்பதாகவும், மாம்பழத்தை விரும்பி உண்பவர்களுக்கு ஆண்டு முழுவதும் மாம்பழம் ருசிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.

    இதுகுறித்து விவசாயி முகுந்தன் என்பவர் கூறுகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இடை பருவ மாங்காய் சாகுபடியை அதிகரிக்கும் வகையில் விவசாயி களிடம் புதிய தொழில்நுட்ப ங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் பயிற்சியும் வழங்க வேண்டு மெனவும், சொட்டுநீர்ப் பாசனம், சந்தை படுத்துதல் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு பூச்சி கொல்லி மருந்துகள், மற்றும் வேளாண் இடுபொருள் ஆகியவற்றை மானியத்தில் வழங்க

    வேண்டு

    மென வும் கோரிக்கை விடுத்துள்ளார்.

    • மனித உரிமைகள் தினத்தினை அனுசரிக்கும் விதமாக விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது.
    • கல்லூரி வளாகத்தில் தொடங்கி ராயக்கோட்டை சாலை வழியாக புதிய பஸ் நிலையத்தை அடைந்தது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்கொடுமை எதிர்ப்பு தினம் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை அனுசரிக்கும் விதமாக விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது.

    இதை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் வேண்டாம் என்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவிகள் ஏந்தி சென்றனர். இந்த ஊர்வலம் கல்லூரி வளாகத்தில் தொடங்கி ராயக்கோட்டை சாலை வழியாக புதிய பஸ் நிலையத்தை அடைந்தது.

    முன்னதாக கல்லூரி வளாகத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் நடந்தது.

    இதில் உதவி கலெக்டர் சதீஷ்குமார், மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலர் விஜயலட்சுமி, அரசு மகளிர் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) உமா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவகாந்தி, தாசில்தார் சம்பத், மாவட்ட குழந்தைகள் நல குழும தலைவர் கலைவாணி, ஒருங்கிணைந்த சேவை மைய ஊழியர்கள், கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • தனித்திறனை வெளிக்கொணரும் வகையில், தமிழக கலைத்திரு விழா நடைப்பெற்றது.
    • மேயர் எஸ்.ஏ.சத்யா கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர்.

    ஓசூர், 

    ஓசூர் காமராஜ் காலனியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறையின் வழிகாட்டுதலின்படி, மா ணவர்களை மென்மையான வர்களாகவும், உயிர்ப்புள்ள வர்களாகவும் மாற்றும் சக்திமிக்க பலதரப்பட்ட கலைவடிவங்களில், அவர்களது தனித்திறனை வெளிக்கொணரும் வகையில், தமிழக கலைத்திரு விழா நடைப்பெற்றது.

    இதில் மாணவியர்கள் கலந்து கொண்டு நாட்டியம், நடனம் ஆகிய பல்வேறு திறன்களை வெளிப்படுத்தினர்.

    இதையொட்டி நடைபெற்ற விழாவில், ஓசூர் எம்.எல்.ஏ.ஒய்.பிரகாஷ், மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர்.

    மேலும் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வென்ற மாணவியருக்கும் பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    துணை மேயர் ஆனந்தய்யா, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் எல்லோரா மணி, மாவட்ட கல்வி அலுவலர்கள் கோவிந்தராஜ், முனிராஜ் , ஒசூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் கஜேந்திர மூர்த்தி, பகுதி செயலாளர் ராமு, மாநகராட்சி கல்விக்குழு தலைவர் ஸ்ரீதரன், மாமன்ற உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், தலைமை ஆசிரியை லதா, ஆசிரிய, ஆசிரியைகள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்துவது, பொது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    • இந்த திட்டத்தை வேறு இடத்திற்கு மாற்றுமாறு வலியுறுத்தி உள்ளனர்.

    ஓசூர்,

    ஓசூர் அந்திவாடி விளையாட்டு மைதானம் அருகே, திடீரென எந்தவித முன் அறிவிப்பும் இன்றி, 1 ஏக்கர் பரப்பளவில் ஓசூர் மாநகராட்சி நிர்வாகம், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்துவது, பொது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை கைவிட வலியுறுத்தி, மாநகர 36-வது வார்டு அ.தி.மு.க. சார்பில், ஓசூர் மாநகர தெற்கு பகுதி செயலாளரும், முன்னாள் நகர்மன்ற உறுப்பினருமான பி.ஆர். வாசுதேவன் தலைமையில் பகுதி மக்கள் மற்றும் கட்சியினர் மாநகராட்சி ஆணையாளர் பால சுப்பிரமணியன் அலுவலகத்திலும், மற்றும் மாநகராட்சி செயற்பொறியாளர் ராஜேந்தி ரனிடம் மனு ஒன்றை வழங்கினர்.

    அதில்,இந்த திட்டத்தை வேறு இடத்திற்கு மாற்றுமாறு வலியுறுத்தி உள்ளனர். பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த வாசுதேவன், குடியிருப்பு பகுதிகள், அரசு பள்ளிகள், விளையாட்டு மைதானம் ஆகியவற்றுக்கு அருகில் திடக்கழிவு பிரிக்கும் கட்டிடம் அமைப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதனை, பொதுமக்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் நடை பயிற்சி யாளர்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம், மாற்று இடத்தில் அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார்.

    • அரசியல் சாசன தினம் மற்றும் சமூக நல்லிணக்க நாள் கொண்டாடப் பட்டது.
    • நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்றனர்.

    ஓசூர்,

    ஓசூர் அதியமான் கல்வி குழுமத்தை சேர்ந்த அதியமான் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சூளகிரி அருகே அத்திமுகத்தில் செயல்பட்டு வருகிறது.

    இங்கு அரசியல் சாசன தினம் மற்றும் சமூக நல்லிணக்க நாள் கொண்டாடப் பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் ஸ்ரீதரன் தலைமை தாங்கி, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் உருவாக்கம் மற்றும் முக்கியத்துவம் பற்றியும் இந்தியா ஒரு மத சார்பற்ற நாடு என்பதையும் வேற்றுமை யில் ஒற்றுமை பற்றியும் சிறப்புரையாற்றினார். கல்லூரி மேலாளர் சுப்ரமணி, நிர்வாக அலுவலர் விஜயேந்திரன் மற்றும் நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்றனர்.

    இதில் கலந்து கொண்ட கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர் அனைவரும் ஒன்றிணைந்து இந்திய அரசியலமைப்பு உறுதிமொழி ஏற்றனர். பின்னர், மாணவ மாணவியர்கள், இந்திய அரசியலமைப்பு மற்றும் சமூக நல்லிணக்கம் குறித்த பேச்சு, கவிதை, பாடல் மற்றும் நாடகத்தை அரங்கேற்றினர்.

    • கல்விப் பணிகளிலும் பல வகையானச் சேவைகளைச் செய்து வருகிறது.
    • ஐ.வி.டி.பி நிறுவனம் ரூ.23.24 லட்சம் வழங்கியுள்ளது எனவும் ஐ.வி.டி.பி நிறுவனத்தலைவர் தெரிவித்தார்.

    கிருஷ்ணகிரி,

    ஐ.வி.டி.பி தொண்டு நிறுவனம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் வாயிலாக மகளிர் மேம்பாட்டுப் பணிகளில் மட்டுமின்றி, சமூக அக்கறையோடு கல்விப் பணிகளிலும் பல வகையானச் சேவைகளைச் செய்து வருகிறது.

    அதன்படி கிருஷ்ணகிரி, புனித லூயிஸ் மருத்துவமனையில் செவிலியர் பயிற்சி பெறும் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் ஏழை எளிய மாணவிகளின் கல்வி பயன்பாட்டிற்காகவும், அவர்களுக்கு உதவிடும் பொருட்டும், அம்மருத்துவமனையில் பயிற்சி பெறும் 11 மாணவிகளுக்கு தலா ரூ.10,000-என மொத்தம் ரூ.1.1 லட்சம் கல்வி உதவித் தொகையை ஐ.வி.டி.பி-யின் நிறுவனத் தலைவர் ராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ் வழங்கி உதவினார்.

    மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையை வழங்கி பேசிய ஐ.வி.டி.பி நிறுவனத் தலைவர் செவிலியர் பயிற்சி பெறும் மாணவிகள் அர்ப்பணிப்பு உள்ளத்தோடும். சேவைமன ப்பான்மையோடும், மிகுந்தப் பொறுப்புணர்வோடும் பணியாற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

    மேலும் இதுவரை புனித லூயிஸ் மருத்துவமனையின் பல்வேறு மேம்பாட்டுப் பணிகளுக்காக ஐ.வி.டி.பி நிறுவனம் ரூ.23.24 லட்சம் வழங்கியுள்ளது எனவும் ஐ.வி.டி.பி நிறுவனத்தலைவர் தெரிவித்தார்.

    • ஓமில்ஹுக் மீது இரும்பு தகடு ஒன்று விழுந்தது.
    • செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    அசாம் மாநிலம் பிஜாபூர் பகுதியை சேர்ந்தவர் ஓமில்ஹுக் (வயது 18). இவர் ஓசூர் பகுதியில் தங்கி இரும்பு நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

    ஜூஜூவாடி - பேகைப்பள்ளி சாலையில் அமைந்துள்ள அந்த நிறுவனத்தில் ஓமில்ஹுக் நேற்று வேலை பார்த்த போது அவர் மீது இரும்பு தகடு ஒன்று விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவரை ஓசூர் அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர்.

    ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×