என் மலர்
உள்ளூர் செய்திகள்

விழாவில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.
ஓசூர் அதியமான் வேளாண்மைக் கல்லூரி ஆராய்ச்சி நிறுவனத்தில் அரசியல் சாசனம் மற்றும் சமூக நல்லிணக்க நாள் விழா
- அரசியல் சாசன தினம் மற்றும் சமூக நல்லிணக்க நாள் கொண்டாடப் பட்டது.
- நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்றனர்.
ஓசூர்,
ஓசூர் அதியமான் கல்வி குழுமத்தை சேர்ந்த அதியமான் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சூளகிரி அருகே அத்திமுகத்தில் செயல்பட்டு வருகிறது.
இங்கு அரசியல் சாசன தினம் மற்றும் சமூக நல்லிணக்க நாள் கொண்டாடப் பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் ஸ்ரீதரன் தலைமை தாங்கி, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் உருவாக்கம் மற்றும் முக்கியத்துவம் பற்றியும் இந்தியா ஒரு மத சார்பற்ற நாடு என்பதையும் வேற்றுமை யில் ஒற்றுமை பற்றியும் சிறப்புரையாற்றினார். கல்லூரி மேலாளர் சுப்ரமணி, நிர்வாக அலுவலர் விஜயேந்திரன் மற்றும் நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்றனர்.
இதில் கலந்து கொண்ட கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர் அனைவரும் ஒன்றிணைந்து இந்திய அரசியலமைப்பு உறுதிமொழி ஏற்றனர். பின்னர், மாணவ மாணவியர்கள், இந்திய அரசியலமைப்பு மற்றும் சமூக நல்லிணக்கம் குறித்த பேச்சு, கவிதை, பாடல் மற்றும் நாடகத்தை அரங்கேற்றினர்.






