என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில்  மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் பணி தீவிரம்
    X

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் பணி தீவிரம்

    • ஆதார் எண் இணைக்கும் பணி தொடங்கி வருகிற டிசம்பர் 31ந் தேதி வரை நடக்கிறது.
    • வீட்டை மாற்றும்போது புதிதாக குடியிருக்க வருவோர் தங்களது ஆதாரை இணைக்கலாம்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட மின் பகிர்மான அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி, ஓசூர் மின் பகிர்மான அலுவலகங்களின், 71 மையங்களில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் பணி தொடங்கி வருகிற டிசம்பர் 31&ந் தேதி வரை நடக்கிறது.

    அதன்படி கிருஷ்ணகிரி கோட்டத்தில் கிருஷ்ணகிரி மின்வாரிய அலுவலகத்தில் 8 மையங்கள், சூளகிரியில் 6, காவேரிப்பட்டணத்தில் 4 மையங்கள் உள்பட, 18 பிரிவு அலுவலகங்களில் இப்பணி தொடங்கி உள்ளது. அதேபோல போச்சம்பள்ளி மின் பகிர்மான வட்டத்தில் 19 மையங்கள், ஓசூர் மின் பகிர்மான வட்டத்தில் 34 மையங்களிலும் இப்பணி நடக்கிறது.

    இதில், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க, மின் இணைப்பு எண்ணுடன், நுகர்வோர் தங்கள் மொபைல் எண்ணை வழங்க வேண்டும். வீட்டில் உரிமையாளர் தங்கள் மின் இணைப்புடன் ஆதார் எண் மற்றும் அவர்களது மொபைல் எண்ணை இணைக்க வேண்டும்.

    ஒருவர் எத்தனை வீடுகள் வைத்திருப்பினும், அத்தனை இணைப்புகளுக்கும் அவர்களது ஆதார் எண்ணையே பயன்படுத்தி கொள்ளலாம். வீட்டு உரிமையாளர் அனுமதியுடன், வாடகை வீட்டில் உள்ளவர், அவரது எண்ணையும் பதிவு செய்து கொள்ளலாம். வாடகைதாரர் வீட்டை மாற்றும்போது புதிதாக குடியிருக்க வருவோர் தங்களது ஆதாரை இணைக்கலாம்.

    ஆதார் எண்ணை இணைக்க விட்டாலும் மின்வாரிய அலுவலகங்களில் மின் கட்டணம் தொடர்ந்து செலுத்தலாம். ஆனால் ஆன்லைனில் மின்கட்டணம் செலுத்த முடியாது. மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வருபவர்கள் வேலை நாட்களில் காலை, 9:30 மணி முதல் மாலை, 5:15 வரை தங்களது விவரங்களை வழங்கலாம். மொபைல் எண்ணிற்கு ஓ.டி.பி.,எண் வருவதில் சிரமம் இருப்பினும் பதிவு செய்யும் பணியில் பாதிப்பிருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×