search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரியில்  பெண்களுக்கு எதிரான வன்கொடுமை எதிர்ப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம்
    X

    கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்கொடுமை எதிர்ப்பு தினம் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    கிருஷ்ணகிரியில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை எதிர்ப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம்

    • மனித உரிமைகள் தினத்தினை அனுசரிக்கும் விதமாக விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது.
    • கல்லூரி வளாகத்தில் தொடங்கி ராயக்கோட்டை சாலை வழியாக புதிய பஸ் நிலையத்தை அடைந்தது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்கொடுமை எதிர்ப்பு தினம் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை அனுசரிக்கும் விதமாக விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது.

    இதை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் வேண்டாம் என்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவிகள் ஏந்தி சென்றனர். இந்த ஊர்வலம் கல்லூரி வளாகத்தில் தொடங்கி ராயக்கோட்டை சாலை வழியாக புதிய பஸ் நிலையத்தை அடைந்தது.

    முன்னதாக கல்லூரி வளாகத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் நடந்தது.

    இதில் உதவி கலெக்டர் சதீஷ்குமார், மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலர் விஜயலட்சுமி, அரசு மகளிர் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) உமா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவகாந்தி, தாசில்தார் சம்பத், மாவட்ட குழந்தைகள் நல குழும தலைவர் கலைவாணி, ஒருங்கிணைந்த சேவை மைய ஊழியர்கள், கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×