என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போச்சம்பள்ளி பகுதியில்  இடை பருவ மா சாகுபடியில் ஆர்வம் காட்டி வரும் விவசாயிகள்
    X

    போச்சம்பள்ளி அருகே உள்ள காட்டு வென்றஹள்ளி பகுதியில் இடை பருவ மா விளைச்சல் செய்து வரும் விவசாயி ஒருவரின் மாந்தோட்டம்.

    போச்சம்பள்ளி பகுதியில் இடை பருவ மா சாகுபடியில் ஆர்வம் காட்டி வரும் விவசாயிகள்

    • போதிய தண்ணீர் இல்லாமல் மகசூல் குறைவு காரணமாக மா தென்னை விவசாயம் அழிவு பாதையில் சென்றது.
    • இடை பருவ காலத்தில் அறுவடை செய்யப்படும் மாங்காய்க்கு 5 முதல் 10 மடங்கு வரையில் அதிக விலை கிடைக்கிறது.

    மத்தூர்,

    தமிழகத்தில் மாங்காய் உற்பத்தியில் பெயர் பெற்ற மல்கோவா மாம்பழம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் தான் அதிக பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக போச்சம்பள்ளி பகுதியில் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மா சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக மழை இல்லாமல் நிலத்தடி நீர் மட்டம் குறைவு காரணமாக போதிய தண்ணீர் இல்லாமல் மகசூல் குறைவு காரணமாக மா தென்னை விவசாயம் அழிவு பாதையில் சென்றது.

    மேலும் குறைந்த அளவில் அறுவடை செய்யப்பட்ட மாங்காய்களை வெளி மாநிலங்களுக்கு விற்ப னைக்கு அனுப்பினாலும் போதிய வருவாய் இல்லாமல் மா சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கலக்கம் அடைந்து வருவது ஆண்டுதோறும் வாடிக்கையான ஒன்றாக இருந்தது. இதனால் பல ஆயிரம் ஏக்கர் மா தென்னை மரங்கள் வெட்டப்பட்டு செங்கல் சூளைகளுக்கு அடுப்பு எரிக்க அனுப்பி வைத்தனர்.

    இந்நிலையில் தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குறிப்பாக போச்சம்பள்ளி, காட்டுவான்ற ஹள்ளி, ஒட்டத்தெரு, மத்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் பல மடங்கு லாபம் தரும் இடை பருவ மா சாகுபடியில் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மா விளைச்சலில் ஆர்வம் காட்டி வருகின்றனர். பொதுவாக மா மரங்கள் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பூக்கத் தொடங்கும். இந்த பருவத்துக்குப் பதிலாக புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, மா பூக்காத பருவமான அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் பூக்கச் செய்து அதிக அளவில் மாங்காய் மகசூல் பெறுகின்றனர்.

    மாங்காய் பருவ காலத்தில் கிடைக்கும் வருவாயைக் காட்டிலும், இடை பருவ காலத்தில் கிடைக்கும் மகசூல் மூலம் பல மடங்கு வருவாய் ஈட்டி வருகின்றனர். இதுகுறித்து போச்சம்பள்ளியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரும் விவசாயிமான ஞனமூர்த்தி கூறுகையில்:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 8 ஆண்டுகளாக இடை பருவ மாங்காய் சாகுபடி செய்யப்பட்டு வருகிறோம். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்தத் தொழில்நுட்பம் மூலம் செந்தூரா, பெங்களூரா, அல்போன்சா போன்ற பழ ரகங்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. வழக்கமாக பருவ காலத்தில் அறுவடை செய்யப்படும் ஒரு டன் மா ரூ.7 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரையில் விற்கப்படுகிறது. அந்த மாங்காய்களை நாங்களாகவே பறித்து அதனை மாங்காய் மாங்கூழ் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு கொண்டு சென்று விற்பனை செய்ய வேண்டும். அவர்கள் சொல்லும் தொகைக்கு நாங்கள் கொடுத்து விட்டு வர வேண்டிய சூழல் இருந்தது. ஆனால் இந்த இடை பருவ காலத்தில் அறுவடை செய்யப்படும் மாங்காய்க்கு 5 முதல் 10 மடங்கு வரையில் அதிக விலை கிடைக்கிறது.

    அதிக பரப்பளவில் இடை பருவ கால மாங்காய் சாகுபடி செய்யப்ப டுவதால் வியாபாரிகள் நேரடியாக மா தோட்ட ங்களுக்கு வந்து கொள்முதல் செய்கின்றனர். இந்த இடை பருவ மாங்காய்களுக்கு அயல் நாடுகளில் தேவை அதிகம் இருப்பதாகவும், மாம்பழத்தை விரும்பி உண்பவர்களுக்கு ஆண்டு முழுவதும் மாம்பழம் ருசிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.

    இதுகுறித்து விவசாயி முகுந்தன் என்பவர் கூறுகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இடை பருவ மாங்காய் சாகுபடியை அதிகரிக்கும் வகையில் விவசாயி களிடம் புதிய தொழில்நுட்ப ங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் பயிற்சியும் வழங்க வேண்டு மெனவும், சொட்டுநீர்ப் பாசனம், சந்தை படுத்துதல் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு பூச்சி கொல்லி மருந்துகள், மற்றும் வேளாண் இடுபொருள் ஆகியவற்றை மானியத்தில் வழங்க

    வேண்டு

    மென வும் கோரிக்கை விடுத்துள்ளார்.

    Next Story
    ×