என் மலர்
நீங்கள் தேடியது "கோவிலில் திருடிய ஆசாமி"
- மர்ம ஆசாமி உண்டியலை உடைத்து அதில் இருந்த பணம், அம்மன் கழுத்தில் இருந்த நகை முதலியவற்றை திருடினான்.
- அந்த திருடனை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டணம் அருகே யுள்ள மலையாண்ட அள்ளிபுதூர் பகுதியில் அங்காளம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் கோவிலின் கமிட்டி மெம்பராக இருப்பவர் முனியப்பன் (வயது 54).
சம்பவத்தன்று இந்த கோவிலில் புகுந்த மர்ம ஆசாமி உண்டியலை உடைத்து அதில் இருந்த பணம், அம்மன் கழுத்தில் இருந்த நகை முதலியவற்றை திருடினான்.
ஆனால் முனியப்பன், அந்த பகுதியில் இருந்தவர்களும் சேர்ந்து அந்த திருடனை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
காவேரிபட்டணம் போலீசார் அந்த ஆசாமியை விசாரித்தபோது அதே பகுதியை சேர்ந்த சின்னசாமி மகன் சதீஷ்குமார் (22) என்பதும், இதேபோல 6-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகளில் தொடர்பு உள்ளதும் தெரியவந்தது.
சதீஷ்குமாரை கைது செய்த போலீசார் அவனிடம் இருந்து பணம்,நகையை மீட்டனர்.






