என் மலர்
கிருஷ்ணகிரி
- ரூ.90 லட்சம் மானியம் வழங்கப்படுவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
- வயது வரம்பு 18-65 வயதிற்குள்ளாக இருக்க வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தாட்கோ திட்டம் மூலம் 100 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில்முனைவோருக்கு தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் விற்பனை முகவராக ரூ.3 கோடி மதிப்பீட்டில் சிமெண்ட் விற்பனை நிலையம் அமைக்க ரூ.90 லட்சம் மானியம் வழங்கப்படுவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்த 2 நபர்களுக்கு ரூ.1.80 லட்சம் மானியம் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்த 1 நபருக்கு ரூ.90 ஆயிரம் மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி, விண்ணப்பதாரர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பை சார்ந்தவராக இருக்க வேண்டும். வயது வரம்பு 18-65 வயதிற்குள்ளாக இருக்க வேண்டும்.
ஜி.எஸ்.டி, பான் கார்டு, இருப்பிடச் சான்று இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் மற்றும் அவர் குடும்பத்தினர் தாட்கோ திட்டத்தின் கீழ இதுவரை மானியம் எதுவும் பெற்றிருக்க கூடாது. தாட்கோவின் மாவட்ட அளவிலான தேர்வு குழு மூலம் தேர்வு செய்யப்பட்ட பின் சிமெண்ட் முகவருக்கான விண்ணப்பங்கள் டான்செம் நிறுவனம் மூலம் பெற்று வழங்கப்படும்.
விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து, தேர்வு குழு மூலம் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரருக்கு தாட்கோ மூலம் ரூ.5 ஆயிரம் வைப்புத்தொகை டான்செம் நிறுவனத்திற்கு செலுத்தப்படும்.
கூடுதல் செலவினத்தை ஈடுசெய்ய மற்றும் அதிகபட்ச மானியத்தொகை சென்டைய ஆதிதிராவிட தனி நபர்களுக்ககன திட்டத் தொகையில் 30 சதவீதம் அல்லது அதிகப்பட்சமாக ரூ.2.25 லட்சம் மானியமும், பழங்குடியினர் தனி நபர்களுக்கான திட்டத்தொகையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.3.75 லட்சம் மானியம் விடுவிக்கப்படும்.
எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வசிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தி.மு.க. அலுவலகத்தில், பெரியார் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
- பெரியார் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில், பெரியார் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு நகர தி.மு.க. செயலாளர் நவாப் தலைமை வகித்து, பெரியார் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவரும், மாவட்ட தி.மு.க. மகளிர் அணி அமைப்பாளருமான பரிதாநவாப், நகர்மன்ற துணைத் தலைவரும், மாவட்ட துணை செயலாளருமான சாவித்திரி கடலரசுமூர்த்தி, மாவட்ட துணை செயலாளர் கோவிந்தசாமி, மற்றும் நிர்வாகிகள் பொன்.குணசேகரன், கனல் சுப்பிரமணி, தளபதி கோபிநாத், முருகேசன், ஜான்டேவிட், விஜய்ராஜசேகர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று பெரியார் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
- எம்.ஜி.ஆர்.நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது.
- மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் அ.தி.மு.க. ஓ.பன்னீர்செல்வம் சார்பில் எம்.ஜி.ஆர்.நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது.
இதையொட்டி கிருஷ்ணகிரி 5 ரோடுரவுண்டானா அருகில் உள்ள கட்சி அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். படத்திற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கோவிந்தராஜ் தலைமை தாங்கி, மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதில் மாவட்ட அவைத் தலைவர் ஸ்ரீராமுலு, பொருளாளர் வெங்கடேசப்பா, நகரசெயலாளர் செல்வம், பொதுக்குழு உறுப்பினர்கள் சகாதேவன், ராமு,நாகரத்தினம், ஒன்றிய செயலளர்கள் முனியப்பன், கோவிந்தராஜ், ஆறுமுகம்,பிரேம்குமார், வடிவேல், தாமோதரன், நாகராஜ், ஜெயலலிதா பேரவை நிர்வாகி ராதாகார்த்திக், மாவட்ட சார்பு அமைப்பு செயலாளர்கள், இளைஞர் அணி மணிகண்டன்,மாணவர் அணி மோகன், அண்ணா தொழிற்சங்க பாபு, கணேசன், சரவணன், பாக்கியராஜ்,ராமசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உடலில் கல்லை கட்டி ஊத்தங்கரை பாரதிபுரத்தில் உள்ள ஒரு பாழடைந்த கிணற்றில் வீசியதாக கூறினர்.
- செந்தில்குமாரின் மனைவியான போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சித்ராவிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 48). போலீஸ் ஏட்டாக வேலை பார்த்து புகாருக்குள்ளாகி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இவர் கடந்த செப்டம்பர் மாதம் 16-ந் தேதி திடீரென மாயமானார். இதுகுறித்து செந்தில்குமாரின் தாயார் கல்லாவி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது செந்தில்குமாரின் மகன் ஜெகதீஷ்குமார் (19), பாவக்கல்லை சேர்ந்த கமல்ராஜ் (37) ஆகிய 2 பேரின் செல்போன்களும், செந்தில்குமாரின் செல்போனும் ஒரே இடத்தில் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரிடமும் கடந்த 13-ந்தேதி போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்தநிலையில் அவர்கள் 2 பேரும், செந்தில்குமாரை கொலை செய்து தென்பெண்ணை ஆற்றில் உடலை வீசியதாக கூறி கிருஷ்ணகிரி கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
இதையடுத்து அவர்கள் 2 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்க ப்பட்டனர்.
இதனிடையே போலீஸ் ஏட்டு கொலை தொடர்பாக சிறையில் இருந்த ஜெகதீஷ்குமார், கமல்ராஜ் ஆகிய 2 பேரையும் ஊத்தங்கரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.
அப்போது ஏட்டு செந்தில்குமாரை அவர்கள் 2 பேரும் கொலை செய்து உடலில் கல்லை கட்டி ஊத்தங்கரை பாரதிபுரத்தில் உள்ள ஒரு பாழடைந்த கிணற்றில் வீசியதாக கூறினர்.
இதையடுத்து நேற்று போலீசார் அங்கு சென்று அழுகிய நிலையில் இருந்த செந்தில்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
இந்நிலையில் இந்த கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் செந்தில்குமாரின் மனைவியான போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சித்ராவிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியாகுமென்று தெரிகிறது.
கடந்த செப்டம்பர் மாதம் மாயமானதாக புகார் தரப்பட்ட நிலையில் 100 நாட்களுக்குப்பிறகு போலீஸ் ஏட்டு உடல் மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் செயல்பட்டதால் போலீசார் அவரை கைது செய்தனர்.
- கைதான ரவுடிகள் 3 பேர் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் சரக பகுதியில் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியை அடுத்த அத்தி பெரமனூர் பகுதியை சேர்ந்த ஆகாஷ் (எ) சுல்லா (வயது 22) என்பவர் பொதுமக்களுக்கு இடையூறாகவும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் செயல்பட்டதால் போலீசார் அவரை கைது செய்தனர்.
இதே போல ஒசூர் சிப்காட் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாகவும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் செயல்பட்டதால் அதே அதே பகுதியை சேர்ந்த சாதிக் (24), அஜய்குமார் (21) ஆகியோரை ஓசூர் சிப்காட் போலீசார் கைது செய்தனர்.
கைதான ரவுடிகள் 3 பேர் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- திருமணத்துக்கு பிறகு சத்யாவை ஆதிக் துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
- கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகேயுள்ள தடிக்கல் பகுதியை சேர்ந்தவர் ஆதிக் (வயது 30).
இவர் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு சத்யா (23) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையுள்ளது.
இந்நிலையில் திருமணத்துக்கு பிறகு சத்யாவை ஆதிக் துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று இதேபோல சத்யாவிடம் தகராறில் ஈடுபட்ட ஆதிக் அவரை தாக்கி கத்தியால் குத்தியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த சத்யா தேன்கனிகோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தன்னை கத்தியால் குத்தி காயப்படுத்தியது தொடர்பாக ஆதிக் மீது கெலமங்கலம் போலீசில் சத்யா புகார் செய்துள்ளார்.
புகாரின் பேரில் ஆதிக் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- ரூ.11,000-க்கு தேங்காய் நார் வாங்கியுள்ளார். அந்த பணத்தை தருவதற்கு தாமதம் செய்து வந்துள்ளார்.
- 5 பவுன் தங்க சங்கிலி மற்றும் முனிராஜ் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறித்துச்சென்று விட்டதாக கூறப்படுகிறது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டணம் அருகேயுள்ள கருக்கஞ்சாவடி பகுதியை சேர்ந்தவர் முனிரத்தினம் (வயது 50). இவர் தேங்காய் நார் வியாபாரம் செய்து வருகிறார்.
இவரிடம் பொம்மசமுத்திரம் பகுதியை சேர்ந்த முனிராஜ் (48) என்ற விவசாயி ரூ.11,000-க்கு தேங்காய் நார் வாங்கியுள்ளார். அந்த பணத்தை தருவதற்கு தாமதம் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இருசக்கரவாகனத்தில் சென்று கொண்டிருந்த முனிராஜை வழிமறித்த முனிரத்தினம் மற்றும் அவரது கூட்டாளிகள் 2 பேர் சேர்ந்து தாக்கி முனிராஜ் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலி மற்றும் முனிராஜ் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறித்துச்சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து முனிராஜ் தந்த புகாரின் பேரில் காவேரிபட்டணம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- வீட்டைவிட்டு சென்ற தாட்சாயிணி அதன்பிறகு வீடு திரும்பவில்லை.
- மனைவியைக் கடத்தி சென்று விட்டதாக தளி போலீசில் சீனிவாசன் புகார் செய்துள்ளார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகேயுள்ள கெம்பட்டியை சேர்ந்தவர் சீனிவாசன்.
இவரது மனைவி தாட்சா யினி (வயது 32).சம்பவத்தன்று வீட்டைவிட்டு சென்ற தாட்சாயிணி அதன்பிறகு வீடு திரும்பவில்லை.
பல்வேறு இடங்களில் விசாரித்தும் அவர் குறித்து எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (42) என்பவர் தனது மனைவியைக் கடத்தி சென்று விட்டதாக தளி போலீசில் சீனிவாசன் புகார் செய்துள்ளார்.
இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதேபோல பாகலூர் அருகேயுள்ள ஆத்தூர் பகுதியை சேர்ந்த சீனப்பா என்பவரது மகள் பாரதி (23) என்பவரும் திடீரென மாயமாகி விட்டார்.
இந்நிலையில் அவரை திருப்பத்தூர் மாவட்டத்தைசேர்ந்த பிரதாப்(24) என்ற வாலிபர் கடத்தி சென்றுவிட்டதாக பாகலூர் போலீசால் சீனப்பா புகார் செய்தார்.
இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து மாயமான பாரதியைத் தேடி வருகின்றனர்.
- மின்வேலிக்கு அருகேயுள்ள கம்பத்திலிருந்து திருட்டுத்தனமாக மின் இணைப்பு கொடுப்பதற்காக கொக்கி போட்டுள்ளார்.
- பன்றியை பிடிக்க மின்வேலி அமைத்த வாலிபர் தானே மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகேயுள்ள கொல்லப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 30). இவர் சாமல்பட்டி அருகேயுள்ள மாந்தோப்பு பகுதியில் காட்டு பன்றியை வேட்டையாட இன்று சென்றுள்ளார்.
அங்கு பன்றிகளை பிடிப்பதற்காக மின்வேலி அமைத்துள்ளார். இந்நிலையில் அந்த மின்வேலிக்கு அருகேயுள்ள கம்பத்திலிருந்து திருட்டுத்தனமாக மின் இணைப்பு கொடுப்பதற்காக கொக்கி போட்டுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக ரஞ்சித்குமார் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே உடல் கருகி ரஞ்சித்குமார் உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சாமல்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ரஞ்சித்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பன்றியை பிடிக்க மின்வேலி அமைத்த வாலிபர் தானே மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- அடையாளம் தெரியாத ஆண் நபர் ஒருவர் நடந்து சென்றதாக கூறப்படுகிறது.
- தூக்கி வீசப்பட்ட நபர் தலையில் காயம் அடைந்ததில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தொப்பூர்,
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளியை அடுத்த தருமபுரி சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கெங்களாபுரம் பகுதி சாலை ஓரமாக இன்று அதிகாலை 46 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் நபர் ஒருவர் நடந்து சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அவ்வழியாக சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த அடையாளம் தெரியாத கார் ஒன்று அவர் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்ட நபர் தலையில் காயம் அடைந்ததில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தாமல் சென்று விட்டதால் விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்தும் தகவல் தெரியவில்லை.
இது குறித்து தகவல் அறிந்து வந்த தொப்பூர் போலீசார் உயிரிழந்த நபரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் உயிரிழந்த அடையாளம் தெரியாத நபர் குறித்தும், விபத்தை ஏற்படுத்திய அடையாளம் தெரியாத கார் குறித்தும் விசாரணை செய்து வருகின்றனர்.
- குமாரின் கணக்கிலிருந்து ரூ.8.3 லட்சம் வரை அனுப்பி வைத்துள்ளார்.
- ஆனால் குமாருக்கு எந்த பரிசு பொருளும் வரவில்லை.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பண்ணிஹல்லி புதூர் பகுதியை சேர்ந்தவர் வேடி. இவரது மகன் குமார் (வயது 40).
கடந்த பிப்ரவரி மாதம் குமாரின் செல்போனுக்கு ஒரு மர்ம அழைப்பு வந்தது. பின்னர் அதில் பேசிய நபர் அடிக்கடி குமாரிடம் பேசி நண்பராகமாறியுள்ளார்.
இதையயடுத்து வெளிநாட்டிலிருந்து குமாரின் பிறந்தநாளுக்காக விலையுயர்ந்த பரிசு ஒன்றை வரவழைத்துள்ளதாக கூறியுள்ளார்.
இந்த பரிசு பொருளை இந்தியாவுக்கு கொண்டுவர வரி கட்டவேண்டும் என்று கூறி குமாரிடம் இருந்து பணம் பெற்றுள்ளார்.இவ்வாறு வெவ்வேறு வகைகளில் குமாரின் கணக்கிலிருந்து ரூ.8.3 லட்சம் வரை அனுப்பி வைத்துள்ளார்.ஆனால் குமாருக்கு எந்த பரிசு பொருளும் வரவில்லை.
அதுவரை தொடர்பில் இருந்த மர்ம ஆசாமி அதன்பிறகு பேசவில்லை இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் குமார் புகார் செய்தார்.
போலீசார் வழக்கு பதிவு பணத்தை சுருட்டிய மர்ம ஆசாமியைத்தேடி வருகின்றனர்.
- கலைக்குழு மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட்டது.
- வேட்டை தடுப்பு காவலர்கள், வனத்துறை ஊழியர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் வனத்துறை சார்பில் காடுகளை பாதுகாக்கவும், வனவிலங்குகளை பாதுகாக்க வேண் டும், கள்ளத்துப்பாக்கி களை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கலைக்குழு மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட்டது.
கலைக்குழுவினர் ஒயிலாட்டம், கரகாட்டம் மற்றும் நாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தேன்கனிக்கோட்டை பஸ் நிலையத்தில் வனத்துறை சார்பில், வனவிலங்கு பாதுகாப்பு குறித்து கலைக்குழு மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் வனச்சரகர் முருகேசன் தலைமை வகித்தார். வனவர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள், வனத்துறை ஊழியர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.






