விவசாயியை தாக்கி 5 பவுன் சங்கிலி பறிப்பு

ரூ.11,000-க்கு தேங்காய் நார் வாங்கியுள்ளார். அந்த பணத்தை தருவதற்கு தாமதம் செய்து வந்துள்ளார்.5 பவுன் தங்க சங்கிலி மற்றும் முனிராஜ் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறித்துச்சென்று விட்டதாக கூறப்படுகிறது.
விவசாயியை தாக்கி 5 பவுன் சங்கிலி பறிப்பு
Published on

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டணம் அருகேயுள்ள கருக்கஞ்சாவடி பகுதியை சேர்ந்தவர் முனிரத்தினம் (வயது 50). இவர் தேங்காய் நார் வியாபாரம் செய்து வருகிறார்.

இவரிடம் பொம்மசமுத்திரம் பகுதியை சேர்ந்த முனிராஜ் (48) என்ற விவசாயி ரூ.11,000-க்கு தேங்காய் நார் வாங்கியுள்ளார். அந்த பணத்தை தருவதற்கு தாமதம் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இருசக்கரவாகனத்தில் சென்று கொண்டிருந்த முனிராஜை வழிமறித்த முனிரத்தினம் மற்றும் அவரது கூட்டாளிகள் 2 பேர் சேர்ந்து தாக்கி முனிராஜ் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலி மற்றும் முனிராஜ் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறித்துச்சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து முனிராஜ் தந்த புகாரின் பேரில் காவேரிபட்டணம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com