என் மலர்
உள்ளூர் செய்திகள்

கார் மோதி இறந்தவர்
கார் மோதி அடையாளம் தெரியாத நபர் பலி
- அடையாளம் தெரியாத ஆண் நபர் ஒருவர் நடந்து சென்றதாக கூறப்படுகிறது.
- தூக்கி வீசப்பட்ட நபர் தலையில் காயம் அடைந்ததில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தொப்பூர்,
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளியை அடுத்த தருமபுரி சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கெங்களாபுரம் பகுதி சாலை ஓரமாக இன்று அதிகாலை 46 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் நபர் ஒருவர் நடந்து சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அவ்வழியாக சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த அடையாளம் தெரியாத கார் ஒன்று அவர் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்ட நபர் தலையில் காயம் அடைந்ததில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தாமல் சென்று விட்டதால் விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்தும் தகவல் தெரியவில்லை.
இது குறித்து தகவல் அறிந்து வந்த தொப்பூர் போலீசார் உயிரிழந்த நபரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் உயிரிழந்த அடையாளம் தெரியாத நபர் குறித்தும், விபத்தை ஏற்படுத்திய அடையாளம் தெரியாத கார் குறித்தும் விசாரணை செய்து வருகின்றனர்.






