என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரி அருகே  3 ரவுடிகள் கைது
    X

    கிருஷ்ணகிரி அருகே 3 ரவுடிகள் கைது

    • அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் செயல்பட்டதால் போலீசார் அவரை கைது செய்தனர்.
    • கைதான ரவுடிகள் 3 பேர் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் சரக பகுதியில் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியை அடுத்த அத்தி பெரமனூர் பகுதியை சேர்ந்த ஆகாஷ் (எ) சுல்லா (வயது 22) என்பவர் பொதுமக்களுக்கு இடையூறாகவும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் செயல்பட்டதால் போலீசார் அவரை கைது செய்தனர்.

    இதே போல ஒசூர் சிப்காட் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாகவும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் செயல்பட்டதால் அதே அதே பகுதியை சேர்ந்த சாதிக் (24), அஜய்குமார் (21) ஆகியோரை ஓசூர் சிப்காட் போலீசார் கைது செய்தனர்.

    கைதான ரவுடிகள் 3 பேர் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×