என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • பிப்ரவரி மாதம் வரை நேரடி சேர்க்கை நடைபெறுகிறது.
    • வேலை தேடும் இளைஞர்கள் மற்றும் மகளிர் ஆகியோர் விண்ணப்பிக்கலாம்.

    கிருஷ்ணகிரி, 

    ஓசூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஓசூர் அரசினர் தொழி ற்பயிற்சி நிலையத்தில், சி.என்.சி. ஆப்ரேட்டர் டர்னிங், வெர்டிகல் மெஷினிங் சென்ட்ர், மெனுவல் மெட்டல் ஆர்க் வெட்டிங், ஷீல்டடு மெட்டல் ஆர்க் வெல்டிங் மற்றும் பீல்டு டெக்னீஷியன், யுபிஎஸ்

    மற்றும் இன்வெர்டர் குறுகிய கால பயிற்சி அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் 240 காலி இடங்களுக்கு வருகிற பிப்ரவரி மாதம் வரை நேரடி சேர்க்கை நடைபெறுகிறது.

    இதில் சேர 18 வயது முதல் 45 வயதுக்குட்பட்ட 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்றவர்கள், வேலை தேடும் இளைஞர்கள் மற்றும் மகளிர் ஆகியோர் விண்ணப்பிக்கலாம்.

    8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மெனுவல் மெட்டல் ஆர்க் வெல்டிங், ஷீல்டடு மெட்டல் ஆர்க் வெல்டிங், பீல்டு டெக்னீஷியன் - யு.பி.எஸ். மற்றும் இன்வெர்டர், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் சி.என்.சி. ஆப்ரேட்டர் டர்னிங், சி.என்.சி. ஆப்ரேட்டர் வெர்டிகல் மெஷினிங் சென்டர் ஆகிய பிரிவுகளில் சேர தகுதியுடையவர்கள் ஆவார்கள். பயிற்சி காலம் 3 மாதங்கள் ஆகும். பயிற்சி முடித்த அனைவருக்கும் நிறுவனங்களில் உடனடியாக வேலைவா ய்ப்பு உறுதி செய்யப்படும். பயிற்சியின் முடிவில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் திறன் சான்றிதழ் வழங்கப்படும்.

    எனவே, தகுதியுள்ள அனைத்து மாணவ, மாணவிகளும் ஓசூர் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் சேர்ந்து பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கைப்பந்து விளையாடும் போது தகராறு ஏற்பட்டுள்ளது.
    • சாட்சிகளை மறைக்க முயன்ற குற்றத்திற்காக ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்.

    மத்தூர், ஜன.25-

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்த மாடரஅள்ளி அண்ணா நகரை சேர்ந்தவர் வல்லரசு (வயது 18). கூலித்தொழிலாளி.

    இவரது அக்கா கணவர் வெங்கடேசன் (32). கார் டிரைவர். இவர்கள் இருவருக்கும் கடந்த 21.12.2018 அன்று மாடரஅள்ளி அருகே கைப்பந்து விளையாடும் போது தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதில், ஆத்திரமடைந்த வெங்கடேசன், வல்லரசை கத்தியால் குத்தினார். படுகாயமடைந்த வல்லரசு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் கடந்த 25.12.2018 அன்று இறந்தார்.

    இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி வெங்கடேசனை மத்தூர் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு கிருஷ்ணகிரி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

    இ்ந்த வழக்கு முடிவடைந்து நேற்று நீதிபதி தாமோதரன் தீர்ப்பு கூறினார். அதன்படி குற்றம் சாட்டப்பட்ட வெங்கடேசனுக்கு ஆயுள் தண்டனை, சாட்சிகளை மறைக்க முயன்ற குற்றத்திற்காக ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்.

    இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் குமரவேல் ஆஜரானார்.

    • அரசின் முதன்மை செயலாளருமான டாக்டர் பீலா ராஜேஷ் தலைமை தாங்கினார்.
    • இருப்பு பதிவேடு, நோயாளிகளின் வருகைப்பதிவேடு உள்ளிட்ட பதிவேடுகளை ஆய்வு செய்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், அரசின் முன்னோடித் திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்த கூட்டம்நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், அரசின் முதன்மை செயலாளருமான டாக்டர் பீலா ராஜேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி முன்னிலை வகித்தார்.

    இது குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பீலா ராஜேஷ் கூறியதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், சமத்துவபுரம் வீடுகள் புனரமைப்பு பணிகள், ஜல் ஜீவன் மிஷன், மாநகராட்சி, நகராட்சியில் சுவட்ச் பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் சுகாதாரப் பணிகள் மற்றும் தூய்மைப் திட்ட பணிகள், அம்ருத் திட்டம், 15வது நிதிக்குழு திட்டப்பணிகள் உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    மேலும், நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக மாவட்ட கண்காணிப்பு அலுவலர், காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திடீர் ஆய்வு செய்தார்.

    மேலும், நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து கிருஷ்ணகிரி நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு, மருந்து, மாத்திரைகளின் இருப்பு பதிவேடு, நோயாளிகளின் வருகைப்பதிவேடு உள்ளிட்ட பதிவேடுகளை ஆய்வு செய்தார்.

    • கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஏ.ஐ.டி.யு.சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    ஓசூர்,

    ஓசூரில், ஏ.ஐ.டி.யு.சி கிருஷ்ணகிரி மாவட்டக்குழு சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஓசூர் எம்.ஜி.ரோடில் உள்ள காந்தி சிலையருகே நடந்த ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிக்கு, ஏ.ஐ.டி.யு.சி மாவட்ட தலைவரும், தளி எம்.எல்.ஏ.வுமான டி.ராமச்சந்திரன் தலைமை தாங்கி, கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

    மாநில விவசாய சங்க துணைத்தலைவர் எம்.லகுமய்யா, ஏ.ஐ.டி.யு.சி.மாவட்ட செயலாளர் மாதையன் உள்பட பலர் பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில், ஏ.ஐ.டி.யு.சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தின்போது நலவாரிய பதிவுகளை எளிமைப்படுத்தி நிதிப்பலன்களை உயர்த்த வேண்டும், 240 நாட்கள் பணிபுரிந்த தொழிலாளியை நிரந்தரம் செய்ய வேண்டும், ரூ.6,000-க்கும் குறையாத ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

    • பயிர் அறுவடை எந்திரத்தின் மூலம் ராகி அறுவடை செயல் விளக்கம் நடைபெற்றது.
    • ஒரு மணி நேரத்திற்கு ரூ. 1,160/- என அரசு வாடகையாக நிர்ணயித்துள்ளது.

     சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா ஏ. செட்டிபள்ளி பஞ்சாயத்திற்குட்பட்ட கொர குருக்கி கிராமத்தில் வேளாண்மை மற்றும் வேளாண்மை பொறியியல் துறையின் சார்பாக ஒருங்கிணைந்த பயிர் அறுவடை எந்திரத்தின் மூலம் ராகி அறுவடை செயல் விளக்கம் நடைபெற்றது.

    இந்த எந்திரம் ராகி, உளுந்து, பாசி பயறு அறுவடை செய்ய ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அறுவடை செய்ய, ஒரு மணி நேரத்திற்கு ரூ. 1,160/- என அரசு வாடகையாக நிர்ணயித்துள்ளது.

    மேற்படி விவசாயிகள் வாடகை தொகையினை உழவன் செயலி மூலமாகவோ, அல்லது ஒசூரில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்தில் நேரிடையாகவோ செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எந்திரத்தின் மூலம் ராகி அறுவடை செய்வதால் தானியங்கள் முழுமையாகவும், சேதாரம் இல்லாமல் அறுவடை செய்யப்படுவதால் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என விவசாயிகள் தெரிவித்தனர்.

    எனவே, ஒசூர், சூளகிரி, தளி, கெலமங்கலம் வட்டார விவசாயிகள் ராகி மற்றும் உளுந்து, பாசி பயறு அறுவடை செய்ய ஏதுவாக, வேளாண்மை பொறியியல் துறையை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இதுகுறித்த செயல் விளக்கத்தில் சேலம் மண்டல கண்காணிப்பு பொறியாளர் மாது மற்றும் செயற்பொறியாளர் பாஸ்கரன், உதவி செயற்பொறியாளர் சங்கீதா, சூளகிரி துணை வேளாண் அலுவலர் ரவி கிஷோர், துணை தோட்டக்கலை அலுவலர் கோவிந்தராஜ், அலுவலர்கள் மற்றும் அட்மா திட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர். 

    • பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் காயங்கள் குணமாகவில்லை.
    • மனமுடைந்த மணி தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயன்றார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி அருகேயுள்ள் சாந்தி நிகேதன் நகர் பகுதியை சேர்ந்தவர் நாகேஷ் (வயது 47). இவர் கட்டிட ஒப்பந்த தாரராக வேலை பார்த்து வந்தார்.

    சமீபத்தில் விபத்தில் சிக்கி நாகேஷ் படுகாயம் அடைந்தார். பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் காயங்கள் குணமாகவில்லை.

    இதில் மனமுடைந்த நிலையில் இருந்து வந்த நாகேஷ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து அவரது மனைவி ரேணுகா கொடுத்த புகாரின்பேரில் மத்திகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல கே.ஆர்.பி. டேம் அருகேயுள்ள சின்ன காவப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 46). சொந்தமாக தொழில் செய்து வந்த மணி இதற்காக பலரிடம் கடன் வாங்கியுள்ளார்.

    கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்டு நெருக்கியதால் மனமுடைந்த மணி தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயன்றார்.

    அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி ராஜம்மாள் கொடுத்த புகாரின்பேரில் கே.ஆர்.பி.டேம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இதே போல தேன்கனி கோட்டை பாலபள்ளி பகுதியி சேர்ந்தவர் நஞ்சப்பா (40). குடி பழக்கம் உள்ளவர். குடும்ப தகராறில் தனியாக வசித்து வந்தார். இதில் மனம் உடைந்த நஞ்சப்பா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி ராஜேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் தளி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    • பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    ஓசூர்,

    ஓசூர் வட்டம், ஒசூர் முதல் குடிசாதனப்பள்ளி வரை நான்கு வழிச்சாலை விரிவாக்க பணிகளை கிருஷ்ணகிரி நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    நெடுஞ்சாலைத்துறை ஒசூர் உட்கோட்டத்தில் ஓசூர் - ராயக்கோட்டை சாலையில் குடிசாதனப்பள்ளி வரை ஓசூர், நெடுஞ்சாலைத்துறை, உட்கோட்டம் மூலமாக இருவழிச்சாசலையில் இருந்து நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் சாலை விரிவாக்கப்பணிகளை கிருஷ்ணகிரி நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டப்பொறியாளர் சரவணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தரமான முறையில் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    மேலும் பாகலூரில் உள்ள தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தின் இணைப்பு கம்பிகள் சீரமைக்கும் பணிகள் ஆய்வு செய்தார்.

    ஆய்வின்போது ஓசூர் நெடுஞ்சாலைத்துறை உதவி க்கோட்டப்பொறியாளர் செந்தில்குமரன், உதவிப்பொறியாளர் வெங்கட்ராமன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • தேர்த்திருவிழா வருகிற மார்ச் மாதம் 7-ந்தேதி நடைபெறுகிறது.
    • பக்தர்கள் வந்து செல்லும் சாலை, இட வசதி குறித்து மேயர் ஆய்வு மேற்கொண்டார்.

    ஓசூர்,

    ஓசூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் மலைக்கோவில் தேர்த்திருவிழா வருகிற மார்ச் மாதம் 7-ந்தேதி நடைபெறுகிறது.

    இதையொட்டி, தேரோட்டம் நடைபெறும் தேர்ப்பேட்டை பகுதியில், மாநகராட்சி மேயர் எஸ்.ஏ. சத்யா, நேற்று மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகளுடன், தேர்பேட்டைக்கு பக்தர்கள் வந்து செல்லும் சாலை, இட வசதி குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    இந்நிகழ்வில், துணை மேயர் ஆனந்தய்யா, தி.மு.க. கிழக்கு பகுதி செயலாளர் ராமு, மாவட்ட பா.ஜ.க. தலைவர் நாகராஜ், மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள், தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

    • சிவகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • சிவகுமாரை அழைத்து வந்த 2 மர்ம நபர்கள்தான் அவரை கொலை செய்து விட்டு தப்பியிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை.

    கிருஷ்ணகிரி:

    தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் தாலுகா பொம்மனஹள்ளி அருகே உள்ள அய்யர் கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் வழக்கறிஞர் சிவகுமார் (வயது47).

    நேற்று 2 மர்ம நபர்கள் சிவகுமாரை சந்தித்து தங்களது கார் போதை பொருள் கடத்தல் வழக்கில் குருபரப்பள்ளி போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அந்த காரை மீட்டு தர வேண்டும் என்று கூறியுள்ளனர்.

    தனக்கு உரிய கட்டணம் குறித்து அவர்களிடம் பேசி முடிவு செய்த சிவகுமார் தனது ஜூனியர் வக்கீல்களான அருள், கோகுல கண்ணன் ஆகியோருடன் வந்த நபர்களையும் ஏற்றிக்கொண்டு காரில் புறப்பட்டு கிருஷ்ணகிரி நோக்கி சென்றுள்ளார்.

    கிருஷ்ணகிரி சுங்க சாவடி அருகே காரை நிறுத்த சொன்ன மர்ம நபர்கள் தங்களது சகோதரர் பறிமுதல் செய்யப்பட்ட காரின் ஆவணங்களை எடுத்து வருவதாகவும் அதனை ஜூனியர் வக்கீல்களை இங்கே இறக்கி விட்டு பின்னால் வாங்கி வரட்டும் என்று கூறியுள்ளனர்.

    இதையடுத்து தனது ஜூனியர் வக்கீல்கள் 2 பேரையும் அங்கே இறக்கிவிட்டு சிவகுமார் மட்டும் அவர்களுடன் சென்றுள்ளார்.

    ஆனால் நீண்ட நேரம் ஆகியும் யாரும் அங்கு ஆவணங்களை எடுத்துக்கொண்டு வரவில்லை. இதனால் சிவகுமாரின் செல்போனை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க முயன்ற போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

    சிவகுமாரை தொடர்பு கொள்ள முடியாததால் சந்தேகமடைந்த அருளும், கோகுல கண்ணனும் சிவகுமாரின் மனைவி வனிதாவுக்கு இது குறித்து தகவல் தெரிவித்துள்ளனர்.

    இதையடுத்து வனிதா குருபரப்பள்ளிக்கு வந்து போலீசில் புகார் செய்தார். போலீசார் சிவகுமாரை தொடர்பு கொள்ள முயற்சித்து வந்தனர்.

    இந்நிலையில் குருபரப்பள்ளி பகுதியில் ரோந்து வாகனத்தில் சென்ற போலீசார் மர்மமான முறையில் ஒரு கார் தனியாக நின்றதை கண்டு அதை திறந்து பார்த்தனர்.

    அப்போது உள்ளே ஒருவர் காயங்களுடன் பிணமாக கிடந்துள்ளார். அவர்கள் இது குறித்து குருபரபள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீசார் விரைந்து வந்து பார்த்தனர். அப்போது பிணமாக கிடந்தவர் சிவகுமார் என்பது தெரிய வந்தது. பின்னர் சிவகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தினர். தடயவியல் நிபுணர்கள் வந்து ரேகைகளை பதிவு செய்தனர்.

    சிவகுமாரை அழைத்து வந்த 2 மர்ம நபர்கள்தான் அவரை கொலை செய்து விட்டு தப்பியிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கைப்பந்து போட்டிகள் 2 நாட்கள் நடந்தது.
    • முதல், 2-ம், 3-ம் நிலைக்கு ரொக்க பரிசாக சான்றிதழ்கள், கோப்பைகள் வழங்கப்பட்டது.

    கிருஷ்ணகிரி

    கிருஷ்ணகிரியை அடுத்த காட்டிநாயனப்பள்ளியில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி, கிருஷ்ணா கல்வியியல் கல்லூரிகள் சார்பில் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கைப்பந்து போட்டிகள் 2 நாட்கள் நடந்தது.

    கல்வி நிறுவனங்களின் தாளாளர் பெருமாள் தலைமை தாங்கினார். கல்லூரி தலைவர் வள்ளி பெருமாள், கல்வியியல் கல்லூரி முதல்வர் அமலோற்பவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலை கல்லூரி முதல்வர் ஆறுமுகம் அனைவரையும் வரவேற்றார்.

    இதில் கிருஷ்ணகரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சேரலாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆண்கள் கைப்பந்து போட்டியையும், கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலை கல்லூரி ஆங்கில துறை தலைவர் கல்பனா பெண்களுக்கான கைப்பந்து போட்டியையும் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் பர்கூர் துணை போலிஸ் சூப்பிரண்டு மனோகரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பரிசுகளை வழங்கினார்.

    ஆண்கள் பிரிவில் தொப்பூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அணி முதல் பரிசையும், அரசம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அணி 2-ம் பரிசையும், ஓசூர் ஆர்.வி. ஆண்கள் பள்ளி அணி 3-ம் பரிசையும் பெற்றனர். பெண்கள் பிரிவு போட்டியில் ஓசூர் ஆர்.வி. பெண்கள் பள்ளி அணி முதல் பரிசையும், ஓசூர் ஜான் போஸ்கோ பள்ளி அணி 2-ம் பரிசையும், புதுப்பேட்டை அரசு பெண்கள் பள்ளி அணி 3-ம் பரிசையும் பெற்றனர். ஆண்கள் அணிக்கு தலா ரூ.10 ஆயிரம், ரூ.7,500, ரூ.5 ஆயிரம் முறையே முதல், 2-ம், 3-ம் நிலைக்கு ரொக்க பரிசாக சான்றிதழ்கள், கோப்பை வழங்கப்பட்டது.

    பெண்கள் அணிக்கு தலா ரூ. 7 ஆயிரம், ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம் முறையே முதல், 2-ம், 3-ம் நிலைக்கு ரொக்க பரிசாக சான்றிதழ்கள், கோப்பைகள் வழங்கப்பட்டது.

    இதில் பள்ளிகளின் உடற்கல்வி ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள், நடுவர்கள், பேராசிரியர்கள், துறை தலைவர்கள். மாணவர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாட்டை உடற்கல்வி இயக்குனர் திருப்பதி, நிர்வாக அலுவலர் சுரேஷ் செய்திருந்தனர்.  

    • மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கைப்பந்து போட்டிகள் 2 நாட்கள் நடந்தது.
    • முதல், 2-ம், 3-ம் நிலைக்கு ரொக்க பரிசாக சான்றிதழ்கள், கோப்பைகள் வழங்கப்பட்டது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரியை அடுத்த காட்டிநாயனப்பள்ளியில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி, கிருஷ்ணா கல்வியியல் கல்லூரிகள் சார்பில் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கைப்பந்து போட்டிகள் 2 நாட்கள் நடந்தது.

    கல்வி நிறுவனங்களின் தாளாளர் பெருமாள் தலைமை தாங்கினார். கல்லூரி தலைவர் வள்ளி பெருமாள், கல்வியியல் கல்லூரி முதல்வர் அமலோற்பவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலை கல்லூரி முதல்வர் ஆறுமுகம் அனைவரையும் வரவேற்றார்.

    இதில் கிருஷ்ணகரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சேரலாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆண்கள் கைப்பந்து போட்டியையும், கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலை கல்லூரி ஆங்கில துறை தலைவர் கல்பனா பெண்களுக்கான கைப்பந்து போட்டியையும் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் பர்கூர் துணை போலிஸ் சூப்பிரண்டு மனோகரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பரிசுகளை வழங்கினார்.

    ஆண்கள் பிரிவில் தொப்பூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அணி முதல் பரிசையும், அரசம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அணி 2-ம் பரிசையும், ஓசூர் ஆர்.வி. ஆண்கள் பள்ளி அணி 3-ம் பரிசையும் பெற்றனர். பெண்கள் பிரிவு போட்டியில் ஓசூர் ஆர்.வி. பெண்கள் பள்ளி அணி முதல் பரிசையும், ஓசூர் ஜான் போஸ்கோ பள்ளி அணி 2-ம் பரிசையும், புதுப்பேட்டை அரசு பெண்கள் பள்ளி அணி 3-ம் பரிசையும் பெற்றனர். ஆண்கள் அணிக்கு தலா ரூ.10 ஆயிரம், ரூ.7,500, ரூ.5 ஆயிரம் முறையே முதல், 2-ம், 3-ம் நிலைக்கு ரொக்க பரிசாக சான்றிதழ்கள், கோப்பை வழங்கப்பட்டது.

    பெண்கள் அணிக்கு தலா ரூ. 7 ஆயிரம், ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம் முறையே முதல், 2-ம், 3-ம் நிலைக்கு ரொக்க பரிசாக சான்றிதழ்கள், கோப்பைகள் வழங்கப்பட்டது.

    இதில் பள்ளிகளின் உடற்கல்வி ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள், நடுவர்கள், பேராசிரியர்கள், துறை தலைவர்கள். மாணவர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாட்டை உடற்கல்வி இயக்குனர் திருப்பதி, நிர்வாக அலுவலர் சுரேஷ் செய்திருந்தனர்.  

    • கல்வி விழிப்புணர்வு முகாம் இரண்டு நாட்கள் நடந்தது.
    • மாணவர்களுக்கு நடிகர் தாமு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில் வேளாங்கண்ணி கல்விக்குழுமம் சார்பில், 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான பொதுத் தேர்வு பயத்தை நீக்கும் வகையில் "தேர்வைக் கொண்டாடுவோம்"என்ற தலைப்பில் கல்வி விழிப்புணர்வு முகாம் இரண்டு நாட்கள் நடந்தது.

    இந்த முகாமிற்கு வேளாங்கண்ணி கல்வி குழுமத்தின் தாளாளர் கூத்தரசன் தலைமை தாங்கினார். இதில் நடிகரும், கல்வியாளருமாகிய நடிகர் தாமு கலந்துகொண்டு பேசினார்.

    அப்போது அவர் பேசுகையில், பொதுத்தேர்விற்கு இன்னும் 50 நாட்களே உள்ள நிலையில் ஒரு குறிக்கோள் அமைத்துக்கொள்ளுங்கள். இவ்வளவு மதிப்பெண் எடுக்க போகிறேன் என முடிவெடுத்துக் கொள்ளுங்கள். அதையே பிறகு உங்களின் கனவாக்கிக்கொள்ளுங்கள்.

    அதிக மதிப்பெண்கள் பெற தொடர் முயற்சியை விட்டுவிடாதீர்கள். ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களை மாணவர்கள் மனதில் பதிய வைத்து, தேர்வின் போது அவர்களை ஒரு கருவியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். மாணவர்கள் தேர்வை பயமின்றி எழுதக் கற்றுக்கொள்ளும் இயல்பை வளர்த்துக்கொள்ளுதல் அவசியம். செவி வழி கேட்கும் திறனை அகத்தின் வழியாக எழுத்து மூலம் நிருபித்தலே தேர்வு. இவ்வாறு அவர் பேசினார்.

    பள்ளியில் நடந்த தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும், செயின்ட் பீட்டர்ஸ் பொறியியல் கல்லூரி சார்பாக நடைபெற்ற திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நடிகர் தாமு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

    இந்த நிகழ்ச்சியில், வேளாங்கண்ணி கல்வி குழுமத்தை சார்ந்த பர்கூர், ஓசூர், வேப்பனஹள்ளி, தேன்கனிக்கோட்டை, சூளகிரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

    ×