என் மலர்
நீங்கள் தேடியது "பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்க அறிவுரை"
- அரசின் முதன்மை செயலாளருமான டாக்டர் பீலா ராஜேஷ் தலைமை தாங்கினார்.
- இருப்பு பதிவேடு, நோயாளிகளின் வருகைப்பதிவேடு உள்ளிட்ட பதிவேடுகளை ஆய்வு செய்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், அரசின் முன்னோடித் திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்த கூட்டம்நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், அரசின் முதன்மை செயலாளருமான டாக்டர் பீலா ராஜேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி முன்னிலை வகித்தார்.
இது குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பீலா ராஜேஷ் கூறியதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், சமத்துவபுரம் வீடுகள் புனரமைப்பு பணிகள், ஜல் ஜீவன் மிஷன், மாநகராட்சி, நகராட்சியில் சுவட்ச் பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் சுகாதாரப் பணிகள் மற்றும் தூய்மைப் திட்ட பணிகள், அம்ருத் திட்டம், 15வது நிதிக்குழு திட்டப்பணிகள் உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும், நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக மாவட்ட கண்காணிப்பு அலுவலர், காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திடீர் ஆய்வு செய்தார்.
மேலும், நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து கிருஷ்ணகிரி நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு, மருந்து, மாத்திரைகளின் இருப்பு பதிவேடு, நோயாளிகளின் வருகைப்பதிவேடு உள்ளிட்ட பதிவேடுகளை ஆய்வு செய்தார்.






