என் மலர்
கிருஷ்ணகிரி
- மக்கள் சேவைக்கான தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- மயானத்தை சுத்தம் செய்திடும் தூய்மைப்பணியில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி,
தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த மாநரங்களின் தூய்மைக்கான மாபெரும் மக்கள் இயக்கப் பணியில் சாலைப்பணியாளர்கள் ஒவ்வொரு விடுமுறை நாளிலும், ஒவ்வொரு பகுதியில் மக்கள் சேவைக்கான தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக நேற்று குடியரசு தினத்தையொட்டி கிருஷ்ணகிரி மாவட்ட சாலைப் பணியாளர்கள் பெரியமுத்தூர் ஊராட்சி, அவதானப்பட்டி பொது மயானத்தை சுத்தம் செய்திடும் தூய்மைப்பணியில் ஈடுபட்டனர்.
இதில் சாலைப்பணியாளர் சங்க மாநில தலைவர் சண்முகராஜா, மாநில துணைப் பொதுச்செயலாளர் பெருமாள், மாநில செயலாளர்கள் ரவி, ராஜமாணிக்கம், மாநில துணைத் தலைவர்கள் சின்னராசு, ராஜேந்திரன், கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் ராஜமாணிக்கம், மாவட்ட செயலாளர் சந்திரமூர்த்தி, மாவட்ட பொருளாளர் திருப்பதி உள்ளிட்ட பலர் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.
- கிருஷ்ணப்பா கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
- கொலை தொடர்பாக அவருடைய உறவினர்களான அப்பையா, கோபால் நாயுடு ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பேரிகை ராமச்சந்திரம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணப்பா (வயது 52). விவசாயி.
இவருக்கு திருமணமாகி மனைவி, ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று ராமசந்திரம் பகுதியில் உள்ள உறவினர் நிலத்தில் கிருஷ்ணப்பா கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக பேரிகை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற ேபாலீசார் கொலை செய்யப்பட்டு கிடந்த கிருஷ்ணப்பாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கிருஷ்ணப்பாவின் உடலில் 5 இடங்களில் கத்தியால் குத்தப்பட்ட காயங்கள் இருந்தன. இதுகுறித்து பேரிகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.
கிருஷ்ணப்பாவிற்கு யாருடனும் முன்விரோதம் இருந்ததா? தொழில் போட்டி இருந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த கொலை தொடர்பாக அவருடைய உறவினர்களான அப்பையா, கோபால் நாயுடு ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
- தங்க சங்கிலியை திருடிக்கொண்டு தப்ப முயன்றார்.
- பெண்ணை மடக்கி பிடித்து சூளகிரி போலீசிடம் ஒப்படைத்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகேயுள்ள குருபரதபள்ளி பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த். இவரது மனைவி சவுந்தர்யா (வயது 27).
இவர் தனது கைப்பையில் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான ஒரு தங்க சங்கிலியை எடுத்துக்கொண்டு வெளியே புறப்பட்டுள்ளார்.
அப்போது அங்கு வந்த ஒரு இளம்பெண் சவுந்தர்யா வைத்திருந்த பையில் இருந்த தங்க சங்கிலியை திருடிக்கொண்டு தப்ப முயன்றார்.
இதையடுத்து சவுந்தர்யா கூச்சலிடவே அப்பகுதியில் இருந்தவர்கள் நகை திருடிய பெண்ணை மடக்கி பிடித்து சூளகிரி போலீசிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில் பிடிபட்ட பெண் சேலம் அயோத்திபட்டினம் பகுதியை சேர்ந்த கீர்த்தனா (23) என்பது தெரிய வந்தது.
அவரிடம் இருந்து நகையை மீட்ட போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- 3 பேருமே பணம் கொடுக்கல், வாங்கல் தொழில் செய்து வருகின்றனர்.
- பீர் பாட்டிலால் பாபுவின் தலையில் அடித்து காயப்படுத்தியுள்ளனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டவுன் ஜானப்பர் தெருவை சேர்ந்தவர் பாபு (வயது 45). இதே பகுதியை சேர்ந்தவர்கள் தேவராஜ், கணேசன்.
இவர்கள் அனைவரும் உறவினர்கள். மேலும் 3 பேருமே பணம் கொடுக்கல், வாங்கல் தொழில் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தேவராஜுக்கும் பாபுவுக்கும் இடையே தொழில் தொடர்பான போட்டி இருந்து வந்தததாக கூறப்படுகிறது.
நேற்று இதன் எதிரொலியாக பாபுவை தேவராஜும், கணேசனும் வழிமறித்து தாக்கி பீர் பாட்டிலால் பாபுவின் தலையில் அடித்து காயப்படுத்தியுள்ளனர்.
இதில் படுகாயம் அடைந்து ஓசூர் தனியார் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டுள்ள பாபு ஓசூர் டவுன் போலீசில் கொடுத்த புகாரில் தேவராஜும், கணேசனும் தன்னை கொள்ள முயன்றதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தேவராஜை கைது செய்தனர், கணேசனை தேடி வருகின்றனர்.
- கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
- காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டு ஏற்றுக் கொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் 74- வது குடியரசு தின விழா கிருஷ்ணகிரியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடை பெற்றது.
விழாவையொட்டி இன்று காலை மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டு ஏற்றுக் கொண்டார்.
அதை தொடர்ந்து அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மொத்தம் 60 பயனாளிகளுக்கு ரூ.38 லட்சத்து 41 ஆயிரத்து 587 மதிப்புள்ள நல திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
இதையடுத்து சுதந்திரப் போராட்டத் தியாகிகள், வாரிசுதாரர்கள் 33 பேர் கவு ரவிக்கப்பட்டனர். அதேபோல் அரசு ஊழியர்கள் 20 பேர் சிறந்த பணிக்காக மாவட்ட கலெக்டரிடம் கேடயம் பெற்றனர்.
பல்வேறு துறைகளைச் சார்ந்த 198 பேர் நற்சான்று பெற்றார்கள். 7 பள்ளி களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பின்னர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 333 கிராம ஊராட்சிகளில் நடந்த கிராம சபை கூட்டங்களில் அனைத்து தரப்பு மக்களையும் ஈடுபடுத்தி மிகவும் ஏழை, மாற்றுத்திறனாளி, நலிவுற்றோர் என மக்களால் அடையாளம் காணப்பட்டு மக்கள் நிலை ஆய்வுப் பட்டியல் கிராம சபையில் ஒப்புதல் பெறப்பட்டது.
- தீவிர விசாரணை நடத்தி கண்டறிந்த போலீசார் அவர்களில் 8 பேரை கைது செய்தனர்.
- தெய்வம் ஆகியோரும் புகையிலை பொருட்களை விற்பனை செய்த வழக்கில் கைதாகினர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் கஞ்சா மற்றும் போதைபொருட்களை விற்பவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி கண்டறிந்த போலீசார் அவர்களில் 8 பேரை கைது செய்தனர்.
கஞ்சா விற்றதாக காவேரிப்பட்டணம் அருகே உள்ள சாந்தபுரம் இ.பி.எஸ். நகரை சேர்ந்த சலாவுதீன் (வயது 48), பர்கூர் அருகேயுள்ள ஏ.நாகமங்கலம்பகுதியை சேர்ந்த வேணுகோபால் (40) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல பர்கூர் அருகே ஜெகதேவி ரோடு பகுதியை சேர்ந்த அசோக்குமார், போச்சம்பள்ளி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த தெய்வம் ஆகியோரும் புகையிலை பொருட்களை விற்பனை செய்த வழக்கில் கைதாகினர்.
கஞ்சா விற்பனை செய்தது தொடர்பாக போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் பெத்தனபள்ளியை சேர்ந்த முருகன் என்பவரை கிருஷ்ணகிரி போலீசாரும், திம்பன அள்ளி பகுதியை சேர்ந்த முனுசாமி என்பவரை ஓசூர் போலீசாரும், பேரிகை ஜவுக்கு தெருவை சேர்ந்த இத்ரீஸ், அம்ரீஷ் ஆகிய 2 பேரையும் பேரிகை போலீசாரும் கைது செய்தனர்.
- போலியான சான்றுகளும் ஆவண ங்களையும் சமர்ப்பித்து பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஏற்கனவே புகார்கள் கூறப்பட்டது.
- எல்லாவற்றிற்கும் மேலாக மக்கள் கடுமையாக ஏமாற்றப்பட்டுள்ளார்கள் என்பதுதான் அதிர்ச்சியான ஒரு விஷயமாக உள்ளது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி தற்பொ ழுது தரம் உயர்த்த ப்பட்ட நிலையில் வேகமாக வளர்ந்து வரும் மிகப்பெரிய தொழில் நகரமாக திகழ்கிறது.
ஏற்கனவே தொழிற்சா லைகள் நிறைந்த இந்தப் பகுதியில் ரியல் எஸ்டேட் தொழிலானது மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
சி று முதல் பெரு தொழில் நிறுவனங்கள் பல கோடி ரூபாய் முதலீட்டில் இங்கு தயாரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்தி பல்லாயிர க்கணக்கான வேலை வாய்ப்பையும் அளிக்கும் விதமாக இங்கு இயங்கி வருகிறது.
இதனால் இந்தியாவில் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமானவர்கள் தொழில் நிமித்தமாக இந்த பகுதிக்கு வருகின்றனர். அவ்வாறு வருபவர்கள் இந்த பகுதியிலேயே தங்குவதற்கு ஏதுவாக நிலங்களை வாங்கி வீடுகள், தொழில் நிறுவனங்கள் போன்றவற்றை அமைத்து வளர்ந்து வருகின்றனர்.
இவ்வாறு நிலம் வாங்குவது, விற்பது என்பது ஓசூர் பகுதிகளில் ஏராளமாக நடைபெற்று வருவதால் இங்குள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் எப்பொழுதுமே கூட்டம் நிரம்பி வழியும்.
எனவே பதிவுகளை முறை யாக மேற்கொள்வதற்கு ஏதுவாக டோக்கன் வழங்கும் முறையும் பதிவாளர் அலுவலகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுபோன்று சூழலில் பத்திரப்பதிவுகள் சார் பதிவாளர் கண்களில் மண்ணைத் தூவி விட்டு போலியான சான்றுகளும் ஆவண ங்களையும் சமர்ப்பித்து பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஏற்கனவே புகார்கள் கூறப்பட்டது.
இந்த நிலையில் தற்பொழுது பதிவுக்காக வந்த சில ஆவணங்களை சந்தேகத்தின் பேரில் சோதனை மேற்கொண்டதில் மூலப்பத்திரங்கள் முற்றிலு மாக உண்மை பத்திரம் போல போலியாக தயாரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேபோல பதிவு செய் யும் நபரின் கையொப்பம் மற்றும் அவரது விவரங்கள் முற்றிலுமாக தவறான தகவல்களைக்கொண்டு பதிவு செய்யப்பட்டதும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது என்று சார்பதிவாளர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சார் பதிவாளர் அலுவலக முத்திரை, தமிழக அரசு லட்சினை பொருத்திய முத்திரை உள்ளிட்டவைகள் அச்சு அசல் போல தயாரிக்கப்பட்டு அதன் மூலம் போலியான பத்திரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதும் தெரியவந்திருக்கிறது.
இதனால் பதிவாளர் அலுவலகத்தில் இதுபோன்று மூல ஆவணங்களை சரிபார்க்கும் பணியை மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளதால் பத்திரப்பதிவுகள் பாதிக்கப்பட்டுள்ளது.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக மக்கள் கடுமையாக ஏமாற்றப்பட்டுள்ளார்கள் என்பதுதான் அதிர்ச்சியான ஒரு விஷயமாக உள்ளது.
ஏற்கனவே பத்திரப்பதிவுகளுக்கான கால அளவை போதாதால் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக உள்ளது.
இந்த நிலையில் இதுபோன்ற மூல பத்திரம் உண்மை தன்மை மற்றும் ஆவணங்களின் உண்மை தன்மை போன்றவற்றில் பதிவுத்துறை அதிகா ரிகளுக்கு ஏற்படும் சந்தேகங்களை தீர்ப்ப தற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளால் மேலும் காலதாமதம் ஏற்படுகிறது என பதிவுத்துறையினர் கூறுகின்றனர்.
இதற்கு துறை சார்பில் தனியாக ஒரு அமைப்பை ஏற்படுத்தி அதன் வாயிலாக பத்திரப்பதிவு ஆவணங்களின் உண்மை தன்மையை உறுதி செய்த பிறகு பதிவுகளை மேற்கொண்டால் பொது மக்கள் ஏமாற்றப்படுவது தவிர்க்கப்படுவதுடன் பதிவுத்துறை அதிகாரிகளும் இதுபோன்ற சிக்கலில் இருந்து விடுபடுவார்கள் என்று பதிவுத்துறையினர் கூறுகின்றனர்.
- தேர்தல் விழிப்புணர்வு தொடர்பான பாட்டு போட்டி, சுவரொட்டி வரைதல் போட்டிகள் நடந்தது.
- 6 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
கிருஷ்ணகிரி,
13-வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தேர்தல் விழிப்புணர்வு தொடர்பான பாட்டு போட்டி, சுவரொட்டி வரைதல் போட்டிகள் நடந்தது.
இதில் வெற்றி பெற்ற 12 பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி கிருஷ்ணகிரி புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது.
இதில் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி கலந்து கொண்டு, போட்டிகளில் வெற்றி பெற்ற 12 பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ரூ.14 ஆயிரம் மதிப்பிலான ரொக்கப்பரிசு, கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களும், வினாடி வினா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும், கோலப்போட்டியில் வெற்றி பெற்ற 10 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.19 ஆயிரம் மதிப்பில் ரொக்கப்பரிசு, கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களும், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணியில் சிறப்பாக செயல்பட்ட 6 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
முன்னதாக, கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்தில், 13-வது தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, தேர்தல் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் மற்றும் தேர்தல் விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி கொடியசைத்து தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு வாக்களிப்பதின் அவசியம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
மயிலாட்டம், ஒயிலாட்டம், பம்பை இசை நிகழ்ச்சியுடன் இந்த ஊர்வலம் நடைபெற்றது. இதில் 300 கல்லூரி மாணவிகள், தன்னார்வ தொண்டர்கள் ஆகியோர் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி கலந்து கொண்டனர்.
இந்த ஊர்வலம் புதிய பஸ் நிலையத்தில் தொடங்கி, பெங்களூரு சாலை வழியாக அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நிறைவடைந்தது.
தொடர்ந்து, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், 13-வது தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் வாக்காளர் தின உறுதிமொழியை அனைத்து அரசு துறை அலுவலர்கள் எடுத்துக்கொண்டனர்.
- ஊர்வலத்தை ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
- பதாகைகளை ஏந்தியவாறு பேரணியில் மாணவ,மாணவியர்கள் சென்றனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் 13-வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நேற்று விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
ஓசூர் காமராஜ் காலனியில் உள்ள ஆர்.வி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் இந்த ஊர்வலத்தை ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில்,அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்று கலை நிகழ்ச்சிகள் நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
பேரணியில், வாக்காளர்களின் கடமை மற்றும் வாக்களிப்பதின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் விதமாக, வாசகங்கள் அச்சிடப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு பேரணியில் மாணவ,மாணவியர்கள் சென்றனர்.
இந்த பேரணி மாநகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று முடிவில், ஓசூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் நிறைவடைந்தது. பின்னர், அங்கு வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன், உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் முத்துப்பாண்டி, ஓசூர் தாசில்தார் கவாஸ்கர் மற்றும் அலுவலர்கள், வருவாய் துறையினர் கலந்து கொண்டனர்.
இதை தொடர்ந்து நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில் அனைவரும் கையொப்பமிட்டனர்.
- சகல வசதிகளுடன் கள்ளச் சந்தையில் 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெற்று வருகிறது.
- 500-க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த நாகரசம்பட்டி போலீஸ் காவல் எல்லைக்குட்பட்ட வேலம்பட்டியில் அரசு மதுபானக்கடை உள்ளது.
இந்த கடையின் எதிரில் உள்ள நாகோஜனஅள்ளி பேரூராட்சியில் உள்ள ஒரு வீட்டில் அரசு பார் நடத்த உரிமம் இருப்பதாகக் கூறி சகல வசதிகளுடன் கள்ளச் சந்தையில் 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சுமார் 200 மீட்டர் தொலைவில் வேலம்பட்டி அரசு துவக்கப்பள்ளி உள்ளது.
அதேபோல், போச்சம்பள்ளி, சந்தூர், வேலம்பட்டி வழியாக காவேரிப்பட்டினம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளுக்கு 500-க்கும் மேற்பட்ட நான்கு சக்கர வாகனங்கள், 1000-க்கும் மேற்பட்ட இரண்டு சக்கர வாகனங்கள் பார் நடக்கும் பகுதியை கடந்து செல்கிறது.
இந்நிலையில் குறிப்பிட்ட அந்த வீட்டில் 24 மணி நேரமும் கள்ள சந்தையில் மது விற்பனை செய்வதால் பள்ளி மாணவர்களை முகம் சுளிக்க வைப்பதுடன், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.
அதேபோல் சந்தூர் சந்திப்பு சாலையில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய அனுமதி பெறாத பார் செயல்பட்டு வருகிறது. அதிகாலை முதல் மது குடி ப்போர் அனுமதி பெறாத பார்களில் மது வாங்கி அருந்தி வருகின்றனர்.
மத்தூர் பகுதியில் அனுமதி பெற்ற பார்களில் அதிகாலை முதல் மது விற்பனை நடந்து வருகிறது.
இதை காவல்துறையினர் கண்டும் காணாமல் இருந்து வருகின்றனர் என்று பொதுமக்கள் குற்ற ச்சாட்டுகளை முன்வைத்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நாகரசம்பட்டி போலீசார் வேலம்பட்டி பகுதியில் மது விற்பனை நடந்த வீட்டில் சோதனை நடத்தி அங்கிருந்து 500-க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக தி.மு.க. கவுன்சிலரின் கணவர் ராஜா என்பவரை கைது செய்தனர். மேலும் அப்பகுதி அரசு மதுக்கடை ஊழியர்கள் கோவிந்தராஜ், சுந்தர்ராஜ் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.
- ‘எதிர்காலம் யார் கையில்’ என்ற தலைப்பில் இலக்கிய பெருவிழா நடந்தது.
- சிறப்பு விருந்தினராக திருச்சி சிவா எம்.பி.கலந்து கொண்டு பேசினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் கலை கல்லூரியில் 'எதிர்காலம் யார் கையில்' என்ற தலைப்பில் இலக்கிய பெருவிழா நடந்தது.
கல்லூரி முதல்வர் ரவி தலைமை தாங்கினார். தருமபுரி மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் ராமலட்சுமி, மதியழகன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக திருச்சி சிவா எம்.பி.கலந்து கொண்டு பேசினார். இந்நிகழ்ச்சியில், முன்னாள் எம்பி.க்கள் சுகவனம், வெற்றிச்செல்வன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், நகர்மன்ற துணைத் தலைவர் சாவித்திரி கடலரசுமூர்த்தி, ஆங்கிலத்துறை இணை பேராசிரியர் கிளாட்சன் ஜோஸ் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர்.
முன்னதாக கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் வெங்கடேசன் வரவேற்புரை யாற்றினார். முடிவில், உதவி பேராசிரியர் திலகவதி நன்றி கூறினார்.
நிகழ்ச்சியினை தமிழ்த்துறை கவுரவ விரிவுரையாளர் செந்தில் தொகுத்து வழங்கினார்.
- தேசிய நெடுஞ்சாலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
- குற்ற வாளிகள், கோர்ட்டில் சரண் அடைய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கிருஷ்ணகிரி,
தருமபுரி மாவட்டம் ஆலமரத்துப்பட்டியை சேர்ந்தவர் வக்கீல் சிவக்குமார் (வயது 44). இவர் கடந்த 23-ந் தேதி இரவு கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது காரில் உடல் மீட்கப்பட்டது.
இக்கொலை தொடர்பாக குருபரப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக குற்றவாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் உத்தரவின் பேரில், 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
அவர்கள் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள். அதில் திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது. அவை வருமாறு:-
வக்கீல் சிவக்குமாரிடம் தொடர்பு கொண்ட நபர்கள், குருபரப்பள்ளி போலீஸ் நிலையத்தில் தங்கள் குட்கா வாகனம் சிக்கியதாக கூறி அவரை கிருஷ்ணகிரிக்கு அழைத்து வந்துள்ளனர்.
ஆனால் அன்று அப்படி எந்த ஒரு சம்பவமும் நிகழவில்லை. மேலும் குட்கா வழக்கில் எந்த வாகனமும் பறிமுதல் செய்து வைக்கப்படவில்லை. வக்கீல் சிவக்குமாருக்கு சமீப காலமாக சிலரிடம் பிரச்னை இருந்துள்ளது.
அதில், சிலர் திட்டமிட்டு இந்த கொலை சம்பவத்தை அரங்கேற்றி இருக்கலாம். மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் வக்கீல் சிவக்குமார் கொலையில் தொடர்புடைய குற்ற வாளிகள், கோர்ட்டில் சரண் அடைய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வக்கீலை கொலை செய்து உள்ளதால் சக வக்கீல்கள் யாரும் குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஆஜர் ஆக கூடாது என்றும் வக்கீல்கள் முடிவு செய்துள்ளனர்.






