என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.38.41 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் :கலெக்டர் வழங்கினார்
    X

    கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடந்த குடியரசு தினவிழாவில் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டு ஏற்றுக்கொண்டார்.

    ரூ.38.41 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் :கலெக்டர் வழங்கினார்

    • கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
    • காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டு ஏற்றுக் கொண்டார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் 74- வது குடியரசு தின விழா கிருஷ்ணகிரியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடை பெற்றது.

    விழாவையொட்டி இன்று காலை மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டு ஏற்றுக் கொண்டார்.

    அதை தொடர்ந்து அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மொத்தம் 60 பயனாளிகளுக்கு ரூ.38 லட்சத்து 41 ஆயிரத்து 587 மதிப்புள்ள நல திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

    இதையடுத்து சுதந்திரப் போராட்டத் தியாகிகள், வாரிசுதாரர்கள் 33 பேர் கவு ரவிக்கப்பட்டனர். அதேபோல் அரசு ஊழியர்கள் 20 பேர் சிறந்த பணிக்காக மாவட்ட கலெக்டரிடம் கேடயம் பெற்றனர்.

    பல்வேறு துறைகளைச் சார்ந்த 198 பேர் நற்சான்று பெற்றார்கள். 7 பள்ளி களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பின்னர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 333 கிராம ஊராட்சிகளில் நடந்த கிராம சபை கூட்டங்களில் அனைத்து தரப்பு மக்களையும் ஈடுபடுத்தி மிகவும் ஏழை, மாற்றுத்திறனாளி, நலிவுற்றோர் என மக்களால் அடையாளம் காணப்பட்டு மக்கள் நிலை ஆய்வுப் பட்டியல் கிராம சபையில் ஒப்புதல் பெறப்பட்டது.

    Next Story
    ×