கஞ்சா, புகையிலை பொருள் விற்ற 8 பேர் கைது

தீவிர விசாரணை நடத்தி கண்டறிந்த போலீசார் அவர்களில் 8 பேரை கைது செய்தனர்.தெய்வம் ஆகியோரும் புகையிலை பொருட்களை விற்பனை செய்த வழக்கில் கைதாகினர்.
கஞ்சா, புகையிலை பொருள் விற்ற 8 பேர் கைது
Published on

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் கஞ்சா மற்றும் போதைபொருட்களை விற்பவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி கண்டறிந்த போலீசார் அவர்களில் 8 பேரை கைது செய்தனர்.

கஞ்சா விற்றதாக காவேரிப்பட்டணம் அருகே உள்ள சாந்தபுரம் இ.பி.எஸ். நகரை சேர்ந்த சலாவுதீன் (வயது 48), பர்கூர் அருகேயுள்ள ஏ.நாகமங்கலம்பகுதியை சேர்ந்த வேணுகோபால் (40) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல பர்கூர் அருகே ஜெகதேவி ரோடு பகுதியை சேர்ந்த அசோக்குமார், போச்சம்பள்ளி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த தெய்வம் ஆகியோரும் புகையிலை பொருட்களை விற்பனை செய்த வழக்கில் கைதாகினர்.

கஞ்சா விற்பனை செய்தது தொடர்பாக போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் பெத்தனபள்ளியை சேர்ந்த முருகன் என்பவரை கிருஷ்ணகிரி போலீசாரும், திம்பன அள்ளி பகுதியை சேர்ந்த முனுசாமி என்பவரை ஓசூர் போலீசாரும், பேரிகை ஜவுக்கு தெருவை சேர்ந்த இத்ரீஸ், அம்ரீஷ் ஆகிய 2 பேரையும் பேரிகை போலீசாரும் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com