என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலக்கிய பெருவிழா"

    • ‘எதிர்காலம் யார் கையில்’ என்ற தலைப்பில் இலக்கிய பெருவிழா நடந்தது.
    • சிறப்பு விருந்தினராக திருச்சி சிவா எம்.பி.கலந்து கொண்டு பேசினார்.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் கலை கல்லூரியில் 'எதிர்காலம் யார் கையில்' என்ற தலைப்பில் இலக்கிய பெருவிழா நடந்தது.

    கல்லூரி முதல்வர் ரவி தலைமை தாங்கினார். தருமபுரி மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் ராமலட்சுமி, மதியழகன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக திருச்சி சிவா எம்.பி.கலந்து கொண்டு பேசினார். இந்நிகழ்ச்சியில், முன்னாள் எம்பி.க்கள் சுகவனம், வெற்றிச்செல்வன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், நகர்மன்ற துணைத் தலைவர் சாவித்திரி கடலரசுமூர்த்தி, ஆங்கிலத்துறை இணை பேராசிரியர் கிளாட்சன் ஜோஸ் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர்.

    முன்னதாக கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் வெங்கடேசன் வரவேற்புரை யாற்றினார். முடிவில், உதவி பேராசிரியர் திலகவதி நன்றி கூறினார்.

    நிகழ்ச்சியினை தமிழ்த்துறை கவுரவ விரிவுரையாளர் செந்தில் தொகுத்து வழங்கினார்.

    ×