என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கணவர் உள்பட 3 பேர் கைது"

    • சகல வசதிகளுடன் கள்ளச் சந்தையில் 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெற்று வருகிறது.
    • 500-க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    மத்தூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த நாகரசம்பட்டி போலீஸ் காவல் எல்லைக்குட்பட்ட வேலம்பட்டியில் அரசு மதுபானக்கடை உள்ளது.

    இந்த கடையின் எதிரில் உள்ள நாகோஜனஅள்ளி பேரூராட்சியில் உள்ள ஒரு வீட்டில் அரசு பார் நடத்த உரிமம் இருப்பதாகக் கூறி சகல வசதிகளுடன் கள்ளச் சந்தையில் 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், சுமார் 200 மீட்டர் தொலைவில் வேலம்பட்டி அரசு துவக்கப்பள்ளி உள்ளது.

    அதேபோல், போச்சம்பள்ளி, சந்தூர், வேலம்பட்டி வழியாக காவேரிப்பட்டினம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளுக்கு 500-க்கும் மேற்பட்ட நான்கு சக்கர வாகனங்கள், 1000-க்கும் மேற்பட்ட இரண்டு சக்கர வாகனங்கள் பார் நடக்கும் பகுதியை கடந்து செல்கிறது.

    இந்நிலையில் குறிப்பிட்ட அந்த வீட்டில் 24 மணி நேரமும் கள்ள சந்தையில் மது விற்பனை செய்வதால் பள்ளி மாணவர்களை முகம் சுளிக்க வைப்பதுடன், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.

    அதேபோல் சந்தூர் சந்திப்பு சாலையில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய அனுமதி பெறாத பார் செயல்பட்டு வருகிறது. அதிகாலை முதல் மது குடி ப்போர் அனுமதி பெறாத பார்களில் மது வாங்கி அருந்தி வருகின்றனர்.

    மத்தூர் பகுதியில் அனுமதி பெற்ற பார்களில் அதிகாலை முதல் மது விற்பனை நடந்து வருகிறது.

    இதை காவல்துறையினர் கண்டும் காணாமல் இருந்து வருகின்றனர் என்று பொதுமக்கள் குற்ற ச்சாட்டுகளை முன்வைத்து வந்தனர்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நாகரசம்பட்டி போலீசார் வேலம்பட்டி பகுதியில் மது விற்பனை நடந்த வீட்டில் சோதனை நடத்தி அங்கிருந்து 500-க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பாக தி.மு.க. கவுன்சிலரின் கணவர் ராஜா என்பவரை கைது செய்தனர். மேலும் அப்பகுதி அரசு மதுக்கடை ஊழியர்கள் கோவிந்தராஜ், சுந்தர்ராஜ் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

    ×