search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எந்திரம் மூலம் ராகி அறுவடை செயல் விளக்கம்
    X

    எந்திரம் மூலம் ராகி அறுவடை செயல் விளக்கம்

    • பயிர் அறுவடை எந்திரத்தின் மூலம் ராகி அறுவடை செயல் விளக்கம் நடைபெற்றது.
    • ஒரு மணி நேரத்திற்கு ரூ. 1,160/- என அரசு வாடகையாக நிர்ணயித்துள்ளது.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா ஏ. செட்டிபள்ளி பஞ்சாயத்திற்குட்பட்ட கொர குருக்கி கிராமத்தில் வேளாண்மை மற்றும் வேளாண்மை பொறியியல் துறையின் சார்பாக ஒருங்கிணைந்த பயிர் அறுவடை எந்திரத்தின் மூலம் ராகி அறுவடை செயல் விளக்கம் நடைபெற்றது.

    இந்த எந்திரம் ராகி, உளுந்து, பாசி பயறு அறுவடை செய்ய ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அறுவடை செய்ய, ஒரு மணி நேரத்திற்கு ரூ. 1,160/- என அரசு வாடகையாக நிர்ணயித்துள்ளது.

    மேற்படி விவசாயிகள் வாடகை தொகையினை உழவன் செயலி மூலமாகவோ, அல்லது ஒசூரில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்தில் நேரிடையாகவோ செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எந்திரத்தின் மூலம் ராகி அறுவடை செய்வதால் தானியங்கள் முழுமையாகவும், சேதாரம் இல்லாமல் அறுவடை செய்யப்படுவதால் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என விவசாயிகள் தெரிவித்தனர்.

    எனவே, ஒசூர், சூளகிரி, தளி, கெலமங்கலம் வட்டார விவசாயிகள் ராகி மற்றும் உளுந்து, பாசி பயறு அறுவடை செய்ய ஏதுவாக, வேளாண்மை பொறியியல் துறையை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இதுகுறித்த செயல் விளக்கத்தில் சேலம் மண்டல கண்காணிப்பு பொறியாளர் மாது மற்றும் செயற்பொறியாளர் பாஸ்கரன், உதவி செயற்பொறியாளர் சங்கீதா, சூளகிரி துணை வேளாண் அலுவலர் ரவி கிஷோர், துணை தோட்டக்கலை அலுவலர் கோவிந்தராஜ், அலுவலர்கள் மற்றும் அட்மா திட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×