என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • இந்திய அளவிலான மூத்தோர் தடகள போட்டி நடைபெற்றது.
    • ஓசூரை சேர்ந்த 20 தடகள வீரர்கள் பங்கு பெற்று 5 தங்கம், 2 வெள்ளி மற்றும் 2 வெண்கலம் வென்றனர்.

    ஓசூர்,

    மூத்தோர் இந்திய தடகள சங்கம் சார்பில் கொல்கத்தாவில் உள்ள தேசிய விளயாட்டு அரங்கில் கடந்த 14-ம் தேதி முதல் 18-ந் தேதி வரை இந்திய அளவிலான மூத்தோர் தடகள போட்டி நடைபெற்றது.

    ஒசூரில் கடந்த மாதம் 6-ம் தேதி நடைபெற்ற மாநில அளவிலான தடகள போட்டிகளில் வெற்றிபெற்ற 330 தடகள விளையாட்டு வீரர்கள், தமிழகம் சார்பில் இந்த மூத்தோர் தடகள போட்டியில் கலந்து கொண்டனர்.

    இதில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த 20 தடகள வீரர்கள் பங்கு பெற்று 5 தங்கம், 2 வெள்ளி மற்றும் 2 வெண்கலம் வென்றனர்.

    தமிழக அணி மொத்தம் 70 தங்கம், 64 வெள்ளி மற்றும் 93 வெண்கலம் பதக்கங்கள் வென்று 622 புள்ளிகள் பெற்று முதல் இடம் பிடித்து தேசிய அளவில் ஓட்டுமொந்த சாம்பியன்ஷிப் கோப்பையை பெற்றுள்ளது.

    ஓசூரை சேர்ந்த சாதனை வீரர்கள் வருகிற செப்டம்பர் மாதம் பிலிப்பைன்சில் நடைபெறவுள்ள ஆசிய அளவிலான மூத்தோர் தடகள போட்டிகளில் கலந்து கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த அணியை கிருஷ்ணகிரி மாவட்ட மூத்தோர் தடகள செயலாளர் செபாஸ்டியன் வழிநடத்தி ஒருகிணைத்தார்.

    • செயற்கை நுண்ணறிவு வழிகாட்டுக் கருத்தரங்கு நடைபெற்றது.
    • நூறு ஆட்கள் செய்ய வேண்டிய வேலையை ஒரு கணினி செய்கிறது.

    ஓசூர்,

    ஓசூர் எம்.ஜி.ஆர் கல்லூரி வணிகவியல் துறை சார்பில் தொழில் நுண்ணறிவு மற்றும் செயற்கை நுண்ணறிவு வழிகாட்டுக் கருத்தரங்கு நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு,

    எம்.ஜி.ஆர் கல்லூரி முதல்வர் முத்துமணி தலைமை தாங்கி பேசுகையில், மாணவர்களின் கண்டுபிடிப்பு பிறருக்கு உதவும் விதமாக இருக்க வேண்டும். அவ்வாறு இருக்கும் போது, நாம் அடையாளப் படுத்தப்படுவோம். தொழிலில் வெற்றிபெற நல்லகுடும்பம், நல்ல நண்பர்கள் உடன் இருக்கும்போது எளிதில் வெற்றிபெற முடியும்.

    நாம் தொடங்கும் தொழிலில் அடித்தளம் மிகவும் வலிமையாக இருக்கவேண்டும் என்றார். மேலும், ஆசைப்படுங்கள், பேராசைப்படாமல் உழைத்து வாழ்வில் வெற்றிபெறவேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

    சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் வணிகவியல் துறை பேராசிரியர் இளங்கோவன்; கலந்துகொண்டு பேசுகையில்,20 வருடங்களுக்கு முன்பு ஒரு ஊரில் ஒரு தொலைபேசிதான் இருக்கும். ஆனால் இன்று ஒவ்வொருவரின் கையிலும் செல்போன் இருக்கின்றது.

    இதெல்லாம் நேனோ தொழில் நுட்பத்தின் வளர்ச்சி. அதுபோல இன்று செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் நூறு ஆட்கள் செய்ய வேண்டிய வேலையை ஒரு கணினி செய்கிறது. அதற்கேற்ப மாணவர்கள் தயாராக வேண்டும் என ஊக்கப்படுத்தினார்.

    பெங்களூரு, குளோபல் நிறுவன அதிகாரி மஞ்சுரெட்டி பேசியதாவது:-

    தொழிற்சாலைகளில் தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருகிறது. அதற்கேற்ப மாணவர்கள் தயராக இருக்கவேண்டும் என்று கூறினார். இந்த கருத்தரங்கை வெங்கிடசாமி மற்றும் துறை பேராசிரியர்கள் ஒருங்கிணைத்தனர். இதில் பிற கல்லூரிகளில் இருந்தும் 500- க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.முன்னதாக வணிகவியல் துறை தலைவர் மதிவாணன் வரவேற்றார்.

    முடிவில், வணிக கணினி பயன்பாட்டுவியல் துறைத்தலைவர் வெங்கடேசன் நன்றி கூறினார்.

    • வேலை எதற்கும் செல்லாமல் குடித்து விட்டு ஊர் சுற்றி வந்துள்ளார்.
    • மனமுடைந்த மணிகண்டன் அதே பகுதியில் உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்கார பேட்டை அருகேயுள்ள ஈக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 27). இவர் வேலை எதற்கும் செல்லாமல் குடித்து விட்டு ஊர் சுற்றி வந்துள்ளார். இதனை அவரது பெற்றோர் கண்டித்தனர்.

    இதனால் மனமுடைந்த மணிகண்டன் அதே பகுதியில் உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கிராம அதிகாரி லோகநாதன் என்பவர் கொடுத்த புகாரின்பேரில் சிங்கார பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல சூளகிரி அருகேயுள்ள அனுசோனை பகுதியை சேர்ந்த திம்மராயப்பா (65) என்பவர் கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக குடும்பத்தை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

    இதில் மன உளைச்சலில் வாழ்ந்து வந்த திம்மராயப்பா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மகன் லட்சுமியப்பா கொடுத்த புகாரின்பேரில் பேரிகை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • ராய க்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அதிக அளவில் முட்டைக்கோஸ் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
    • விளைச்சல் அமோகமாக உள்ளதால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

    ராயக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை பகுதியில் நல்ல மழை பெய்ததால் விவசாயிகள் காய்கறிகள், கீரை வகைகள் பயிரிட்டு வருகின்றனர்.

    இந்தாண்டு தக்காளி க்கு போதிய விலை கிடைக்கா ததால் விவசாயிகள் மாற்று பயிராக காய்கறிகளை சாகுபடி செய்து வருகி ன்றனா்.

    இவற்றை அறுவடை செய்து ராயக்கோட்டையில் உள்ள காய்கறி மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இவற்றை வியாபாரிகள் வாங்கி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வாகனங்களில் அனுப்பி வருகின்றனர்.

    இதனிடையே ராய க்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அதிக அளவில் முட்டைக்கோஸ் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    இவை தற்போது அறுவடை செய்யப்படுகிறது. விவசாயிகள் மூட்டை, மூட்டையாக காய்கறி மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.

    இதனால் மார்க்கெ ட்டுக்கு முட்டைக்கோஸ் வரத்து அதிகரித்துள்ளதால் அதன் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. ரகத்திற்கு ஏற்ப முட்டைக்கோஸ் விற்பனையாகிறது. அந்த வகையில் ஒரு மூட்டை ரூ.200-க்கும், ஒரு கிலோ சிறிய முட்டைக்கோஸ் ரூ.4-க்கும், 2 கிலோ கொண்ட முட்டைக்கோஸ் ரூ.7-க்கும் விற்பனையாகிறது.

    விலை வீழ்ச்சியால் கவலை அடைந்த விவசாயிகள் ஏாிகளில் முட்டைக்கோசை கொட்டி செல்கின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ராய க்கோட்டை பகுதிக ளில் அதிக அளவில் முட்டைக்கோஸ் பயிரிட ப்பட்டுள்ளது.

    தற்போது விளைச்சல் அமோகமாக உள்ளதால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

    இதனால் முட்டைக்கோஸ் சாகுபடி செய்த விவசாயிகள் ஏரிகளில் கொட்டி செல்கின்றனர். சிலர் கால்நடைகளை விட்டு மேய்த்து வருகின்றனர் என்று கவலையுடன் தெரிவித்தனர்.

    • மெட்ரோ ரெயில் திட்டம் கொண்டு வரும் முயற்சி ஒரு வரப் பிரசாதமாக பார்க்கப்படுகிறது.
    • பலகட்ட தடங்கலுக்கு மத்தியில் முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

    ஓசூர்,

    தமிழ்நாட்டின் மேற்கு மண்டலத்தில் அமைந்துள்ள முக்கியமான தொழில் நகரமான ஓசூரில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகிறது. பல கோடி ரூபாய் மதிப்பில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து தொடர்ந்து முதலீடுகள் குவிந்து வருகிறது.

    இதனால் ஓசூர் வேலை வாய்ப்பை வாரி வழங்கும் முக்கிய மையமாக திகழ்ந்து வருகிறது. மேலும் பெங்களூருக்கு அருகே இருப்பதால் அங்கு வரும் திட்டங்களின் நீட்சி ஓசூருக்கும் கிடைக்க வாய்ப்புள்ளது.

    இந்நிலையில் பெங்களூரு - ஓசூர் நகரங்களை இணைக்கும் விதமாக மெட்ரோ ரெயில் திட்டம் கொண்டு வரும் முயற்சி ஒரு வரப் பிரசாதமாக பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் மத்திய அரசு, கர்நாடகா அரசு, தமிழ்நாடு அரசு, மெட்ரோ, பெங்களூர் மெட்ரோ ரெயில் நிர்வாகம், சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் என பலரின் ஒப்புதலை பெற்று பலகட்ட தடங்கலுக்கு மத்தியில் முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

    இந்நிலையில் ஓசூர் மெட்ரோ ரெயில் திட்டப் பணிகள் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது. இது ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளுக்கு மிகவும் மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

    முன்னதாக மெட்ரோ ரெயில் திட்டத்தின் கொள்கைகள் விதிகளை காரணம் காட்டி இரு மாநிலங்களுக்கும் இடையேயான மெட்ரோ ரெயில் சேவையை செயல்படுத்த முடியாது என தமிழ்நாடு அரசிடம் மத்திய நகர்ப்புற வளர்ச்சி துறை அலுவலர்கள் கூறியுள்ளனர். கிருஷ்ணகிரி எம்.பி. செல்லகுமார் இதில் இருக்கும் சாதகமான அம்சங்களை உரிய சான்றுகளுடன் எடுத்துரைத்துள்ளார்.

    இதன் விளைவாக கொள்கை அடிப்படையில் ஆய்வு பணி மேற்கொள்ள தற்போது அனுமதி கிடைத்திருக்கிறது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அலுவலக ஊழியர்கள், பெண்கள், மருத்துவ வசதிக்காக செல்பவர்கள் என பல்வேறு தரப்பினருக்கும் இது உதவிகரமாக இருக்கிறது.

    அதேபோல் ஓசூரில் இருந்து பெங்களூர் செல்பவர்களுக்கும் பயனளிக்கும் விரைவான சொகுசு பயண அனுபவத்தை பெற முடிகிறது. அதிலும் குறிப்பாக தருமபுரி, ஓசூர், கிருஷ்ணகிரி பகுதியில் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு அடித்தளமாக இந்த மெட்ரோ ரெயில் சேவை விளங்குகிறது.

    ஏற்கனவே பெங்களூருவில் நம்ம மெட்ரோ எனும் பெயரில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது பொம்மசந்திரா வரை செயல்பட்டு வருகின்ற நிலையில் தற்போது அங்கிருந்து அத்திப்பள்ளி வழியாக ஓசூர் வரை நீட்டிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    ஒருவேளை மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு அதிக செலவு ஏற்படும் என கருதினால் மெட்ரோ லைட் திட்டத்தை முன்னெ டுக்கலாம் என கிருஷ்ணகிரி எம்.பி. செல்லகுமார் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பா.ஜனதா சார்பில் கிருஷ்ணகிரி பழைய அரசு தலைமை மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி காந்தி ரோட்டில் அரசு தலைமை மருத்துவமனை இயங்கி வந்தது. போலுப்பள்ளியில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தொடங்கப்பட்டதையடுத்து அங்கு இடமாற்றமானது.

    இந்த நிலையில் காந்தி ரோட்டில் செயல்பட்டு வந்த அரசு தலைமை மருத்துவமனையில், மகப்பேறு சிகிச்சை தவிர அனைத்து சிகிச்சைகளும் நிறுத்தப்பட்டன.

    இதனை கண்டித்து கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பா.ஜனதா சார்பில் கிருஷ்ணகிரி பழைய அரசு தலைமை மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில துணை தலைவர் நரேந்திரன் மற்றும் தேசிய பொதுக்குழு உறுப்பினரும், மாநில செய்தி தொடர்பாளருமான நரசிம்மன் கலந்து கொண்டு பேசினர்.

    பழைய கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையை, 110 படுக்கைகள் கொண்ட தாலுகா மருத்துவமனையாக மாற்றி உத்தரவிட வேண்டும், அனைத்து சிகிச்சை பிரிவுகளையும் தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். 

    • சந்திரசேகரா மருத்துவ மனையுடன்இணைந்து மருத்துவ முகாம் நடத்தினர்.
    • செவிலியர்கள், ஊராட்சி செயலாளர்கள் கஜேந்திரன், சிவசங்கரன் உள்ளிட்ட பல கலந்து கொண்டனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் காட்டாகரம் ஊராட்சி சந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஓலா நிறுவனமும், ஒசூர் சந்திரசேகரா மருத்துவமனையும் இணைந்து மருத்துவ முகாம் நடத்தினர்.

    முகாம் ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதன் தலைமையில், வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணியன், ஓலா நிறுவன அதிகாரிகள் ஜெயராமன், தனுஜ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது,

    இம்முகாமில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து 400-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர், இதில் மருத்துவர்கள் ஆசிக், ப்ரித்தி, சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள், ஊராட்சி செயலாளர்கள் கஜேந்திரன், சிவசங்கரன் உள்ளிட்ட பல கலந்து கொண்டனர்.

    • அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.
    • போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கினார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அருகே உள்ள நெக்குந்தி அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. இந்த விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் தாமோதரன் தலைமை தாங்கினார்.

    பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மூர்த்தி மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். பட்டதாரி ஆசிரியர் தமிழ்செல்வன் வரவேற்புரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக ஊராட்சி மன்றத் தலைவர்

    பானுப்பிரியா நாராயணன் கலந்துகொண்டு, பள்ளி அளவில் படிப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கும், பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கினார்.

    நிகழ்ச்சியல், ஊர் பிரமுகர்கள் சீனிகவுண்டர், சின்னசாமி, வாசு, மாரியப்பன், கவுன்சிர் வேடி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளியின் ஆசிரிய, ஆசிரியைகள் செய்திருந்தனர்.

    • தம்பியான மோனுகுமார் (வயது 19) என்பவரை தன்னுடன் அழைத்து வந்து ஓசூரில் வேலைக்கு சேர்த்து விட்டுள்ளார்.
    • தங்கியுள்ள அறையிலேயே தூக்கு போட்டு மோனுகுமார் தற்கொலை செய்து கொண்டார்.

    கிருஷ்ணகிரி,

    பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் கிருஷ்ணதாஸ். இவரது மகன் துளசிதாஸ் குமார். இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கொத்தகொண்ட பள்ளியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

    கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஊருக்கு சென்ற துளசிதாஸ்குமார் தனது தம்பியான மோனுகுமார் (வயது 19) என்பவரை தன்னுடன் அழைத்து வந்து ஓசூரில் வேலைக்கு சேர்த்து விட்டுள்ளார்.

    ஆனால் சொந்த ஊரை விட்டு வர மனம் இல்லாத மோனுகுமார் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் தாங்கள் தங்கியுள்ள அறையிலேயே தூக்கு போட்டு மோனுகுமார் தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து துளசிதாஸ் குமார் கொடுத்த புகாரின்பேரில் மத்திகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • ஜெயலலிதாவின் 75-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
    • கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    ஓசூர்,

    ஓசூர் அருகே மத்திகிரியில், மாநகர தெற்கு பகுதி அ.தி.மு.க. சார்பில், கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளரும், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சருமான ஜெயலலிதாவின் 75-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி, பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்கு, தெற்கு பகுதி செயலாளரும், முன்னாள் நகர்மன்ற உறுப்பினருமான பி.ஆர்.வாசுதேவன் தலைமை தாங்கினார்.

    மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சிட்டி ஜெகதீசன், எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் ஜெ.பி.என்ற ஜெயப்பிரகாஷ் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். விழாவின் போது, ஜெயலலிதா படத்துக்கு பூஜைகள் செய்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

    பின்னர், கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. மாமன்ற உறுப்பினர் கலாவதி, மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற நிர்வாகிகள் சாக்கப்பா, கிருஷ்ணன், மற்றும் முகமது இப்ராகிம், சுரேஷ்பாபு, முத்துராஜ் உள்ளிட்ட கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

    • 9 தேர்வுகூட காவலர்கள் என மொத்தம் 44 நபர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
    • 125 நபர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை.

    கிருஷ்ணகிரி, 

    தமிழ்நாடு அரசுப்ப ணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) குரூப் 2 பதவியில் (நேர்முக தேர்வு) இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் -11 இடம், நன்னடத்தை அலுவலர்கள் -2, தொழிலாளர் துறை உதவி ஆய்வாளர் -19, சார் பதிவாளர் (கிரேடு 2) 17, இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் (மாற்றுத்திறனாளி) -8, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை சிறப்பு உதவியாளர் -1, காவல் ஆணையரகம் நுண்ணறிவு பிரிவில் தனி பிரிவு உதவியாளர் -15,

    குற்றப்புலனாய்வு துறை சிறப்பு பிரிவில் தனிப்பிரிவு உதவியாளர் -43 இடங்கள், குரூப் 2ஏ (நேர்முக தேர்வு அல்லாத பதவி) பதவியில் நகராட்சி ஆணையர் (கிரேடு 2)-9 இடம், தலைமை செயலகம் உதவி பிரிவு அலுவலர் -11, முதுநிலை ஆய்வாளர் -291, இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர் -972 ஆகிய பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

    இந்த பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு கடந்த மே மாதம் 21-ந் தேதி நடந்தது. முதல் நிலை தேர்வுக்கான முடிவு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 10-ந் தேதி வெளியானது. அதில் தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கான மெயின் தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் 20 மாவட்டங்களில் நடந்தது.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 9 மையங்களில் நடந்த இந்த தேர்வினை கண்காணிக்க 9 முதன்மை கண்காணிப்பாளர்களும், 1 பறக்கும்படை, 3 நடமாடும் அலகு, 9 ஆய்வு அலுவலர்கள், 10 வீடியோ கிராபர்கள், 3 ஆயுதம் ஏந்திய காவலர்கள், 9 தேர்வுகூட காவலர்கள் என மொத்தம் 44 நபர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.

    அத்துடன் தேர்வ ர்களுக்கு போக்குவரத்து வசதி, மின்சார வசதி, குடிநீர் வசதி மற்றும் கழிப்பிட வசதி உள்ளிட்ட அனைத்து அனைதது அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டிருந்தது.

    கிருஷ்ணகிரி மாவ ட்டத்தில் இந்த தேர்வினை எழுத 1687 நபர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதில் 1562 நபர்கள் தேர்வு எழுதினர். 125 நபர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை. கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, வருவாய் கோட்டாட்சியர் சுகுமார், தாசில்தார் சம்பத்குமார், பள்ளியின் தலைமை ஆசிரியர் மகேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை அளிக்கப்படுகிறது.
    • 183 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதவில்லை.

    கிருஷ்ணகிரி, 

    மத்திய அரசின் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டத்தில் (என்.எம்.எம்.எஸ்.,) அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை அளிக்கப்படுகிறது.

    அதற்காக ஆண்டுதோறும், நாடு முழுவதும் தேர்வு நடத்தப்பட்டு கல்வி உதவித்தொகை வழங்கப்படும். அதன்படி, தமிழகத்தில் 6,695 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்களுக்கு ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ்-2 முடிக்கும் வரை மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று நடந்த இந்த தேர்வு கிருஷ்ணகிரி, ஓசூர் கல்வி மாவட்டங்களில் 27 தேர்வு மையங்களில் நடந்தப்பட்டது.

    இதற்கு விண்ணப்பித்திருந்த தகுதியான 7,697 மாணவ, மாணவிகளில் 7,514 மாணவ, மாணவிகள் தேர்வினை எழுதினர். 183 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதவில்லை.

    ×