பள்ளி ஆண்டு விழாவில் மாணவர்களுக்கு பரிசு

அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கினார்.
பள்ளி ஆண்டு விழாவில் மாணவர்களுக்கு பரிசு
Published on

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அருகே உள்ள நெக்குந்தி அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. இந்த விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் தாமோதரன் தலைமை தாங்கினார்.

பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மூர்த்தி மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். பட்டதாரி ஆசிரியர் தமிழ்செல்வன் வரவேற்புரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக ஊராட்சி மன்றத் தலைவர்

பானுப்பிரியா நாராயணன் கலந்துகொண்டு, பள்ளி அளவில் படிப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கும், பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கினார்.

நிகழ்ச்சியல், ஊர் பிரமுகர்கள் சீனிகவுண்டர், சின்னசாமி, வாசு, மாரியப்பன், கவுன்சிர் வேடி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளியின் ஆசிரிய, ஆசிரியைகள் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com