என் மலர்
உள்ளூர் செய்திகள்

குடிப்பதை பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் தற்கொலை
- வேலை எதற்கும் செல்லாமல் குடித்து விட்டு ஊர் சுற்றி வந்துள்ளார்.
- மனமுடைந்த மணிகண்டன் அதே பகுதியில் உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்கார பேட்டை அருகேயுள்ள ஈக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 27). இவர் வேலை எதற்கும் செல்லாமல் குடித்து விட்டு ஊர் சுற்றி வந்துள்ளார். இதனை அவரது பெற்றோர் கண்டித்தனர்.
இதனால் மனமுடைந்த மணிகண்டன் அதே பகுதியில் உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கிராம அதிகாரி லோகநாதன் என்பவர் கொடுத்த புகாரின்பேரில் சிங்கார பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல சூளகிரி அருகேயுள்ள அனுசோனை பகுதியை சேர்ந்த திம்மராயப்பா (65) என்பவர் கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக குடும்பத்தை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
இதில் மன உளைச்சலில் வாழ்ந்து வந்த திம்மராயப்பா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மகன் லட்சுமியப்பா கொடுத்த புகாரின்பேரில் பேரிகை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






