என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரியில் பா.ஜனதா ஆர்ப்பாட்டம்
- பா.ஜனதா சார்பில் கிருஷ்ணகிரி பழைய அரசு தலைமை மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
- கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி காந்தி ரோட்டில் அரசு தலைமை மருத்துவமனை இயங்கி வந்தது. போலுப்பள்ளியில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தொடங்கப்பட்டதையடுத்து அங்கு இடமாற்றமானது.
இந்த நிலையில் காந்தி ரோட்டில் செயல்பட்டு வந்த அரசு தலைமை மருத்துவமனையில், மகப்பேறு சிகிச்சை தவிர அனைத்து சிகிச்சைகளும் நிறுத்தப்பட்டன.
இதனை கண்டித்து கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பா.ஜனதா சார்பில் கிருஷ்ணகிரி பழைய அரசு தலைமை மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில துணை தலைவர் நரேந்திரன் மற்றும் தேசிய பொதுக்குழு உறுப்பினரும், மாநில செய்தி தொடர்பாளருமான நரசிம்மன் கலந்து கொண்டு பேசினர்.
பழைய கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையை, 110 படுக்கைகள் கொண்ட தாலுகா மருத்துவமனையாக மாற்றி உத்தரவிட வேண்டும், அனைத்து சிகிச்சை பிரிவுகளையும் தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.