என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஓசூர் அருகே ஜெயலலிதா பிறந்த நாள் விழா
- ஜெயலலிதாவின் 75-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
- கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
ஓசூர்,
ஓசூர் அருகே மத்திகிரியில், மாநகர தெற்கு பகுதி அ.தி.மு.க. சார்பில், கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளரும், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சருமான ஜெயலலிதாவின் 75-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்கு, தெற்கு பகுதி செயலாளரும், முன்னாள் நகர்மன்ற உறுப்பினருமான பி.ஆர்.வாசுதேவன் தலைமை தாங்கினார்.
மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சிட்டி ஜெகதீசன், எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் ஜெ.பி.என்ற ஜெயப்பிரகாஷ் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். விழாவின் போது, ஜெயலலிதா படத்துக்கு பூஜைகள் செய்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
பின்னர், கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. மாமன்ற உறுப்பினர் கலாவதி, மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற நிர்வாகிகள் சாக்கப்பா, கிருஷ்ணன், மற்றும் முகமது இப்ராகிம், சுரேஷ்பாபு, முத்துராஜ் உள்ளிட்ட கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.






