என் மலர்
கிருஷ்ணகிரி
- இருசக்கர வாகனத்தில் மத்தூர்- திருப்பத்தூர் சாலையில் சென்றார்.
- அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகேயுள்ள கொப்பம்பட்டியை சேர்ந்தவர் லட்சுமி (வயது 53). திருமண தரகர்.
இவர் இருசக்கர வாகனத்தில் மத்தூர்- திருப்பத்தூர் சாலையில் சென்றார்.அப்போது அவ்வழியாக வந்த கார் ஒன்று அவர் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து மத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- எதிர்பாராத விதமாக இரண்டு வாகனங்களும் நேர்க்கு நேர் மோதிக்கொண்டன.
- மொபட்டில் சென்றபோது தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அப்பாவு நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 19). இவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
எதிரே அனுஷா (24) என்பவர் மற்றொரு மொபட்டில் வந்துள்ளார். எதிர்பாராத விதமாக இரண்டு வாகனங்களும் நேர்க்கு நேர் மோதிக்கொண்டன.
இதில் அப்பாவு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.அனுஷா படுகாயம் அடைந்தார். அவரை ஓசூர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதேபோல கிருஷ்ணகிரி மாவட்டம் பஞ்சாத்திபுரம் புறம் பகுதியை சேர்ந்த வேங்கடப்பா (55) என்பவர் மொபட்டில் சென்றபோது தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து அவரது மகள் ஷோபா கொடுத்த புகாரின்பேரில் கெலமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- இ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிட்டு, அமோக வெற்றி பெற்றார்.
- வார்டு செயலாளர்கள், கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ஓசூர்,
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மத சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் இ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிட்டு, அமோக வெற்றி பெற்றார்.
இதனை கொண்டாடும் வகையில், ஓசூர் தாலுகா அலுவலக சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு நேற்று மாலை,மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
மேலும் இதில், மாவட்ட துணை செயலாளர் பி.முருகன், ஓசூர் மாநகர செயலாளரும் மேயருமான எஸ்.ஏ.சத்யா, மற்றும் மாநில மாவட்ட ,மாநகர, ஒன்றிய, பகுதி நிர்வாகிகள், இந்நாள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், வார்டு செயலாளர்கள், கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- குடும்பத்துடன் அப்பகுதியில் நடந்த எருது விடும் விழாவை காண சென்றார்.
- ரூ.1,10 ரொக்கப்பணம், 2 பவுன் தங்க நகை ஆகியவற்றை திருடி சென்றுவிட்டனர்.
கிருஷ் ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை அருகேயுள்ள முதுகுறுக்கி கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரா (வயது 50). இவர் தனது குடும்பத்துடன் அப்பகுதியில் நடந்த எருது விடும் விழாவை காண சென்றார்.
அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு மர்ம நபர்கள் அவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர்.
வீட்டிற்குள் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த ரூ.1,10 ரொக்கப்பணம், 2 பவுன் தங்க நகை ஆகியவற்றை திருடி சென்றுவிட்டனர்.
இதுகுறித்து அவ்வழியாக சென்றவர்கள் பார்த்துவிட்டு ராமச்சந்திராவுக்கு தெரிவித்தனர். அதன்பேரில் அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பேரிகை போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம திருடர்களை தேடி வருகின்றனர்.
- குழந்தைகள், மாணவர்கள் பயன்பெறும் வகையில் நடைபெற்றது.
- மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தொடக்கப்பள்ளி வளாகத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மற்றும் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல வாரியம் சார்பில் மாற்றுத்திற னாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம் 0 வயது முதல் 18 வயது வரையுள்ள குழந்தைகள், மாணவர்கள் பயன்பெறும் வகையில் நடைபெற்றது.
முகாமிற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமை தாங்கினார். ஒசூர் மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) கோபாலப்பா முன்னிலை வகித்தார். வட்டார வள மைய பொறுப்பு மேற்பார்வையாளர் முகாமை வழி நடத்தினார்.
முகாமில் 83 பேர் கலந்து கொண்டனர். அவர்களை மருத்துவர்கள் உடனுக்குடன் பரிசோதனை செய்து தகுதியுள்ள 38 மாணவர்களுக்கு மாற்றுத் திறனாளி அடையாள அட்டை வழங்க பரிந்துரைத்தனர்.
அட்டை புதுப்பித்தல் 12 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் சக்கர நாற்காலி 2 பேருக்கும், காதொலி கருவி 4 பேருக்கும் வழங்கப்பட்டது.
விழாவில் கலந்து கொண்ட மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாசிரியர்கள் செய்திருந்தனர். ஒருங்கிணைப்பாளர் வித்யாலட்சுமி கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
- லாட்டரி சீட்டு விற்றதாக நாராயண நகர் பகுதியை சேர்ந்த முருகன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
- பணம் வைத்து சூதாடிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை பகுதியில் அனுமதியின்றி பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கல்லாவி பிரிவு பகுதியில் லாட்டரி சீட்டு விற்றதாக நாராயண நகர் பகுதியை சேர்ந்த முருகன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இதே போல் சிங்காரபேட்டை கீழ் மத்தூர் ஏரிக்கரையில் பணம் வைத்து சூதாடிய முத்து, குப்பன், அண்ணாமலை, கேசவன், வரதராஜ், ராஜேஸ் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
- எருதுகளை மாடு பிடி வீரர்கள் துரத்திச் சென்று அடக்கி எருதுகளின் கொம்புகளில் கட்டப்பட்டிருந்த பரிசுகளை மாடுபிடி வீரர்கள் எருதுகளை பிடித்து அடக்கி பரிசுகளை அள்ளி சென்றனர்.
- சுமார் 20,000-க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு விழாவினை கண்டு களித்தனர்.
கிருஷ்ணகிரி,
தமிழர்களின் பொங்கல் விழாவின் தொடர்ச்சியாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிராமங்கள் தோறும் எருது ஜல்லிகட்டு, எருது ஓட்டம், எருதுவிடும் போட்டி, மஞ்சுவிரட்டு உள்ளிட்ட பல்வேறு எருதுவிடும் விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில்கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை அருகே உள்ள முது குறிக்கி கிராமத்தில் நடைப்பெற்ற இந்த மஞ்சு விரட்டும்போட்டியை துவக்கிவைக்க வருகை தந்த கிருஷ்ணகிரி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்லக்குமாருக்கு ஊராட்சி மன்றத் தலைவர் மஞ்சுநாத் தலைமையில் கிராம மக்கள் சிறப்பானவர வேரவேற்பு அளித்தனர்.
இதனைத்தொடர்ந்து துவங்கிய மாபெரும் மஞ்சுவிரட்டும் போட்டியை காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் செல்லக் குமார் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த மஞ்சு விரட்டும் போட்டியில் கிருஷ்ணகிரி, ஓசூர், பேரிகை, பாகலூர், வேப்ப னஹள்ளி தர்மபுரி மட்டுமின்றி மற்றும் ஆந்திரா, கர்நாடகா என பல்வேறு இடங்களில் இருந்து 600-க்கு மேற்பட்ட எருதுகள் கலந்துக் கொண்டன.
முன்னதாக இப்போட்டி யில் கலந்து கொண்ட எருதுகளுக்கு கால்நடை மருத்துவர்கள் மூலம் பரிசோதனைகள் செய்யப்பட்டது, இதனைத் தொடர்ந்து வாடிவாசல் வழியாக ஒவ்வெரு எருதுகளாக விடப்பட்டது.
விழாவில் கலத்துக் கொண்ட எருதுகளுக்கு அலங்கரிக்கப்பட்ட கொம்புகளில் ரொக்க பரிசுகள் அடங்கிய தட்டிகள் கட்டப்பட்ட நிலையில் மக்கள் மத்தியில் சீறிப்பாய்ந்து ஓடிய
எருதுகளை மாடு பிடி வீரர்கள் துரத்திச் சென்று அடக்கி எருததுகளின் கொம்புகளில் கட்டப்பட்டிருந்த பரிசுகளை சுமார் 200 க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் எருதுகளை பிடித்து அடக்கி பரிசுகளை அள்ளி சென்றனர்.
இந்த எருது விடும் விழாவை காண கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா எல்லைைப்பகுதிகளில் இருந்து சுமார் 20,000-க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு விழாவினை கண்டு களித்தனர்.
இந்த விழாவின்போது காங்கிரஸ் மாட்டத் துணைத்தலைவர் சேகர், மாநில பேச்சாளர் நாஞ்சில் ஜேசு, எருது விடும் சங்கத்தின் தலைவர் இராமமூர்த்தி,மாவட்ட விவசாய பிரிவு தலைவர் ஹரிஸ், வட்டாரத் துணைத்தலைவர் பாண்டியன, ஊராட்சி மன்றத் தலைவர் சக்கராப்பா உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்துக் கொண்டனர்கள்..
- குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7,850 வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- இக்கூட்டத்திற்கு, மாநில தலைவர் ஸ்ரீதரன் தலைமை தாங்கினார்.
ஓசூர்
ஓசூர் - தேன்கனி க்கோட்டை சாலையில், தின்னூரில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடந்தது. கூட்டத்தில், சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் உள்ளிட்ட தொகுப்பூதியம் பெறும் அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7,850 வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், மாநில அளவில் அனைத்து பகுதிகளிலிருந்தும் ஓய்வூதியர்களை திரட்டி, இம்மாத கடைசி வாரத்தில் சென்னையில் மாநில கோரிக்கை சிறப்பு மாநாடு நடத்துவது எனவும், இந்த மாநாட்டிற்கு சத்துணவு துறை அமைச்சர் மற்றும் தொழிற்சங்க தலைவர்களை அழைப்பது எனவும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்திற்கு, மாநில தலைவர் ஸ்ரீதரன் தலைமை தாங்கினார்.கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் துரை வரவேற்றார். பொதுச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி செயல் அறிக்கை வாசித்தார். இதில் மாநில பொருளாளர் ஜெயசந்திரன், மற்றும் மாநில,மாவட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
முடிவில், மாவட்ட பொருளாளர் சீனிவாசலு நன்றி கூறினார்.
- இவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- இது ககறித்து கெலமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அடுத்துள்ள துளசி நகர் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் கோபிநாத் (வயது29). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கெலமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மா விவசாயத்தை காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
- பையூர் வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் மாங்கூழ் பரிசோதனை ஆய்வகம் அமைக்க வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 40 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மா சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஆண்டுதோறும் 4 லட்சம் மெட்ரிக் டன் மாம்பழங்கள் அறுவடை செய்யப்படுகின்றன.
மா நுகர்வு, ஊறுகாய் தயாரிப்பு உள்ளிட்ட பயன்பாட்டுக்குப்போக, சுமார் 2 லட்சத்து 25 ஆயிரம் டன் பழங்கள் மாவட்டத்தில் உள்ள 27 மாங்கூழ் தொழிற்சாலைகளுக்குச் செல்கிறது. இங்கு தயாரிக்கப்படும் மாங்கூழ் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படு கின்றன.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு இயற்கை இடர்பாடுகளால் மா விவசாயிகள் வருவாய் இழப்பைச் சந்தித்து வருகின்றனர். மேலும், மாங்கூழ் உற்பத்தியாளர்களும் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். இதே நிலை தொடர்ந்தால் மா சாகுபடி பரப்பு குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, மா விவசாயத்தை காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இது தொடர்பாக கிருஷ்ணகிரி- தருமபுரி மாவட்ட பழம் மற்றும் காய்கறி பதப்படுத்துவோர் கூட்ட மைப்புச ்சேர்ந்தவர்கள் மற்றும் விவசாயிகள் கூறியதாவது:-
கிருஷ்ணகிரியை மையமாகக் கொண்டு மா ஏற்றுமதி மண்டலம் அமைக்க வேண்டும். மா மரங்களைத் தாக்கும், 'த்ரிப்ஸ்' நோயைக் கட்டுப்படுத்த ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். மா விளைச்சல் அதிகரித்து, விலை சரியும் காலங்களில் ஆந்திர, கர்நாடக மாநிலங்களில் விவசாயிகளுக்கு மானியமாக ஒரு கிலோவுக்கு ரூ.5 மானியமாக வழங்கி வருகின்றனர். இதே போல, தமிழக அரசும் விவசாயிகளுக்கு மானியம் வழங்க வேண்டும்.
மாங்கூழ் உற்பத்தி செய்யும்போது கிடைக்கும் தோல், நார் உள்ளிட்ட கழிவுகளை வீணாக்காமல், அவற்றைக் கொண்டு பயோ காஸ் உற்பத்தி செய்யும் நிலையம் அமைக்க வேண்டும். பயோ காஸ் மூலம் பேருந்து, ஜெனரேட்டர் உள்ளிட்டவற்றை இயக்கலாம்.
மேலும், இயற்கை உரம், கால்நடை தீவனம், பெக்டின் உள்ளிட்ட மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களையும் தயாரிக்கலாம்.
பையூர் வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் மாங்கூழ் பரிசோதனை ஆய்வகம் அமைக்க வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் மற்றும் கிராம மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் மா விவசாயத்தைக் காக்க, தமிழக அரசு புதிய திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்.
இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து விரிவாகக் கூறியுள்ளோம். எனவே, மா விவசாயத்துக்கான புதிய திட்டங்களை அரசு செயல்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நாகம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் செல்வி கதிர்வேல் தலைமை வகித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
- குழுத் தலைவர் சாந்தா குணசேகரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கொடியேற்றி வைத்தார்
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் வடக்கு ஒன்றியம் நாகம்பட்டி ஊராட்சி என். மோட்டூரில் தமிழகத முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்தநாள் கொண்டாடபட்டது, இதனையடுத்து நாகம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் செல்வி கதிர்வேல் தலைமை வகித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய குழுத் தலைவர் சாந்தா குணசேகரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கொடியேற்றி வைத்தார் . மேலும் மத்தூர் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் பிரேம்குமார் ,என் மோட்டூர் கிளை செயலாளர் திருநாவுக்கரசு, வார்டு உறுப்பினர் சக்திவேல், சங்கர், ராமமூர்த்தி, முன்னாள் கிளை செயலாளர் அன்பு, கிருஷ்ணமூர்த்தி, மோகன்ராஜ், ராம்குமார், அன்பழகன், முருகன் மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- ஆவின் பால் உற்பத்தி நிலையம் ஆகிய பகுதிகளுக்கு மாணவர்களை களப்பயணம் அழைத்துச் சென்றனர்.
- பெருங்கற்கால மண்பாண்டங்கள், வரலாற்றுக் கால நடுகற்கள் மற்றும் கல்வெட்டுகள் ஆகியவை குறித்து விளக்கம் அளித்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அடுத்த கட்டிக்கானப்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியின் தேசிய பசுமைப்படை மற்றும் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் ஜே.ஆர்.சி., ஆகிய அமைப்புகள் இணைந்து, அரசு அருங்காட்சியகம் மற்றும் ஆவின் பால் உற்பத்தி நிலையம் ஆகிய பகுதிகளுக்கு மாணவர்களை களப்பயணம் அழைத்துச் சென்றனர்.
பள்ளியின் தலைமை ஆசிரியர் திம்மராஜ், தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, ஜே.ஆர்.சி., ஒருங்கிணைப்பாளர் கவிதா, உதவி தலைமை ஆசிரியர் சாந்தி, சமூக அறிவியல் ஆசிரியர் கலைச்செல்வி, தமிழாசிரியர் விஜயகுமார் ஆகியோருடன் 45 மாணவ, மாணவிகள் களப்பயணம் சென்று பார்வையிட்டனர்.
இதில், அரசு அருங்காட்சியகம் சென்ற மாணவ, மாணவிகளுக்கு, அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ், தொல் பொருள் சான்றுக்கான நடுகல், பாறைக்கல்வெட்டு, மாவட்ட வரலாற்றை குறிக்கும் வகையில் காட்சிப் படுத்தப்பட்டுள்ள புதிய கற்கால கருவிகள், பெருங்கற்கால மண்பாண்டங்கள், வரலாற்றுக் கால நடுகற்கள் மற்றும் கல்வெட்டுகள் ஆகியவை குறித்து விளக்கம் அளித்தார்.
மேலும், மனித உடலியல் பாகங்கள், புவியியல் பகுதி மற்றும் ஓவியங்கள் போன்ற கலைப்பொருட்கள் குறித்தும் மாணவர்கள் விரிவாக அறிந்து கொண்டனர். போர்க்காலங்களில் பயன்படுத்தப்பட்ட பீரங்கி மற்றும் போர்வாட்கள் மாணவர்களை பெரிதும் கவர்ந்தன. ஆவின் பால் உற்பத்தி நிலையத்திற்கு சென்ற மாணவ, மாணவிகள், பால் பொருள் உற்பத்தி, நெய் தயாரிக்கும் இடம், பால் பதப்படுத்தும் இடம், பாலில் இருந்து பல்வேறு உப பொருட்கள் தயாரிக்கும் பகுதிகளை பார்வையிட்டனர்.






