என் மலர்
உள்ளூர் செய்திகள்

முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் சாந்தா குணசேகரன் தி.மு.க கட்சி கொடியேற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார்.
என்.மோட்டூர் கிளை சார்பில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா
- நாகம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் செல்வி கதிர்வேல் தலைமை வகித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
- குழுத் தலைவர் சாந்தா குணசேகரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கொடியேற்றி வைத்தார்
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் வடக்கு ஒன்றியம் நாகம்பட்டி ஊராட்சி என். மோட்டூரில் தமிழகத முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்தநாள் கொண்டாடபட்டது, இதனையடுத்து நாகம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் செல்வி கதிர்வேல் தலைமை வகித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய குழுத் தலைவர் சாந்தா குணசேகரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கொடியேற்றி வைத்தார் . மேலும் மத்தூர் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் பிரேம்குமார் ,என் மோட்டூர் கிளை செயலாளர் திருநாவுக்கரசு, வார்டு உறுப்பினர் சக்திவேல், சங்கர், ராமமூர்த்தி, முன்னாள் கிளை செயலாளர் அன்பு, கிருஷ்ணமூர்த்தி, மோகன்ராஜ், ராம்குமார், அன்பழகன், முருகன் மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






