என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூரில்  தி.மு.க.வினர் கொண்டாட்டம்
    X

    ஓசூரில் தி.மு.க.வினர் கொண்டாட்டம்

    • இ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிட்டு, அமோக வெற்றி பெற்றார்.
    • வார்டு செயலாளர்கள், கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ஓசூர்,

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மத சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் இ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிட்டு, அமோக வெற்றி பெற்றார்.

    இதனை கொண்டாடும் வகையில், ஓசூர் தாலுகா அலுவலக சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு நேற்று மாலை,மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

    மேலும் இதில், மாவட்ட துணை செயலாளர் பி.முருகன், ஓசூர் மாநகர செயலாளரும் மேயருமான எஸ்.ஏ.சத்யா, மற்றும் மாநில மாவட்ட ,மாநகர, ஒன்றிய, பகுதி நிர்வாகிகள், இந்நாள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், வார்டு செயலாளர்கள், கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×