என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • அரசின் ரகசியங்களை வெளிநாட்டு ஏஜன்சிக்கு விற்க முயற்சி செய்ததாக, ஓசூர் அருகே பொறியியல் பட்டதாரியை போலீசார் கைது செய்தனர்.
    • பொறியியல் பட்டதாரியை சேலம் மத்திய சிறையில் அடைத்த போலீசார், பின்னணியில் இருக்கும் ஏஜென்சிகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த பைரகொண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணா ரெட்டியின் மகன் உதயகுமார்.

    இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூருவில் உள்ள மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆய்வகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றினார்.

    பணியின்போது ஆய்வகத்தில் இருந்த ரகசியம் ஆவணங்களை அவர் தனது செல்போனில் படம் எடுத்ததாகத் தெரிகிறது. பணியில் இருந்து வெளியேறிய பிறகு அந்த ஆவணங்களை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஏஜென்சிகளுக்கு அவர் விற்பனை செய்ய முயற்சி செய்வதாக மத்திய பாதுகாப்பு அமைச்சகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.

    அவர்களின் உத்தரவைத் தொடர்ந்து, கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறையினர், மதகொண்டப்பள்ளி அருகே உதயகுமாரைக் கைது செய்தனர். அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்த போலீசார், பின்னணியில் இருக்கும் ஏஜென்சிகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 5-வது சிப்காட் 3,034 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படுகிறது.
    • அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே சிப்காட் அமைக்க விளை நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 200 விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி மற்றும் தேன்கனிக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட உத்தனப்பள்ளி, அயர்னப்பள்ளி நாகமங்கலம் ஊராட்சிகளில் 5-வது சிப்காட் 3,034 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படுகிறது.

    இதற்கு விவசாய நிலங்கள் கையகப்படுத்தினால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். இதே போல், சிப்காட் அமைய உள்ள உள்ள பகுதியில் குடியிருப்புகளும் உள்ளதால் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

    இதனால் விவசாய நிலங்களை கையகப்படுத்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து உத்தனப்பள்ளி வருவாய் ஆய்வாளர் அலுவலகம் எதிரே தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பல்வேறு போராட்டங்களில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    • தீ்ராத வயிற்று வலி இருந்து வந்தது. பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.
    • அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் அங்கு சிகி்ச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி அருகேயுள்ள காட்டனூரை சேர்ந்தவர் தமிழரசன் (வயது 29). இவருக்கு தீ்ராத வாயிற்று வலி இருந்து வந்தது. பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.

    இதில் மனமுடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு மொரப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் அங்கு சிகி்ச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இது குறித்து கல்லாவி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இதேபோல தேன்கனி கோட்டை அருகேயுள்ள குடிசாதனபள்ளி கிராமத்தை சேர்ந்த முருகேசன் (38) என்பவர் கடன் பிரச்சனையால் மனமுடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து அவரது மனைவி சைத்ரா கொடுத்த புகாரின்பேரில் தேன்கனி கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வுருகின்றனர்.

    • 700-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
    • கையில் கம்பை வைத்துக் கொண்டு பாதுகாப்புக்காக இருந்து வருகிறார்.

    காவேரிப்பட்டனம்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள செட்டிமாரம்பட்டி கிராமத்தில் 700-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இவர்கள் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊரை காலி செய்து விட்டு குடும்பம் குடும்பமாக திருப்பதிக்கு சென்று வருவது வழக்கம். இது அறிவிக்கப்படாத ஊர் கட்டுப்பாடாக இன்று வரை தொடர்ந்து வழக்கத்தில் இருந்து வருகிறது. இதையொட்டி இந்தாண்டு கிராம மக்கள் திருப்பதிக்கு ஆன்மிக பயணம் மேற்கொள்ள முடிவு செய்தனர்.

    இந்த ஆன்மிக பயணத்திற்காக ஒவ்வொரு வீட்டிலும் மஞ்சள் துணி கட்டிய உண்டியல் வைத்தனர். அதில் பொதுமக்கள் சனிக்கிழமை தோறும் விரதம் இருந்து காணிக்கை போட்டு வைத்தனர். காவல் தெய்வமான ஊர் பூசாரி இந்தநிலையில் அந்த உண்டியலை எடுத்துக் கொண்டு கிராம மக்கள் வீடுகளை பூட்டி விட்டு நேற்று 15 பஸ்களில் ஊரை காலி செய்து விட்டு குடும்பத்துடன் திருப்பதிக்கு புறப்பட்டனர்.

    முன்னதாக, அவர்கள் ஊர் தலைவர் மாரியப்பன் தலைமையில், கிராமங்களை சுற்றிலும் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து கிராம மக்கள் பஸ்களில் திருப்பதிக்கு சென்றனர்.

    ஊரின் வழக்கம்படி ஊர் பூசாரி காவல் தெய்வமாக எல்லையில் கையில் கம்பை வைத்துக் கொண்டு பாதுகாப்புக்காக இருந்து வருகிறார்.

    திருப்பதி கோவிலுக்கு சென்ற கிராம மக்கள் வந்தவுடன் சாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்து ஊர் பூசாரிக்கு ஊர் மரியாதை செய்த பின்னர் அவரவர்கள் தங்களுடைய வீடுகளுக்கு செல்வார்கள். ஊரை காலி செய்து விட்டு பொதுமக்கள் குடும்பத்தினருடன் ஆன்மிக பயணம் சென்றதால் கிராமமே வெறிச்சோடியது. இதே போல தருமபுரி மாவட்டம்,நல்லம்பள்ளி வட்டம்,இண்டூர் அருகே உள்ள சோமனஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட சிறுகலூர் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

    கடந்த 80 ஆண்டுகளுக்கு முன்பு பெருமாள் கோயில் கட்ட முடிவு செய்துள்ளனர்.கோயில் கட்டி முடித்த பின்பு ஊரில் உள்ள அனைவரும் ஆந்திர மாநிலத்தில் திருப்பதி கோயிலுக்கு செல்ல முடிவு செயௌதுள்ளனர்,

    ஆனால் ஏதோ காரணத்தால் கோயில் கடௌடும் பணி நின்றுவிட்டது. இந்நிலையில் அக்கிராமத்தை பொது மக்கள் தம் முன்னோர்களின் வேண்டு தலை நிறைவேற்றும் வகையில் 80 வருடங்களுக்கு பிறகு ஊரில் கோயில் ட்டி கும்பாபிசேம் முடித்துள்ளனர்.

    இந்நிலையில் நேற்று அக்கிராமத்தை சேர்ந்த மக்கள் திருப்பதிக்கு செல்ல முடிவு செய்தனர். இதுகுறித்து பேசிய கிராம மக்கள், தமது முன்னோர்கள் திருப்பதியிலுள்ள பெருமாள் கோவிலை போன்று ஒரு கோவிலை தங்களது கிராமத்தில் கட்ட வேண்டும் என்றும், கோவிலை கட்டி முடித்த பிறகே திருப்பதிக்கு சென்று பெருமாளை தரிசிப்போம் என வேண்டி கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

    இதனால், முன்னோர்களின் வேண்டுதலை நிறைவேற்றிடும் வகையில் ஊரே ஒன்று திரண்டு சொந்த செலவில் பெருமாள் கோவிலை கட்டி முடித்து சமீபத்தில் கும்பாபிசேகமும் செய்து முடித்து விட்டோம்.அந்த சந்தோசத்திலும், முன்னோர்களின் வேண்டுதலை நிறைவேற்றிடும் வகையில் 80 வருடங்களுக்கு பிறகு தற்போது ஊரே ஒன்று திரண்டு சுமார் 300 பேர் 5 பேருந்துகளில் திருப்பதிக்கு சென்று பெருமாளை தரிசித்து செல்வதாக தெரிவித்தனர்.

    கிராம மக்களின் இந்த செயலை அந்தபகுதியை சேர்ந்த பொது மக்கள் ஆச்சரியத்துடன் பேசிக்கொண்டனர்.

    • குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவிக்கான காசோலையை வழங்கிய அண்ணாமலை.
    • தமிழ்நாட்டில் வட மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு பாதுகாப்பு நன்றாகவே உள்ளது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா வேலம்பட்டியில் தாக்குதலில் இறந்த ராணுவ வீரர் பிரபு வீட்டிற்கு தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை நேற்று இரவு வந்தார். அவர் பிரபுவின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

    தொடர்ந்து பிரபுவின் குடும்பத்தினரிடம் நடந்த சம்பவங்கள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் அவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவிக்கான காசோலையை வழங்கிய அண்ணாமலை பிரபுவின் குழந்தைகளின் கல்வி செலவுகளை பா.ஜனதா ஏற்கும் என கூறினார். அப்போது பிரபுவின் மனைவி தனது கணவரை கொலை செய்தவர்களுக்கு கடும் தண்டனை பெற்று தர வேண்டும். தனது கணவர் நினைவாக நினைவு சின்னம் அமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை அண்ணாமலையிடம் முன் வைத்தார்.

    இதன் பின்னர் அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேலம்பட்டியை சேர்ந்த பிரபு ராணுவத்தில் பணிபுரிந்து வந்தார். விடுமுறையில் ஊருக்கு வந்த அவர், கொலை செய்யப்பட்ட ராணுவ வீரர் பிரபுவின் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும். அதே போல அவர்களின் குடும்ப சூழ்நிலை கருதி ரூ.5 கோடி நிதியுதவி வழங்க வேண்டும். இது சாதாரண தகராறில் நடந்த கொலை அல்ல. இறந்து போனவர் ராணுவ வீரர். அவரை கொலை செய்த குற்றத்தில் கைதானவர்களில் ஒருவர் ஆளுங்கட்சி கவுன்சிலர். மற்றொருவர் அவரது மகன் போலீஸ்காரர்.

    கொலை செய்யப்பட்ட ராணுவ வீரர் பிரவு நினைவாக நினைவு சின்னம் அமைக்க வேண்டும் என்று அவரது மனைவி கூறி இருக்கிறார். இது நியாயமான கோரிக்கை. ராணுவ வீரர் கொலை வழக்கை போலீசார் சரியாக விசாரிக்கவில்லை. ஆரம்பத்தில் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து, குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்யவில்லை.

    பின்னர் அவர் இறந்த பிறகு கொலை வழக்காக ஆன பிறகு, பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்திய பிறகே, இந்த கொலை வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். முதல் குற்றவாளி ஆளுங்கட்சி கவுன்சிலர், 2&வது குற்றவாளி அவரது மகன் சென்னை மாநகர போலீஸ்காரர் என்பதால் காவல் துறை தயக்கம் காட்டினார்களா? என தெரியவில்லை.

    தமிழ்நாட்டில் வட மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு பாதுகாப்பு நன்றாகவே உள்ளது. இதை யாரும் தவறாக திரித்து கூற வேண்டாம் என்று கூறினார்.

    • ஓசூர் பெங்களூரு மெட்ரோ ரெயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
    • கர்நாடக அரசும் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

    கிருஷ்ணகிரி,

    பெங்களூரு-ஓசூர் இடையே மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    தென்னிந்தியாவிலேயே முதல் முறையாக இரு மாநிலங்களுக்கு இடையே மெட்ரோ ரெயில் பாதை அமைய உள்ள வழித்தடமாக ஓசூர் பெங்களூரு மெட்ரோ ரெயில்இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    கர்நாடகாவின் தலைநகர் பெங்களூருவுக்கும் தமிழ்நாட்டின் ஒசூர் ஆகிய நகரங்கள் அருகருகே அமைந்திருப்பதால், நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் இரு நகரங்களுக்கும் பயணிக்கின்றனர். தொழில் நகரமான ஓசூரில் இருந்து பெங்களூருவை இணைக்கும் மெட்ரோ ரெயில் திட்டத்தை அமைப்பதற்கான முன் முயற்சியை தமிழ்நாடு அரசு மூன்று மாதத்திற்கு முன்பு எடுத்தது.

    அதன்படி, பெங்களூருவிலிருந்து ஒசூர் நகரத்தை இணைக்கும் வகையிலான மெட்ரோ ரெயில் திட்டத்தை அமைப்பதற்கான சாத்தியக்கூறு அறிக்கைகளை சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தயாரித்து வந்தது. இந்த நிலையில்தான் பொம்மசந்திரா மற்றும் ஓசூர் இணைக்கும் வகையில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    இதனிடையே, பெங்களூரு ஓசூர் மெட்ரோ அமைப்பதற்கான சாத்தியக்கூறு அறிக்கைகள் தயாரிப்பதற்காக ஏற்கெனவே சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் 75 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. 20.5 கிலோ மீட்டர் நீளமுள்ள திட்டத்தில் தமிழ்நாட்டில் 8.8 கிலோமீட்டரும், கர்நாடகாவில் 11.7 கிலோமீட்டரிலும் அமைய உள்ளது.

    இந்நிலையில் சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் சமர்ப்பித்த சாத்தியக்கூறு அறிக்கையை மத்திய நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓசூர் நகரத்தை பெங்களூருவோடு இணைக்கும் மெட்ரோ திட்டத்திற்கு கர்நாடக அரசும் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

    அடுத்த கட்டமாக விரிவான சாத்தியக்கூறு மற்றும் திட்ட அறிக்கைகள் தயாரிக்கும் பணி தொடங்கும் என்றும் விரைவில் கட்டுமான பணிகளை தொடங்குவதற்கான முயற்சியில் இரு மாநில அரசுகளும் இறங்கும் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    தென்னிந்தியாவிலேயே முதல் முறையாக இரு மாநிலங்களுக்கு இடையே மெட்ரோ ரெயில் பாதை அமைய உள்ள வழித்தடமாக ஓசூர் பெங்களூரு மெட்ரோ ரெயில் திட்டம் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    • பயிர்களை சேதப்படுத்தி வருவது குறித்து அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
    • பட்டாசு வெடித்து யானையை வனப்பகுதிக்குள் விரட்ட முயன்று வருகின்றனர்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் சானமாவு வனப்பகுதிகளில் காட்டு யானைகள் விளைநிலங்களை நோக்கி படையெடுப்பது மற்றும் கூட்டம் கூட்டமாக இடம் பெயர்வது தொடர்ந்து நடைபெறும் ஒன்றாக இருக்கிறது.

    இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சானமாவு பகுதியிலிருந்து வெளியேறிய யானை விளைநிலங்களில் தஞ்சம் அடைந்து பயிர்களை சேதப்படுத்தி வருவது குறித்து அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

    பின்னிக்கல் கிராமத்திற்குள் நுழைந்து தக்காளி, பீன்ஸ், கோஸ் உள்ளிட்ட பயிர்களை யானை சேதப்படுத்தி உள்ளது. இது தொடர்பாக வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் பட்டாசு வெடித்து யானையை வனப்பகுதிக்குள் விரட்ட முயன்று வருகின்றனர்.

    • தொட்டனுார் என்ற ஊரில் கோவில் நிலத்தில் உள்ள கல்வெட்டை படி எடுக்கப்பட்டது.
    • வரதராச பெருமாள் கோவில் மேற்கு நோக்கி மலையின் மேற்கு பக்கம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    கிருஷ்ணகிரி,

    ஓசூர் அறம் கிருஷ்ணன் கொடுத்த தகவலின்படி கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகமும், கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப் படுத்தும் குழுவும் இணைந்து, வரலாற்றுக் குழுத்தலைவர் நாராயணமூர்த்தி தலைமையில், கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள மாரண்டபள்ளி பஞ்சாயத்தில், தொட்டனுார் என்ற ஊரில் கோவில் நிலத்தில் உள்ள கல்வெட்டை படி எடுக்கப்பட்டது.

    இது குறித்து மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது:-

    கோவில் நிலத்தில் இந்த கல்வெட்டு இன்னும் கிராமத்து மக்கள் மெட்டுக்கால் அப்ப பெருமாள் என்று வழிபட்டு வருகின்றனர். இந்த பெயரே 650 ஆண்டுகள் பழமையானது என்பது கல்வெட்டு வாயிலாக தெரிய வருகிறது. கல்வெட்டில் பெரிதாக சக்கரம் வரையப்பட்டுள்ளது.

    அதன் இரண்டு பக்கமும் சந்திர சூரியனும், சக்கரத்தின் அருகே சங்கும், குத்து விளக்கும் காணப்படுகிறது. இந்த பஞ்சாயத்தின் பெயரான மாராண்டப்பள்ளி 650 ஆண்டுகளுக்கு முன் முடமாராண்டான்பள்ளி என்பதும், இக் கல்வெட்டு வாயிலாக தெரியவருகிறது.

    இதுவரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கண்டறியப்படாத பலகை வாவிபற்று விஜயநகர மன்னர் வீர கம்பன உடையார் காலத்தில் இருந்ததை இக்கல்வெட்டு கூறுகிறது. பற்று என்பது நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்ட பகுதி. தற்போதுள்ள தாலுக்கா போன்ற ஒரு பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. கல்வெட்டில் அஸ்தகிரியில் உள்ள வரதராச பெருமாள் கோவிலுக்கு கொடுக்கப்பட்ட தானத்தைப்பற்றி கூறுகிறது.

    தற்போதுள்ள சூளகிரி 650 ஆண்டுகளுக்கு முன் அஸ்தகிரி என்று அழைக்கப்பட்டு வந்திருக்கி றது. தற்போதும் அந்த சூளகிரியில் கல்வெட்டில் குறிப்பிட்டுள்ள வரதராச பெருமாள் கோவில் உள்ளது.

    அஸ்தகிரி என்பது சூரியன் மறையும் மலை என்பதற்கு ஏற்ப வரதராச பெருமாள் கோவில் மேற்கு நோக்கி மலையின் மேற்கு பக்கம் இருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வுப்பணியில், சரவணக்குமார், ராமச்சந்திரன், ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன், கிராமத்தைச் சேர்ந்த மாரப்பகவுடா ஆகியோர் உடன் இருந்தனர்.

    • எங்கள் மாவட்டத்தில் வட மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக பணியாற்றி வருகிறார்கள்.
    • சமூக வலைதளங்கள் அனைத்தையும் காவல் துறையினர் கண்காணித்து வருகிறார்கள்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் இந்தியில், தனது சமூக வலைதள டிவிட்டரில் ஒரு வீடியோவை நேற்று இரவு பதிவிட்டார். அதில் அவர் கூறியதாவது:-

    நான் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரான சரோஜ் குமார் தாக்கூர் பேசுகிறேன். எங்கள் மாவட்டத்தில் வட மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக பணியாற்றி வருகிறார்கள்.

    பல்வேறு வட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் எங்கள் மாவட்டத்தில் பாதுகாப்புடன் இருக்கிறார்கள். இந்த நிலையில் சமூக வலைதளங்களில் சிலர் எப்போதோ, வேறு எந்த மாநிலத்திலோ நடந்த வீடியோக்களை போட்டு வட மாநில தொழிலாளர்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை என்பதை போன்று அவதூறு பரப்பி வருகிறார்கள்.

    தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் பாதுகாப்புடன் நன்றாக உள்ளார்கள். அவதூறு வீடியோக்களை யாரும் பரப்ப கூடாது. அவ்வாறு பரப்புபவர்கள் மீது காவல் துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும். சமூக வலைதளங்கள் அனைத்தையும் காவல் துறையினர் கண்காணித்து வருகிறார்கள். இவ்வாறு அந்த வீடியோவில் அவர் பேசி உள்ளார்.

    • உயிர் மருத்துவ துறை சார்பில், 5-வது தேசிய மாநாடு நடைபெற்றது.
    • டாக்டர் அன்புச்செழியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அதியமான் பொறியியல் கல்லூரியில் உயிர் மருத்துவ துறை சார்பில், 5-வது தேசிய மாநாடு நடைபெற்றது.

    கல்லூரி கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் ஜி.ரங்கநாத் தலைமை தாங்கி மாநாட்டினை தொடங்கி வைத்தார். ஓசூர் காவேரி மருத்துவமனையின் காது, மூக்கு மற்றும் தொண்டை சிறப்பு மருத்துவர் டாக்டர் அன்புச்செழியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மருத்துவ நோக்கங்களுக்காக

    பயோமெடிக்கல் உபகரணங் களை தயாரிப் பதன் முக்கியத்துவம் மற்றும் உயிர் மருத்துவ பொறியாளர்கள், மருத்துவர்களின் வாழ்க்கையை எவ்வளவு எளிதாக்குகிறார்கள் என்பதை பற்றி விளக்கினார். மாநாட்டின் போது உயிர் மருத்துவத்தில் நுண்ணறிவு அமைப்பு மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மாநாட்டு

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை துறைத் தலைவர் டாக்டர்.உதய சூரியா மற்றும் பேராசிரியர் கணேஷ் பாபு ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

    இதில், பங்கேற்ற மாணவர்கள் தங்களது புதுமையான கருத்துக்களை முன்வைத்தனர். மேலும், சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. மாநாட்டில்,கல்லூரியின் அனைத்து துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.
    • முகாமை கலெக்டர் பார்வையிட்டு, அங்கன்வாடி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உருண்டைகளை வழங்கினார்.

    கிருஷ்ணகிரி

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஊராட்சி ஒன்றியம், சின்னமட்டாரப்பள்ளி ஊராட்சி அங்கன்வாடி மையத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட பணிகள் சார்பில் "ஊட்டச்சத்தை உறுதி செய்" திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

    இந்த திட்டத்தை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தொடங்கி வைத்து, குழந்தைகள் மற்றும் தாயர்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழக முதல்வரின் முன்னோடி திட்டமான "ஊட்டச்சத்தை உறுதிசெய்" திட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் தமிழக முதல்&அமைச்சர் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பர்கூர் ஊராட்சி ஒன்றியம், சின்னமட்டாரப்பள்ளி அங்கன்வாடி மையத்தில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, மத்தூர், பர்கூர், காவேரிப்பட்டணம், வேப்பனப்பள்ளி, சூளகிரி, கெலமங்கலம், ஓசூர், தளி ஆகிய 10 ஒன்றியங்களில் உள்ள 1,796 அங்கன்வாடி மையங்களில் பயனடையும் பயனாளிகளில், மிக கடுமையான ஊட்டச்சத்து குறையுள்ள 939 குழந்தைகளின் தாய்மார்களுக்கு தலா 2 ஊட்டசத்து பெட்டகம் என 1,878 ஊட்டச்சத்து பெட்டகமும், மிதமான ஊட்டச்சத்து குறைபாடுள்ள 1,485 குழ்நதைகளின் தாய்மார்களுக்கு தலா ஒரு ஊட்டசத்து பெட்டகமும் என மொத்தம் 3,363 ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட உள்ளது.மேலும், 6 மாதம் முதல் 6 வயது வரையுள்ள கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு 8 வாரங்களுக்கு, அதாவது 56 நாட்களுக்கு ஊட்டச்சத்து நிலையினை மேம்படுத்துவதற்காக பசை வடிவிலான ஊட்டசத்து மருந்து வழங்கப்படுகிறது. மேலும், ஊட்டசத்து பெட்டகத்தில் புரோட்டின் பவுடர் 1 கிலோ, பேரிச்சை பழம் 1 கிலோ, இரும்பு சத்து சிரப் 3, டவல் 1, நெய் அரை கிலோ மற்றும் குடற்புழு நீக்கும் மாத்திரை 1 ஆகியவை வழங்கப்பட உள்ளது. மேலும், அங்கன்வாடி பணியாளர்களை கொண்டு, ஊட்டச்சத்து பெட்டகத்தில் உள்ள ஊட்டச்சத்து பொருட்களை எவ்வாறு உட்கொள்ள வேண்டும் என பயனாளிகளுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. எனவே, ஊட்டச்சத்து குறைபாடு உள்ள தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் இங்கு வழங்கப்பட்டுள்ள பொருட்களை உட்கொண்டு, தங்களின் ஊட்ட சத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து, ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டம் சார்பாக அமைக்கப்பட்டிருந்த ஊட்டச்சத்து உணவு கண்காட்சி மற்றும் பொது சுகாதாரத்துறை சார்பாக குழந்தைகளுக்கு வாராந்திர சிறப்பு தடுப்பூசி செலுத்தும் முகாமை கலெக்டர் பார்வையிட்டு, அங்கன்வாடி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உருண்டைகளை வழங்கினார். 

    • வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
    • கல்விச்சான்று, ஆதார் கார்டு ஆகிய நகல்களுடன் கலந்துகொண்டு பயன் பெறலாம்.

    கிருஷ்ணகிரி,  

    கிருஷ்ணகிரியில் நாளை (சனிக்கிழமை) மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

    இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தனியார் துறையில் வேலைதேடும் இளைஞர்கள், இளம்பெண்கள் பயனடையும் வகையில், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் மூலம் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி, தற்போது மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நாளை (சனிக்கிழமை) கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில், மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம் மூலம் நடைபெறும்.

    இதில் 5-ம் வகுப்பு முதல் பிளஸ் 2, டிப்ளமோ, ஐடிஐ, பட்டப்படிப்பு முடித்து வேலை தேடும் இளைஞர்கள், இளம் பெண்கள் தங்களது சுயவிபர அறிக்கை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்விச்சான்று, ஆதார் கார்டு ஆகிய நகல்களுடன் கலந்துகொண்டு பயன் பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×