என் மலர்
உள்ளூர் செய்திகள்

வெவ்வேறு சம்பவங்களில் 2 வாலிபர்கள் தற்கொலை
- தீ்ராத வயிற்று வலி இருந்து வந்தது. பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.
- அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் அங்கு சிகி்ச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி அருகேயுள்ள காட்டனூரை சேர்ந்தவர் தமிழரசன் (வயது 29). இவருக்கு தீ்ராத வாயிற்று வலி இருந்து வந்தது. பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.
இதில் மனமுடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு மொரப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் அங்கு சிகி்ச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து கல்லாவி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதேபோல தேன்கனி கோட்டை அருகேயுள்ள குடிசாதனபள்ளி கிராமத்தை சேர்ந்த முருகேசன் (38) என்பவர் கடன் பிரச்சனையால் மனமுடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து அவரது மனைவி சைத்ரா கொடுத்த புகாரின்பேரில் தேன்கனி கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வுருகின்றனர்.
Next Story






