என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிப்காட்டுக்கு எதிராக போராட்டம்: பெண்கள் உள்பட 200 பேர் கைது
- 5-வது சிப்காட் 3,034 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படுகிறது.
- அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே சிப்காட் அமைக்க விளை நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 200 விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி மற்றும் தேன்கனிக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட உத்தனப்பள்ளி, அயர்னப்பள்ளி நாகமங்கலம் ஊராட்சிகளில் 5-வது சிப்காட் 3,034 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படுகிறது.
இதற்கு விவசாய நிலங்கள் கையகப்படுத்தினால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். இதே போல், சிப்காட் அமைய உள்ள உள்ள பகுதியில் குடியிருப்புகளும் உள்ளதால் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.
இதனால் விவசாய நிலங்களை கையகப்படுத்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து உத்தனப்பள்ளி வருவாய் ஆய்வாளர் அலுவலகம் எதிரே தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பல்வேறு போராட்டங்களில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.






