என் மலர்
கிருஷ்ணகிரி
- இருவரும் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மோகனை தாக்கி அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.
- போலீசார் வழக்குபதிவு செய்து உமேஷ், கார்த்திக் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே காரப்பள்ளியை சேர்ந்த முனுசாமி என்பவரது மகன் மோகன் (27), கூலித்தொழிலாளி.
இந்த நிலையில் அவரும், சோமநாதபுரத்தை சேர்ந்த உமேஷ் (24) மற்றும் கார்த்திக் (25) ஆகியோர் நேற்று அந்த பகுதியில் உள்ள ஏரி அருகே பணம் வைத்து சூதாடினர். இதில் உமேஷ் மற்றும் கார்த்திக் ஆகிய இருவரும் ரூ.20,000-ஜெயித்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து இரவு , உமேஷ், கார்த்திக் ஆகிய 2 பேரும், காரப்பள்ளியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது அருந்த வந்தனர்.
அப்போது, நண்பர் மஞ்சு என்பவருடன் அங்கிருந்த மோகன், உமேஷ் மற்றும் கார்த்திக்கிடம் மது அருந்த பணம் கேட்டு தகராறு செய்தார். வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த அவர்கள் இருவரும் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மோகனை தாக்கி அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.
மோகனின் நண்பர் மஞ்சுவும் பயந்து அங்கிருந்து ஓடிவிட்டார். இந்த சம்பவத்தில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் பலத்த வெட்டுபட்ட மோகனை, அருகில் இருந்தவர்கள் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆபத்தான நிலையில் உள்ள அவருக்கு, தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது.
இந்த நிலையில் அங்கு இன்றுகாலை சிகிச்சை பலனின்றி மோகன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து உமேஷ், கார்த்திக் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
- கண்காட்சியில் பங்கேற்கவுள்ள மாணவர்களின் செயல் திறன் மற்றும் அடிப்படை வசதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
- ரூ.30 லட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டு வரும் இரண்டு வகுப்பறை கட்டிட கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி ஒன்றியத்தில் ரூ.83.83 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப், கிருஷ்ணகிரி ஒன்றியம் காட்டிநாயனப்பள்ளி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.9 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் அருந்ததியர் காலனியில் பேவர்பிளாக் சிமெண்ட் சாலை அமைக்கப் பட்டுள்ளதையும், கே.பூசாரிப்பட்டியில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின்கீழ் ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் பயனாளி முனியப்பன் என்பவர் புதிய வீடு கட்டப்பட்டுள்ளதைய நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பி
ன்னர் மேல்கரடிகுறி கிராமத்தில் ரூ.11 லட்சத்து 77 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் நியாய விலைக் கடையின் கட்டுமான பணிகளையும், கே.பூசாரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.5 லட்சத்து 17 ஆயிரம் மதிப்பில் கழிப்பறை கட்டுமான பணி, ரூ.1 லட்சத்து 42 ஆயிரம் மதிப்பில் பள்ளி உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் கட்டிடம் பழுதுபார்த்தல் மற்றும் புனரமைப்பு செய்யப்பட்டுள்ள பணிகளையும்,
மேலும், இப்பள்ளியில் 1 முதல் 4 வகுப்பு வரை எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களின் கற்றல் திறன் மற்றும் காட்சிப்படுத்துதல் மூலம் குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்கும் முறைகளை பார்வையிட்டார்.
பின்னர் கரடிகுறி அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவர்களின் கற்றல் திறன், மாநில அளவில் நடைபெறவுள்ள இன்ஸ்பயர் அறிவியல் கண்காட்சியில் பங்கேற்கவுள்ள மாணவர்களின் செயல் திறன் மற்றும் அடிப்படை வசதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், பெரியகோட்டப்பள்ளி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.23 லட்சத்து 57 ஆயிரம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டு வரும் ஊரர்சி மன்ற அலுவலக கட்டுமான பணி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.30 லட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டு வரும் இரண்டு வகுப்பறை கட்டிட கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இவ்வாறு ரூ.83.83 லட்சம் மதிப்பிலான பணிகளை பார்வையிட்ட கலெக்டர், பணிகளை விரைந்து முடிக்க வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார். பின்னர், அவதானப்பட்டி சிறுவர் பூங்காவை பார்வையிட்டு பூங்கா பகுதியில் தூய்மை பணிகள், கழிப்பறைகள் மற்றும் சீரமைப்பு பணிகள் மற்றும் நுழைவு பகுதியில் புதியதாக பெயர் பலகை அமைப்பது குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகன், ராஜேஷ், ஒன்றிய பொறியாளர்கள் சத்தியநாராயணராவ், தமிழ்செல்வி, காட்டிநாயனப்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் மஞ்சுளா மற்றும் பணி மேற்பார்வையாளர்கள் உடனிருந்தனர்.
- பெற்றோர் எதிர்ப்பை மீறி சரண்யா கடந்த ஜனவரி 26-ந்தேதி ஜெகனை திருமணம் செய்தார்.
- காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
காவேரிப்பட்டணம்:
கிருஷ்ணகிரி அருகே உள்ள கிட்டம்பட்டியை சேர்ந்தவர் சின்னபையன். இவரது மகன் ஜெகன் (வயது28). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. அவதானப்பட்டி அருகே உள்ள முழுக்கான்கொட்டாயை சேர்ந்தவர் சங்கர். இவரது மகள் சரண்யா (21). ஜெகனும், சரண்யாவும் பள்ளி பருவத்தில் இருந்து காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு சரண்யாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதை மீறி சரண்யா கடந்த ஜனவரி 26-ந்தேதி ஜெகனை திருமணம் செய்தார். இந்த நிலையில் ஜெகனை நேற்று முன்தினம் அவரது மாமனார் சங்கர் (43) உள்பட சிலர் சேர்ந்து கிருஷ்ணகிரி டேம் ரோடு சாலையில் அரிவாளால் வெட்டியும், கழுத்தை அறுத்தும் கவுரவக்கொலை செய்தனர்.
இதுதொடர்பாக காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த கொலை தொடர்பாக சங்கர், கிருஷ்ணகிரி கோர்ட்டில் நேற்று முன்தினம் சரண் அடைந்தார்.
இதையடுத்து தனிப்படை போலீசார் ஜெகனை கொலை செய்த வழக்கில் தலைமறைவான குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் கரியன் என்கிற முரளி, நாகராஜ் ஆகிய 2 பேர் இன்று மதியம் சேலம் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
- எண்ணும் எழுத்தும்” கற்றலை கொண்டாடுவோம் என்ற பெயரில் குழந்தைகள், பெற்றோர் கலந்து கொள்ளும் விழா நடைபெற்றது.
- சிறப்பிடம் பிடித்த குழந்தைகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப் பட்டன.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பட்டாளம்மன் கோவில் தெருவில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் "எண்ணும் எழுத்தும்" கற்றலை கொண்டாடுவோம் என்ற பெயரில் குழந்தைகள், பெற்றோர் கலந்து கொள்ளும் விழா நடைபெற்றது.
விழாவில் குழந்தைகள் பங்கேற்ற கலைநிகழ்ச்சிகள் வினாடி, வினா மற்றும் என்னும் எழுத்தும் வாசித்து காண்பித்தனர்.ேமலும் விளையாட்டுகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் சிறப்பிடம் பிடித்த குழந்தைகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப் பட்டன.
இவ்விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் லில்லி மார்க்கிரேட் சோபியா தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். ேமலும் ஆசிரியர்கள், மல்லிகா, உமா, பெரியநாயகி, ராதா ருக்மணி மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ஹேமலதாநன்றி கூறினார்.
- காவேரிப்பட்டணம் போலீசார் 341, 302, 506 (2) ஆகிய 3 பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்து தேடி வந்தனர்.
- 2 பேரை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது.
காவேரிப்பட்டணம்,
கிருஷ்ணகிரி அருகே உள்ள கிட்டம்பட்டியை சேர்ந்தவர் சின்னபையன். இவருடைய மகன் ஜெகன் (வயது 28). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவரும், கிருஷ்ணகிரி மாவட்டம் அவதானப்பட்டி அருகே உள்ள முழுக்கான் கொட்டாய் கிராமத்தை சேர்ந்த சங்கரின் மகள் சரண்யா (21) என்பவரும் காதலித்து வந்தனர்.
இந்த காதல் விவகாரம் பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்தது. இருவரும் ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்களாக இருந்த போதிலும் பெண்ணின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் அவசரஅவசரமாக மகளுக்கு வரன் பார்த்து திருமண ஏற்பாடு செய்தனர். இதனால் ஜெகன், சரண்யாவை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார்.
இதனால் சரண்யாவின் குடும்பத்தினர் அவருடன் பேசுவதை தவிர்த்து வந்தனர். ஒரு கட்டத்தில் ஜெகனை அவருடைய மாமனார் சங்கர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் கொன்று விட திட்டம் போட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று மதியம் 2 மணி அளவில் புதுமாப்பிள்ளை ஜெகன் வேலைக்கு செல்வதற்காக மோட்டார்சைக்கிளில் புறப்பட்டார். தருமபுரி-கிருஷ்ணகிரி சாலையில் அணைரோடு மேம்பாலம் அருகே இணைப்பு சாலையில் (சர்வீஸ் ரோடு) ஜெகன் சென்று கொண்டு இருந்தார்.
இதை அறிந்த சரண்யாவின் தந்தை சங்கர் மற்றும் உறவினர்கள் 2 பேர் அங்கு 2 மோட்டார் சைக்கிள்களில் வந்தனர். அவர்கள் ஜெகனை வழிமறித்து மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே தள்ளினர். பின்னர் அவர்கள் தாங்கள் வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக ஜெகனை வெட்டினர்.
மேலும் அரிவாளால் அவரின் கழுத்தை அறுத்தனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். அவரை கொலை செய்ததும் சங்கர் மற்றும் அவரது உறவினர்கள் 2 மோட்டார்சைக்கிள்களில் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
ஜெகன் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த கொலையை அந்த வழியாக சென்றவர்கள் தங்களின் செல்போன்களில் தூரமாக இருந்தவாறு படம்பிடித்தனர்.
ஜெகனை ஒருவர் கால்களை பிடித்துக் கொள்ள, 2 பேர் சேர்ந்து சரமாரியாக அரிவாளால் வெட்டும் அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. பல்வேறு வாட்ஸ்-அப் குழுக்களிலும், சமூக வலைதளங்களிலும் இந்த வீடியோக்கள் பகிரப்பட்டு வருகின்றன.
இந்த கொலை குறித்து தகவல் அறிந்த காவேரிப்பட்டணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
ஜெகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த ஆணவக்கொலை தொடர்பாக ஜெகனின் மாமனார் சங்கர் மற்றும் அவரது உறவினர்கள் 2 பேர் மீது காவேரிப்பட்டணம் போலீசார் 341, 302, 506 (2) ஆகிய 3 பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்து தேடி வந்தனர்.
போலீசார் ேதடுவதை அறிந்த சங்கர் (45) நேற்று இரவு கிருஷ்ணகிரி கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.
இதையடுத்து தலைமறைவான உறவினர்கள் 2 பேரை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது. குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையடுத்து மாமனார் சங்கர், ஜெகனை கொலை செய்து விட்டு நேரடியாக கோர்ட்டில் சரண் அடைந்துள்ளார். அதனால் கொலை குறித்த தகவல்களை சேகரிக்க அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளோம். அதற்காக இன்னும் ஒரிரு நாட்களில் கோர்ட்டில் மனுதாக்கல் செய்ய உள்ளோம் என போலீசார் தெரிவித்தனர்.
- தந்தை பெரியார் சர்க்கிள் என்று பெயர் வைக்க வேண்டும்
- மாநகராட்சி ஆணையாளர் சினேகா, மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ரிங்ரோடு அருகேயுள்ள முனீஸ்வர் நகர், நியூ ஏ.எஸ்.டி.சி.ஹட்கோ சந்திப்பு, வ.உ.சி.நகர் உள்ளிட்டவை இணையும் பகுதிகள் முனீஸ்வர் நகர் சர்க்கிள் என்றழைக்கப்பட்டு வருகிறது. இதற்கு தந்தை பெரியார் சர்க்கிள் என்று பெயர் வைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு அரசு அனுமதி கிடைத்ததையடுத்து,, ஓசூர் மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானத்தை கைவிடக்கோரி, பா.ஜனதா கட்சி மற்றும் இந்து முன்னணி, விசுவ இந்து பரிஷத், பஜ்ரங்தள் உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் கடும் கண்டனம் தெரிவித்து,நேற்று ஓசூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், பா.ஜனதா மாநில துணைத்தலைவர் நரேந்திரன், மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் முனிராஜ், இந்து முன்னணி கோட்ட பொறுப்பாளர் உமேஷ், பஜ்ரங்தள் அமைப்பின் மாநில நிர்வாகி கிரண் உள்பட பலர் கண்டன உரையாற்றினர். மேலும் இதில் பா.ஜனதா மாநில தொழில்துறை பிரிவு செயலாளர் கே.ராமலிங்கம், மாவட்ட பா.ஜனதா துணைத்தலைவர் முருகன், செயலாளர் பிரவீன்குமார், விசுவ இந்து பரிஷத் அமைப்பின் மாவட்ட தலைவர் தேவராஜ், மற்றும் இந்து அமைப்புகளின் நிர்வாகிகள், பா.ஜனதா கட்சியினர் திரளாக கலந்துகொண்டனர்.ஆர்ப்பாட்டத்தில், பெரியார் சர்க்கிள் என்று மாற்றப்படுவதை திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
தொடர்ந்து மாநகராட்சி ஆணையாளர் சினேகா, மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தையொட்டி ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாபு பிரசாந்த் தலைமையில் மாநகராட்சி அலுவலக பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
- மாணவர்கள் நான்தோறும் செய்தித்தாள்களை தொடர்ந்து வாசிக்க வேண்டும்
- மாணவர்கள் படிக்கும் போது, அனைத்து பாடக்குறிப்புகளுக்கும் தனித்தனியாக குறிப்புகள் எடுத்துக்கொண்டு படிக்க வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட வேலலவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் தற்போது நடைபெற்று வரும் எஸ்.எஸ்.சி (எம்.டி.எஸ்) போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பினை நேற்று கலெக்டர் தீபக் ஜேக்கப் தொடங்கி வைத்து, மாணவ, மாணவிகளுக்கு பாட குறிப்புகள் அடங்கிய இலவச கையேட்டினை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசுகையில், மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பற்றோர், பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு பயில்பவர்களுக்கு ஏதுவாக இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மாணவ, மாணவிகள் குறிப்பிட்ட ஒரு தேர்வுக்கு மட்டும் படிக்காமல், அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் விண்ணப்பித்து தேர்வு எழுதினால் மட்டுமே வேலைவாய்ப்பு கிடைக்கும்.
மேலும், மாணவர்கள் நான்தோறும் செய்தித்தாள்களை தொடர்ந்து வாசிக்க வேண்டும். செய்தித்தாள்களில் தற்கால நடப்பு நிகழ்வுகள், பொதுஅறிவு தொடர்பான செய்திகளை படிக்க வேண்டும். மாணவர்கள் படிக்கும் போது, அனைத்து பாடக்குறிப்புகளுக்கும் தனித்தனியாக குறிப்புகள் எடுத்துக்கொண்டு படிக்க வேண்டும். மாணவர்கள் ஒரு குழுவாக இணைந்து போட்டித் தேர்வுக்கான வினாக்களை விவாதம் செய்ய வேண்டும். அவ்வாறு விவாதம் செய்யும் போது கற்றலில் சோர்வடையாமலும், கற்றது மறக்காமலும் இருக்கும். தேர்வு மையங்களில் சொல்லித்தரும் பாடங்களைத் தவிர நாம் தனியாக அதிகமான புத்தகங்களை படிக்க வேண்டும்.
இங்கு அனனத்து போட்டித் தேர்வுகளுக்கும் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதால், அதிகளவில் கல்நதுகொண்டு பயன்பெற வேண்டும். இவ்வலுவலகத்தின் வாயிலாக இதுவரை 100க்கும் அதிகமானோர் போட்டித் தேர்வுகளில் வெற்றிப்பெற்றுள்ளனர். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உள்ள நூலகத்தில் போட்டித் தேர்வுக்கான அனைத்து புத்தகங்கள், மாத இதழ்கள் மற்றும் நடப்பு நிகழ்வுகளுக்கான குறிப்பேடுகள் உள்ளதால், மாணவ, மாணவிகள் இதனை நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும், வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் படித்த
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்கள் அரசு தேர்வுக்கு படித்தாலும், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களில் கலந்துகொண்டு தனியார் நிறுவனங்களில் பணியாற்றிக்கொண்டே அரசு தேர்வுக்கு படிக்கலாம் என்றார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்கள் சுந்தரம், மோனிஷா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- தேசிய நெடுஞ்சாலைதுறை சார்பில் சாலை ஒரமாக ஒரு பகுதியில் மட்டும் கழிவுகள் சுத்தம் செய்தனர்.
- மற்ற பகுதியை விட்டு சென்றதால் சுகாதாரமற்ற நிலையில் காணப்படுகிறது.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சிக்கு உள்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் சில தினத்துக்கு முன்பு ஓசூர்-கிருஷ்ணகிரி சாலையில் இருபுரமும் செடி, கொடிகள், குப்பை கழிவுகள் அதிக அளவு இருந்தது. இதனை தேசிய நெடுஞ்சாலைதுறை சார்பில் சாலை ஒரமாக ஒரு பகுதியில் மட்டும் கழிவுகள் சுத்தம் செய்தனர்.
மற்ற பகுதியை விட்டு சென்றதால் சுகாதாரமற்ற நிலையில் காணப்படுகிறது. இதனால் சாலையில் செல்லும் போது காற்றில் குப்பை கழிவுகள் பறப்பதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
- வேலை கொடுக்க உதவி செய்கிறேன் எனக் கூறியதுடன் காரிமங்கலம் பேருந்து நிலையத்திற்கு அழைத்து வர சொல்லி உள்ளார்.
- இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன் மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட லாட்ஜிற்கு சென்று விசாரணை நடத்தினர்.
காரிமங்கலம்,
கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண் குந்தாரப்பள்ளி பகுதியைச் சேர்ந்த சுந்தரி என்பவரிடம் வேலை கேட்டுள்ளார்.
அப்போது சுந்தரி அந்தப் பெண்ணிடம் வேறு யாராவது இருந்தால் அவர்களையும் அழைத்து வா அவர்களுக்கும் வேலை கொடுக்க உதவி செய்கிறேன் எனக் கூறியதுடன் காரிமங்கலம் பேருந்து நிலையத்திற்கு அழைத்து வர சொல்லி உள்ளார்.
இதை நம்பி 3 பெண்களும் காரிமங்கலத்திற்கு வந்த நிலையில் அவர்களை கிருஷ்ணகிரி பைபாஸ் ரோடு அகரம் பிரிவு ரோடு அருகே உள்ள தனியார் லாட்ஜிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது அங்கிருந்த நான்கு பேர் மூன்று பெண்களிட மும் தவறாக நடக்க முயற்சித்துள்ளனர். இதனால் அவர்கள் அலறி அடித்துக் கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்து காரிமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தனர்.
இதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன் மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட லாட்ஜிற்கு சென்று விசாரணை நடத்தினர்.
அங்கிருந்த தருமபுரி மாவட்டம், பிக்கனஹள்ளி பகுதியைச் சேர்ந்த சுபாஷ் (32 ), கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த பிரசாந்த் (29) காவேரிப்பட்டினத்தைச் சேர்ந்த செந்தில்குமார் (49), பனக முட்லு பகுதியைச் சேர்ந்த சுந்தர்ராஜ் (45), குந்தார அள்ளி கிராமத்தைச் சேர்ந்த சுந்தரி (34) ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். தலைமறைவான லாட்ஜ் ஓனர் லட்சுமணன் என்பவரை தேடி வருகின்றனர்.
- 53 குப்பை எடுக்கும் மின்கல வண்டிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- கூடுதல் கட்டமாக 6 மின்கல வண்டிகளை சூளகிரி ஒன்றிய குழு தலைவர் லாவண்யா ஹேம்நாத் தலைமையில் வழங்கப்பட்டது.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி ஒன்றியத்திற்கு 53 குப்பை எடுக்கும் மின்கல வண்டிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதில் முதல் கட்டமாக 6 மின்கல வண்டிகளை சூளகிரி ஒன்றிய குழு தலைவர் லாவண்யா ஹேம்நாத் அவர் தலைமையில் தியாகரசன்னபள்ளி, கோனேரிப்பள்ளி, மருதாண்டபள்ளி, மற்றும் கானலட்டி ஆகிய ஊராட்சி களுக்கு குப்பை எடுக்கும் மின்கல வாகனங்கள் ஊராட்சி மன்ற தலைவரிடம் வழங்கப்பட்டது. பின்னர் ஒன்றிய குழு தலைவர் வாகனத்தை இயக்கி பார்த்தார்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய குழு உறுப்பினர் நாகேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்(வ.ஊ) கோபாலகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ) விமல் ரவிக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
- பேரூராட்சியில் குடிநீர் பணிகள் செய்ய அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- அந்த இடத்தினை தருமபுரி மண்டல பேரூராட்சிகளின் செயற்பொறியாளர் சுப்பிரமணி மற்றும் காவேரிப்பட்டணம் பேரூராட்சி தலைவர் அம்சவேணி செந்தில்குமார் நேரில் ஆய்வு செய்தார்.
காவேரிப்பட்டணம்,
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டணத்தில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் காவேரிபட்டணம் பேரூராட்சியில் குடிநீர் பணிகள் செய்ய அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து மேற்படி நிதியில் ஆற்றங்கரை ஓரத்தில் தரை மட்ட நீர் தேக்க தொட்டி மற்றும் திறந்த வெளி கிணறுகள் அமைக்க ஒதுக்கப்பட்டுள்ளது.
அந்த இடத்தினை தருமபுரி மண்டல பேரூராட்சிகளின் செயற்பொறியாளர் சுப்பிரமணி மற்றும் காவேரிப்பட்டணம் பேரூராட்சி தலைவர் அம்சவேணி செந்தில்குமார் நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது உடன் காவேரிப்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார் , இளநிலை பொறியாளர் அருணகிரி, பேரூராட்சி அலுவலர்கள் இளங்கோ மற்றும் இளைஞர் அணி துணை அமைப்பாளர் செந்தில்குமார் பேரூராட்சி கவுன்சிலர்கள் கோகுல்ராஜ், தமிழ்ச்செல்வி சோபன் பாபு , உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
- மின்னணு சேவைகளை குடிமக்களுக்கான பொது இணையதளம் வாயிலாகவும் வழங்கி வருகின்றது
- இணையவழி சேவைகளை அவர்களின் இருப்பிடத்திற்கு அருகாமையிலேயே பெறுதவற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இ-சேவை மையங்கள் துவங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இது குறித்து மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் அனைத்து குடிமக்களும் இ-சேவை மையம் தொடங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டமானது படித்த இளைஞர்களையும், தொழில் முனைவோர்களையும் ஊக்குவிக்கும் வகையில் இ&சேவை மையம் இல்லாத பகுதிகளில் இ-சேவை மையங்களை நிறுவி செயல்படுத்த இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின் ஆளுமை முகமை, அரசு இ&சேவை மையங்களான தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் வழங்கும் சங்கங்கள், தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம், மீன்வளத்துறை மற்றும் கிராமப்புற தொழில்முனைவோர் மூலம் மக்களுக்கான அரசின் சேவைகளை, அவர்களின் இருப்பிடத்திற்கு அருகாமையிலேயே வழங்கி வருகின்றது.
மேலும், மின்னணு சேவைகளை குடிமக்களுக்கான பொது இணையதளம் வாயிலாகவும் வழங்கி வருகின்றது.இதை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையானது, இத்திட்டம் மூலம் தற்போது அனைத்து குடிமக்களும் இ-சேவை மையங்கள் தொடங்கி பொதுமக்களுக்கான அரசின் இணையவழி சேவைகளை அவர்களின் இருப்பிடத்திற்கு அருகாமையிலேயே பெறுதவற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் நோக்கமானது, இ-சேவை மையங்களின் எண்ணிக்கையை அதிகரித்து, இ-சேவை மையத்தில் மக்கள் காத்திருக்கும் நேரத்தை குறைத்து, மக்களுக்கு சிறந்த மற்றும் நேர்த்தியான சேவையை வழங்குவதாகும். மேலும், இ-சேவை வலைத்தளத்திலிருந்து இணையவழி சேவைகளை மக்களுக்கு வழங்கும் அனைத்து குடிமக்களும் இ-சேவை மையங்களை தொடங்கும் இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பதாரர்கள் வருகிற ஏப்ரல் மாதம் 14-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அவர்களுக்குரிய பயனர் எண் மற்றும் கடவுச்சொல் (பாஸ்வார்டு) விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி வாயிலாக வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






