என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேன்கனிக்கோட்டை அரசு பள்ளியில் எண்ணும் எழுத்தும் கற்றல் விழா
    X

    தேன்கனிக்கோட்டை அரசு பள்ளியில் எண்ணும் எழுத்தும் கற்றல் விழா

    • எண்ணும் எழுத்தும்” கற்றலை கொண்டாடுவோம் என்ற பெயரில் குழந்தைகள், பெற்றோர் கலந்து கொள்ளும் விழா நடைபெற்றது.
    • சிறப்பிடம் பிடித்த குழந்தைகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப் பட்டன.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பட்டாளம்மன் கோவில் தெருவில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் "எண்ணும் எழுத்தும்" கற்றலை கொண்டாடுவோம் என்ற பெயரில் குழந்தைகள், பெற்றோர் கலந்து கொள்ளும் விழா நடைபெற்றது.

    விழாவில் குழந்தைகள் பங்கேற்ற கலைநிகழ்ச்சிகள் வினாடி, வினா மற்றும் என்னும் எழுத்தும் வாசித்து காண்பித்தனர்.ேமலும் விளையாட்டுகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் சிறப்பிடம் பிடித்த குழந்தைகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப் பட்டன.

    இவ்விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் லில்லி மார்க்கிரேட் சோபியா தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். ேமலும் ஆசிரியர்கள், மல்லிகா, உமா, பெரியநாயகி, ராதா ருக்மணி மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ஹேமலதாநன்றி கூறினார்.

    Next Story
    ×