என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரி ஒன்றியத்தில்சீரமைப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு
    X

    கிருஷ்ணகிரி ஒன்றியத்தில்சீரமைப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு

    • கண்காட்சியில் பங்கேற்கவுள்ள மாணவர்களின் செயல் திறன் மற்றும் அடிப்படை வசதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • ரூ.30 லட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டு வரும் இரண்டு வகுப்பறை கட்டிட கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி ஒன்றியத்தில் ரூ.83.83 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப், கிருஷ்ணகிரி ஒன்றியம் காட்டிநாயனப்பள்ளி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.9 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் அருந்ததியர் காலனியில் பேவர்பிளாக் சிமெண்ட் சாலை அமைக்கப் பட்டுள்ளதையும், கே.பூசாரிப்பட்டியில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின்கீழ் ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் பயனாளி முனியப்பன் என்பவர் புதிய வீடு கட்டப்பட்டுள்ளதைய நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பி

    ன்னர் மேல்கரடிகுறி கிராமத்தில் ரூ.11 லட்சத்து 77 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் நியாய விலைக் கடையின் கட்டுமான பணிகளையும், கே.பூசாரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.5 லட்சத்து 17 ஆயிரம் மதிப்பில் கழிப்பறை கட்டுமான பணி, ரூ.1 லட்சத்து 42 ஆயிரம் மதிப்பில் பள்ளி உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் கட்டிடம் பழுதுபார்த்தல் மற்றும் புனரமைப்பு செய்யப்பட்டுள்ள பணிகளையும்,

    மேலும், இப்பள்ளியில் 1 முதல் 4 வகுப்பு வரை எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களின் கற்றல் திறன் மற்றும் காட்சிப்படுத்துதல் மூலம் குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்கும் முறைகளை பார்வையிட்டார்.

    பின்னர் கரடிகுறி அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவர்களின் கற்றல் திறன், மாநில அளவில் நடைபெறவுள்ள இன்ஸ்பயர் அறிவியல் கண்காட்சியில் பங்கேற்கவுள்ள மாணவர்களின் செயல் திறன் மற்றும் அடிப்படை வசதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும், பெரியகோட்டப்பள்ளி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.23 லட்சத்து 57 ஆயிரம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டு வரும் ஊரர்சி மன்ற அலுவலக கட்டுமான பணி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.30 லட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டு வரும் இரண்டு வகுப்பறை கட்டிட கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இவ்வாறு ரூ.83.83 லட்சம் மதிப்பிலான பணிகளை பார்வையிட்ட கலெக்டர், பணிகளை விரைந்து முடிக்க வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார். பின்னர், அவதானப்பட்டி சிறுவர் பூங்காவை பார்வையிட்டு பூங்கா பகுதியில் தூய்மை பணிகள், கழிப்பறைகள் மற்றும் சீரமைப்பு பணிகள் மற்றும் நுழைவு பகுதியில் புதியதாக பெயர் பலகை அமைப்பது குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகன், ராஜேஷ், ஒன்றிய பொறியாளர்கள் சத்தியநாராயணராவ், தமிழ்செல்வி, காட்டிநாயனப்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் மஞ்சுளா மற்றும் பணி மேற்பார்வையாளர்கள் உடனிருந்தனர்.

    Next Story
    ×