என் மலர்
உள்ளூர் செய்திகள்

சூளகிரி சர்வீஸ் சாலையில் தேங்கி கிடக்கும் குப்பை கழிவுகள்.
சூளகிரியில் சாலையோரம் தேங்கி கிடக்கும் குப்பைகள் அகற்ற கோரிக்கை
- தேசிய நெடுஞ்சாலைதுறை சார்பில் சாலை ஒரமாக ஒரு பகுதியில் மட்டும் கழிவுகள் சுத்தம் செய்தனர்.
- மற்ற பகுதியை விட்டு சென்றதால் சுகாதாரமற்ற நிலையில் காணப்படுகிறது.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சிக்கு உள்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் சில தினத்துக்கு முன்பு ஓசூர்-கிருஷ்ணகிரி சாலையில் இருபுரமும் செடி, கொடிகள், குப்பை கழிவுகள் அதிக அளவு இருந்தது. இதனை தேசிய நெடுஞ்சாலைதுறை சார்பில் சாலை ஒரமாக ஒரு பகுதியில் மட்டும் கழிவுகள் சுத்தம் செய்தனர்.
மற்ற பகுதியை விட்டு சென்றதால் சுகாதாரமற்ற நிலையில் காணப்படுகிறது. இதனால் சாலையில் செல்லும் போது காற்றில் குப்பை கழிவுகள் பறப்பதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
Next Story






