என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதிய ஆழ்துளை கிணறு"

    • பேரூராட்சியில் குடிநீர் பணிகள் செய்ய அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • அந்த இடத்தினை தருமபுரி மண்டல பேரூராட்சிகளின் செயற்பொறியாளர் சுப்பிரமணி மற்றும் காவேரிப்பட்டணம் பேரூராட்சி தலைவர் அம்சவேணி செந்தில்குமார் நேரில் ஆய்வு செய்தார்.

    காவேரிப்பட்டணம்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டணத்தில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் காவேரிபட்டணம் பேரூராட்சியில் குடிநீர் பணிகள் செய்ய அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இதனையடுத்து மேற்படி நிதியில் ஆற்றங்கரை ஓரத்தில் தரை மட்ட நீர் தேக்க தொட்டி மற்றும் திறந்த வெளி கிணறுகள் அமைக்க ஒதுக்கப்பட்டுள்ளது.

    அந்த இடத்தினை தருமபுரி மண்டல பேரூராட்சிகளின் செயற்பொறியாளர் சுப்பிரமணி மற்றும் காவேரிப்பட்டணம் பேரூராட்சி தலைவர் அம்சவேணி செந்தில்குமார் நேரில் ஆய்வு செய்தார்.

    அப்போது உடன் காவேரிப்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார் , இளநிலை பொறியாளர் அருணகிரி, பேரூராட்சி அலுவலர்கள் இளங்கோ மற்றும் இளைஞர் அணி துணை அமைப்பாளர் செந்தில்குமார் பேரூராட்சி கவுன்சிலர்கள் கோகுல்ராஜ், தமிழ்ச்செல்வி சோபன் பாபு , உள்ளிட்டோர் உடன் இருந்தனர். 

    ×