என் மலர்
கிருஷ்ணகிரி
- இரவு, உமேஷ், கார்த்திக் ஆகிய 2 பேரும், காரப்பள்ளியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது அருந்த வந்தனர்.
- வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த அவர்கள் இருவரும் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மோகனை வெட்டினர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே காரப்பள்ளியை சேர்ந்த முனுசாமி என்பவரது மகன் மோகன் (27), கூலித்தொழிலாளி.
இந்த நிலையில் அவரும், சோமநாதபுரத்தை சேர்ந்த உமேஷ் (24) மற்றும் கார்த்திக் (25) ஆகியோர் நேற்று அந்த பகுதியில் உள்ள ஏரி அருகே பணம் வைத்து சூதாடினர். இதில் உமேஷ் மற்றும் கார்த்திக் ஆகிய இருவரும் ரூ.20,000- ஜெயித்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து இரவு , உமேஷ், கார்த்திக் ஆகிய 2 பேரும், காரப்பள்ளியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது அருந்த வந்தனர்.
அப்போது, நண்பர் மஞ்சு என்பவருடன் அங்கிருந்த மோகன், உமேஷ் மற்றும் கார்த்திக்கிடம் மது அருந்த பணம் கேட்டு தகராறு செய்தார்.
வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த அவர்கள் இருவரும் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மோகனை தாக்கி அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.
மோகனின் நண்பர் மஞ்சுவும் பயந்து அங்கிருந்து ஓடிவிட்டார். இந்த சம்பவத்தில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் பலத்த வெட்டுபட்ட மோகனை, அருகில் இருந்தவர்கள் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆபத்தான நிலையில் உள்ள அவருக்கு, தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்றுகாலை சிகிச்சை பலனின்றி மோகன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனினடையே, உமேசும், கார்த்திக்கும் நேற்று இரவு ஓசூர் டவுன் போலீசில் சரணடைந்து, மோகனை வெட்டிய குற்றத்தை ஒப்புக்கொண்டனர். போலீசார் அவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
- துணிகளை சுத்தம் செய்ய கொடுத்துவிட்டு பின்பு அதற்கான பணத்தை ரூ.240யை கொடுக்காமல் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
- இது குறித்து வெங்கடேஷ் கொடுத்த புகாரின்படி சேகரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அருகே உள்ள பீர்ஜேப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது64), அவர் அதே பகுதியில் சலவை கடை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் அவரது கடைக்கு வந்த டிரைவர் சேகர்(42) என்பவர் அவரது துணிகளை சுத்தம் செய்ய கொடுத்துவிட்டு பின்பு அதற்கான பணத்தை ரூ.240யை கொடுக்காமல் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர் இது குறித்து வெங்கடேஷ் கொடுத்த புகாரின்படி சேகரை போலீசார் கைது செய்தனர்.
- அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்தனர். அதற்குள் முகமூடி கும்பல் தப்பி சென்றது.
- கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு சென்று வீட்டில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்து கொண்டனர்.
காவேரிப்பட்டணம்,
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப ்பட்டணம் அருகே உள்ள சப்பாணிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி (வயது 88). ஓய்வுபெற்ற ஆசிரியர். இவரது மனைவி சென்னம்மாள் (77). இவர்களின் வீடு சப்பாணிப்பட்டி மேம்பாலம் அருகில் உள்ளது. மகன்கள், மகள்கள் திருமணமாகி வெளியூர்களில் வசித்து வருகின்றனர். இதனால் வயதான கணவன்- மனைவி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு வயதான தம்பதியினர் வீட்டில் தூங்கி கொண்டு இருந்தனர். அப்போது 3 பேர் முகத்தில் கருப்பு துணியை கட்டிக் கொண்டு வீட்டுக்குள் திடீரென புகுந்தனர்.
முகமூடி அணிந்த அந்த கும்பல் வயதான தம்பதியை கத்தி முனையில் மிரட்டி வீட்டில் இருந்த 80 பவுன் தங்க நகைகள், 2 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.3 லட்சம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். அவர்கள் சென்றதும் கணவன்- மனைவி இருவரும் சத்தம் போட்டு அலறினர்.
அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்தனர். அதற்குள் முகமூடி கும்பல் தப்பி சென்றது. தகவல் அறிந்ததும் காவேரிப்பட்டணம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு சென்று வீட்டில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்து கொண்டனர்.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து காவேரிப்பட்டணம் போலீசில் ரங்கசாமி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
- அஞ்செட்டி பைல்காடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிகோட்டை மற்றும் அஞ்செட்டி போலீசார் தேன்கனிகோட்டை பஸ் நிலையம், அஞ்செட்டி பைல்காடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த பகுதியில் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த சாகுல்சூரியா(29), விஜய்(40), சந்தோஷ்குமார்(42), நடராஜ்(39), லஷ்மணன்(29), பாண்டுரங்கன்(40), ஜெய்கிருஷ்ணன்(26), ஷாருக்கான்(25) ஆகிய 8 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து சீட்டுகட்டுகள், பணம் ரூ,23 ஆயிரத்து 350 - யை பறிமுதல் செய்தனர்.
- மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தினர்.
- மேலும் தலைமறைவான 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே உள்ள தபால்மேடு டாஸ்மாக் கடையில் விற்பனையாளர்களாக பணியாற்றுபவர் மாதேஷ் (வயது48). இவர் கடந்த 19-ந் தேதி இரவு பணி முடிந்து டாஸ்மாக் கடையை மூடி விட்டு மது விற்பனையான பணத்துடன் வீட்டுக்கு செல்வதற்காக வெளியே வந்தார்.
அப்போது 2 மோட்டார்சைக்கிளில் முகமூடி அணிந்து வந்த 5 பேர் மாதேசின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி ரூ.4 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர்.
இதுகுறித்து மாதேஷ் பர்கூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமூடி கொள்ளையாளர்கள் குறித்து விசாரணை நடத்தினர்.
அப்போது ஓசூரை சேர்ந்த மர்ம நபர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இதனிடையே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் ஓசூர் சக்தி நகர் சந்தோஷ் (23), முனீஸ்வரன் நகர் கோகுல் (21), வேலூர் மாவட்டம், குடியாத்தம் சூர்யா (23) ஆகியோர் என்பதும், நண்பர்களுடன் சேர்ந்து டாஸ்மாக் விற்பனையாளிடம் பணத்தை கொள்ளையடித்து சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களை சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவான 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
- ஆஞ்சநேய சாமி கோவிலில் பார்வதி கல்யாணம் மகோத்சவம் நடைபெற்றது.
- ஆஞ்சநேயர் சாமி மகா கணபதி நாகர்கள் சன்னதியில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை கச்சேரி மெயின் ரோட்டில் உள்ள ஸ்ரீ ஆஞ்சநேய சாமி கோவிலில் பார்வதி கல்யாணம் மகோத்சவம் நடைபெற்றது.
ஆஞ்சநேயர் சாமி மகா கணபதி நாகர்கள் சன்னதியில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
சென்னை குருத்ரேயம் பஜனை மண்டலி குழு வெங்கட கிருஷ்ண பாகவதர் தலைமையில் குரு தியானம் சிவ அஷ்டபதி டோலோத்சவம் உஞ்சவிருத்தி பார்வதி கல்யாணம் நடைபெற்றது.
முன்னதாக நிகழ்ச்சிக்கு வருகை தந்த தமிழ்நாடு பிராமணர்கள் சங்கம் பதிவு மாநில தலைவர் கோவை சிஜி கணேசன், மாநில ஒருங்கிணைப்பாளர் பம்மல், ராமகிருஷ்ணன், மாநில நிர்வாகிகள், தருமபுரி மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர், அண்ணாமலை ,திருவண்ணாமலை, அருணாச்சலேஸ்வரர் கோவில் வைத்தியநாதன், ஊத்தங்கரை பேரூராட்சி தலைவர் அமானுல்லா, உள்ளிடட பலரும் பங்கேற்றனர்.
திருக்கல்யாணத்தை ஒட்டி முதல் நாள் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத கோவிந்த வரதராஜ பெருமாள் உற்சவம் நடைபெற்றது. முடிவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
- தென்னைக்கு புவிசார் குறியீடு வழங்கி வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
- தேங்காய் எண்ணெய் உற்பத்தி ஆலையை நிறுவி பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம், போச்சம்பள்ளி, அரசம்பட்டி, சந்தூர், புலியூர், பெண்டஅள்ளி, வேலம்பட்டி, பாரூர், மஞ்சமேடு, தாதம்பட்டி மற்றும் கேஆர்பி அணை படுகை பகுதியில் சுமார் 36 ஆயிரம் ஏக்கரில் 15 லட்சத்திற்கும் மேல் தென்னை மரங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இங்கு சாகுபடி செய்யப்படும் தேங்காய் உள்ளூர் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது. அரசம்பட்டி பகுதியில் தென்னங்கன்று உற்பத்தி செய்யப்படுகிறது.
ஆண்டுக்கு ஒரு கோடி தென்னை கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. அரசம்பட்டி தென்னை தரமாகவும், அதிக விளைச்சல் தருவதால் மஞ்சமேடு, புலியூர், பண்ணந்தூர் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 80 ஆண்டுகளுக்கும் மேலாக தரமான தென்னை ரகங்கள் உற்பத்தி செய்து இந்திய அளவில் இன்றுவரை அனுப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பல்வேறு கட்ட ஆய்வுகளுக்கு பிறகு அரசம்பட்டி தென்னைக்கு புவிசார் குறியீடு வழங்கி வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் பேரில் போச்சம்பள்ளி பகுதியில் தென்னை ஆராய்ச்சி மையம் உருவாக்கி, விவசாயிகளுடைய வாழ்வாதாரத்தை லாபகரமாக மாற்ற விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:
-கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை, சேலம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பல லட்சம் தென்னை விவசாயிகள் பயன்பெறும் வகையில் போச்சம்பள்ளியில் தேங்காய் எண்ணெய் உற்பத்தி ஆலையை நிறுவி பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும்.
எண்ணெய் ஆலையை நிறுவி, வெளிநாடுகளுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்தால், அரசுக்கு பல்லாயிரம் கோடி ஆண்டு வருமானம் கிடைக்க வழி உள்ளது. இதனால் தென்னை விவசாயிகளின் வாழ்க்கை வளம் பெறும். இதனால் பல ஆயிரம் வேளாண் பட்டதாரிகளுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும், என்றனர்.
- ஓசூர் உட்கோட்டத்தில் பெண்களை வைத்து விபசாரம் செய்ததாக கடந்த 1 மாதத்தில் 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
- விபசார தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 20 பெண்கள் மீட்கப்பட்டு மறுவாழ்வு பெற அரசு பெண்கள் பாதுகாப்பு இல்லங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பழைய நகராட்சி அலுவலகம் எதிரில் மசாஜ் சென்டரில் விபசாரம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஓசூர் அட்கோ போலீசார் அந்த மசாஜ் சென்டரில் திடீரென சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு பெண்களை வைத்து விபசாரம் செய்வது தெரிய வந்தது. இதையடுத்து அதன் உரிமையாளர், ஓசூர் கைரளி நகர் பகுதியை சேர்ந்த பிஜு (வயது48) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் மசாஜ் சென்டரில் இருந்த 3 பெண்களை போலீசார் மீட்டு அரசு பெண்கள் பாதுகாப்பு இல்லங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதேபோல் ஓசூர் மாருதி நகரில் உள்ள மசாஜ் சென்டரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினோத்குமார் மற்றும் போலீசார் சோதனை நடத்தினர்.
அங்கு இளம்பெண்களை வைத்து விபசாரம் செய்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக மசாஜ் சென்டரின் மேலாளர் ஆனேக்கல் பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் பெங்களூருவை சேர்ந்த புரோக்கர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.ஓசூர் உட்கோட்டத்தில் பெண்களை வைத்து விபசாரம் செய்ததாக கடந்த 1 மாதத்தில் 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விபசார தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 20 பெண்கள் மீட்கப்பட்டு மறுவாழ்வு பெற அரசு பெண்கள் பாதுகாப்பு இல்லங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும் ஓசூர் உட்கோட்டத்தில் உள்ள காவல் நிலைய சரகங்களில் அனுமதியில்லாமல் ஸ்பா மற்றும் விபசாரம் நடத்துவது தெரிய வந்தால், ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கைபேசி 6383291232 என்ற எண்ணிற்கு தெரிவிக்கலாம் என்று கேட்டுக ்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், தகவல் தெரிவிக்கும் நபர்களின் விவரம், ரகசியம் காக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அடிக்கடி வீட்டில் குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
- மனவிரக்தி அடைந்த தீபநாயகி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், அரசம்பட்டி அருகே உள்ள பாரூர் பகுதியை சேர்ந்தவர் தர்மன். இவரது தீபநாயகி (வயது29). இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் மனவிரக்தி அடைந்த தீபநாயகி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் உடலை மீட்டு போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இவருக்கு 3 வயது மகள், 6 வயது மகன் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து பாரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- பெற்றோருக்கும் சரவணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
- மனவிரக்தி அடைந்த சரவணன் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே உள்ள மேட்டுகொட்டாய் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் சரவணன் (வயது30). கூலித் தொழிலாளி.
இவருக்கு திருமணம் ஆகாத நிலையில் வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் பெற்றோருக்கும் சரவணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் மனவிரக்தி அடைந்த சரவணன் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து மத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- ஊராட்சி மன்றத் தலைவர் மீனா சக்தி தலைமை ஊராட்சி மன்ற அலக வாளாகத்தில் தலைம கூட்டம் நடைபெற்றது.
- இதற்கான ஏற்பாடுகளை ஊராட்சி வெங்கடேசன் செய்திருந்தார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம், மத்தூர் ஊராட்யில் உலக தண்ணீர் தின சிறப்பு கிரா சபை கூட்டம் ஊராட்சி மன்றத் தலைவர் மீனா சக்தி தலைமை ஊராட்சி மன்ற அலக வாளாகத்தில் தலைம கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் விடுபட்ட அனைத்து கிராம வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் வழங்குதல் குடிநீர் வழங்குதல், கோடை காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு மிக்க இடங்களில் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொண்டு குடிநீர் பிரச்சனைகளை தீர்த்தல், வறுமைக்கோட்டுக்கு கீழ் இலக்கு மக்கள் பட்டியலில் விடுபட்ட பயனாளிகளை சேர்த்தல் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் ரவி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர், வார்டு உறுப்பினர்கள் மக்கள் நல பணியாளர் ராஜா, சுய உதவிக் குழு பெண்கள், தொண்டு நிறுவனங்கள் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஊராட்சி வெங்கடேசன் செய்திருந்தார்.
- பொது மக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்தும் விளக்கி கூறப்பட்டது.
- பொதுமக்களின் அடிபடி வசதிகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்வது உள்ளிட்ட பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் களர்பதி ஊராட்சி, கொத்தக்கோட்டை பெருமாளப்பன் கோவில் வளாகத்தில் உலக தண்ணீர் தின சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பொது மக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்தும், மத்திய அரசு திட்டத்தின் கீழ் ஜெல்ஜீவன் திட்டத்தில் வீட்டுக்கு வீடு இலவச குடிநீர் இணைப்பு வழங்குவது. வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பொதுமக்களை கண்டறிந்து கணக்கெடுத்தல். தங்கள் பகுதிகளை தூய்மையாக வைத்து கொள்வது, ஊராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் தெருவிளக்கு குடிநீர், .கழிவு நீர் கால்வாய் பொதுமக்களின் அடிபடி வசதிகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்வது உள்ளிட்ட பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயந்திபுகழேந்தி தலைமை தாங்கினார். ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் தமிழ்செல்வி கருணாநிதி, ஒன்றிய பொறியாளர் ஜமுனா, ஒன்றிய கவுன்சிலர் மகேஸ்வரி மாதப்பன், வருவாய்த்துறை ,நியாய விலை கடை பணியாளர்கள். அங்கன்வாடி பணியாளர்கள். சுய உதவிக் குழு பெண்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் திரளரக கலந்து கொண்டனர். கூட்டத்திற்கான ஏற்படுகளை ஊராட்சி செயலர் சரவணன் செய்திருந்தார்.






