என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    டாஸ்மாக் கடையில் கொள்ளையடித்த 3 பேர் கைது
    X

    டாஸ்மாக் கடையில் கொள்ளையடித்த 3 பேர் கைது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தினர்.
    • மேலும் தலைமறைவான 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே உள்ள தபால்மேடு டாஸ்மாக் கடையில் விற்பனையாளர்களாக பணியாற்றுபவர் மாதேஷ் (வயது48). இவர் கடந்த 19-ந் தேதி இரவு பணி முடிந்து டாஸ்மாக் கடையை மூடி விட்டு மது விற்பனையான பணத்துடன் வீட்டுக்கு செல்வதற்காக வெளியே வந்தார்.

    அப்போது 2 மோட்டார்சைக்கிளில் முகமூடி அணிந்து வந்த 5 பேர் மாதேசின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி ரூ.4 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர்.

    இதுகுறித்து மாதேஷ் பர்கூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமூடி கொள்ளையாளர்கள் குறித்து விசாரணை நடத்தினர்.

    அப்போது ஓசூரை சேர்ந்த மர்ம நபர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இதனிடையே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் ஓசூர் சக்தி நகர் சந்தோஷ் (23), முனீஸ்வரன் நகர் கோகுல் (21), வேலூர் மாவட்டம், குடியாத்தம் சூர்யா (23) ஆகியோர் என்பதும், நண்பர்களுடன் சேர்ந்து டாஸ்மாக் விற்பனையாளிடம் பணத்தை கொள்ளையடித்து சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களை சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவான 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×