என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம்"

    • அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்தனர். அதற்குள் முகமூடி கும்பல் தப்பி சென்றது.
    • கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு சென்று வீட்டில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்து கொண்டனர்.

    காவேரிப்பட்டணம்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப ்பட்டணம் அருகே உள்ள சப்பாணிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி (வயது 88). ஓய்வுபெற்ற ஆசிரியர். இவரது மனைவி சென்னம்மாள் (77). இவர்களின் வீடு சப்பாணிப்பட்டி மேம்பாலம் அருகில் உள்ளது. மகன்கள், மகள்கள் திருமணமாகி வெளியூர்களில் வசித்து வருகின்றனர். இதனால் வயதான கணவன்- மனைவி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு வயதான தம்பதியினர் வீட்டில் தூங்கி கொண்டு இருந்தனர். அப்போது 3 பேர் முகத்தில் கருப்பு துணியை கட்டிக் கொண்டு வீட்டுக்குள் திடீரென புகுந்தனர்.

    முகமூடி அணிந்த அந்த கும்பல் வயதான தம்பதியை கத்தி முனையில் மிரட்டி வீட்டில் இருந்த 80 பவுன் தங்க நகைகள், 2 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.3 லட்சம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். அவர்கள் சென்றதும் கணவன்- மனைவி இருவரும் சத்தம் போட்டு அலறினர்.

    அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்தனர். அதற்குள் முகமூடி கும்பல் தப்பி சென்றது. தகவல் அறிந்ததும் காவேரிப்பட்டணம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு சென்று வீட்டில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்து கொண்டனர்.

    இந்த கொள்ளை சம்பவம் குறித்து காவேரிப்பட்டணம் போலீசில் ரங்கசாமி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    ×