என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    களர்பதியில் சிறப்பு கிராம சபை கூட்டம்
    X

    மத்தூர் ஒன்றியம் களர்பதி ஊராட்சி கொத்தக் கோட்டை பெருமாளப்பன் கோவில் வளாகத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயந்தி புகழேந்தி தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

    களர்பதியில் சிறப்பு கிராம சபை கூட்டம்

    • பொது மக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்தும் விளக்கி கூறப்பட்டது.
    • பொதுமக்களின் அடிபடி வசதிகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்வது உள்ளிட்ட பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் களர்பதி ஊராட்சி, கொத்தக்கோட்டை பெருமாளப்பன் கோவில் வளாகத்தில் உலக தண்ணீர் தின சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் பொது மக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்தும், மத்திய அரசு திட்டத்தின் கீழ் ஜெல்ஜீவன் திட்டத்தில் வீட்டுக்கு வீடு இலவச குடிநீர் இணைப்பு வழங்குவது. வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பொதுமக்களை கண்டறிந்து கணக்கெடுத்தல். தங்கள் பகுதிகளை தூய்மையாக வைத்து கொள்வது, ஊராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் தெருவிளக்கு குடிநீர், .கழிவு நீர் கால்வாய் பொதுமக்களின் அடிபடி வசதிகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்வது உள்ளிட்ட பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயந்திபுகழேந்தி தலைமை தாங்கினார். ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் தமிழ்செல்வி கருணாநிதி, ஒன்றிய பொறியாளர் ஜமுனா, ஒன்றிய கவுன்சிலர் மகேஸ்வரி மாதப்பன், வருவாய்த்துறை ,நியாய விலை கடை பணியாளர்கள். அங்கன்வாடி பணியாளர்கள். சுய உதவிக் குழு பெண்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் திரளரக கலந்து கொண்டனர். கூட்டத்திற்கான ஏற்படுகளை ஊராட்சி செயலர் சரவணன் செய்திருந்தார்.

    Next Story
    ×