என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • இவருக்கு பல்வேறு இடங்களில் பெண் பார்த்தும் திருமணம் ஆகவில்லை.
    • மனமுடைந்த சரவணன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள மேட்டுகொட்டாய் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் சரவணன் (வயது30). இவர் தனியார் பள்ளியில் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார்.

    இந்நிலையில் இவருக்கு பல்வேறு இடங்களில் பெண் பார்த்தும் திருமணம் ஆகவில்லை. இதனால் மனமுடைந்த சரவணன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    இது குறித்து மத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

    • அலுவலர்களின் பதவி உயர்வு பாதுகாப்பிற்கான ஆணைகள் விரைவில் வழங்கிட வேண்டும்.
    • அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களை உடனே நிரப்பிட வேண்டும்

    கிருஷ்ணகிரி,

    வருவாய்த்துறை அலுவலர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 9-ந் தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் உள்ள வருவாய்த்துறை ஊழியர்கள் ஒரு நாள் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், 400-க்கும் மேற்பட்ட வருவாய்த்துறை அலுவலர்கள், ஊழியர்கள் 100 சதவீதம் விடுப்பு போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    இதில், தொடந்து 4 ஆண்டுகளாக வெளியிடப்படாமல் உள்ள துணை கலெக்டர் பட்டியலை உடனே வெளியிட வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பின் காரணமாக துணை தாசில்தார் உள்ளிட்ட பதவி உயர்வு பட்டியல் திருத்தத்தின் காரணமாக பதவி இறக்கம் பெறும் அலுவலர்களின் பதவி உயர்வு பாதுகாப்பிற்கான ஆணைகள் விரைவில் வழங்கிட வேண்டும்.

    அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களை உடனே நிரப்பிட வேண்டும். இளநிலை வருவாய் ஆய்வாளர் மற்றும் முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற அரசாணையை வெளியிட வேண்டும். அரசுடனான பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட எங்களது கோரிக்கையின் மீது உரிய ஆணைகள் வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    • கரகத்தை கோவில் பூசாரி எடுத்து கொண்டு ஊர்வலமாக சென்றார்.
    • கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டின் முன்பும் கரகத்திற்கு சிறப்பு பூஜை செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த சிந்தகம்பள்ளி கிராமம் ஆந்திர மாநில எல்லையில் உள்ளது. இந்த கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் யுகாதி பண்டிகை விமரிசையாக கொண்டாடுவது வழக்கம்.

    அதன்படி இந்தாண்டு திருவிழா கடந்த 22-ந் தேதி ஊரில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு வேப்பம் பத்திரி வெல்லம் வைக்கும் நிகழ்ச்சியும், இரவு தீச்சட்டி எடுக்கும் நிகழ்ச்சியும் நடந்தது.

    விழாவில் நேற்று அதிகாலை முத்துமாரியம்மன் கரகம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. மல்லிகைப்பூ மற்றும் வெள்ளியால் ஆன சிறிய குடைகள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட கரகத்தை கோவில் பூசாரி எடுத்து கொண்டு ஊர்வலமாக சென்றார்.

    அப்போது கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டின் முன்பும் கரகத்திற்கு சிறப்பு பூஜை செய்தனர், பின்னர் பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற அண்ணா நகரில் உள்ள காளிக்கோவில் அருகில் இருந்து முத்துமாரியம்மன் கோவில் வரை சாலையில் ஈரத்துணியுடன் படுத்து கொண்டனர்.

    அவர்கள் மீது கரகம் எடுத்து வந்த பூசாரி நடந்து சென்றார். பின்னர் கோவில் எதிரில் அமைக்கப்பட்டிருந்த தீ குண்டத்தில் கரகத்துடன் பூசாரி இறங்கியவுடன், அவரை தொடர்ந்து பக்தர்கள் இறங்கினர்.

    தொடர்ந்து பேய் விரட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்ற பக்தர்கள் தங்கள் கைகளை மேலே தூக்கி கொள்ள அந்த கைகள் மீது பூசாரி சாட்டையால் அடித்தார். மேலும் பக்தர்கள் ஆடு, கோழி பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    • லோகநாதனிடம் முனிராஜ் பணம் இருந்தால் கொடுங்கள் அந்த பணத்தை இருமடங்காக தருகிறேன் என ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
    • முனிராஜ் பணத்தை திருப்பி கொடுக்கமுடியாது என மிரட்டல் விடுத்துள்ளார்.

    ராயக்கோட்டை,

    கோவை மாவட்டம், சவுரிபாளையம் வி.ஒ.சி நகர் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (வயது56). விவசாயி.

    இவருடைய நண்பர் தருமபுரி மாவட்டம், பாலக்கோடு மல்லூப்பட்டி பகுதியை சேர்ந்த முனிராஜ் இவர்கள் இருவரும் நண்பர்கள்.

    இந்நிலையில் லோகநாதனிடம் முனிராஜ் பணம் இருந்தால் கொடுங்கள் அந்த பணத்தை இருமடங்காக தருகிறேன் என ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

    இதனை நம்பி கடந்த பிப்ரவரி மாதம் 22-ம் தேதி ரூ.8 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை தக்காளி மார்க்கெட் அருகே முனிராஜ் நண்பர்களுடன் காரில் வந்து பணத்தை வாங்கியுள்ளார்.

    இந்நிலையில் பணத்தை வாங்கிகொண்டு இது நாள்வரையிலும் எவ்வித பணமும் கொடுக்கமல் ஏமாற்றி வந்துள்ளதை அடுத்து பணத்தை லோகநாதன் திருப்பி கேட்டுள்ளார்.

    அதற்கு முனிராஜ் பணத்தை திருப்பி கொடுக்கமுடியாது என மிரட்டல் விடுத்துள்ளார்.

    இது குறித்து ராயக்கோட்டை போலீசில் லோகநாதன் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் வழக்கு பதிவு செய்து முனிராஜ் நண்பர்களான பாலக்கோட்டை சேர்ந்த சக்திவேல் (26), ஜக்கசமுத்திரம் தமிழரசன் (32) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

    • கூட்டாளிகளுக்கு தகவல் கொடுத்து, மாதேவை மிரட்டி பணத்தை பறித்து செல்லாம் என திட்டம் போட்டு கொடுத்துள்ளார்.
    • ஒரு கும்பல் மாதேசை மிரட்டி பணம் ரூ.4 லட்சத்தை பறித்து சென்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த தபால்மேடு டாஸ்மாக்கில் விற்பனையாளராக பணியாற்றுபவர் மாதேஷ் (வயது 48). இவர், கடந்த, 19-ந் தேதி இரவு, 10 மணிக்கு டாஸ்மாக் கடையை மூடி வெளியே வந்தபோது அவரது கழுத்தில் கத்தியை வைத்து, ரூ.4 லட்சத்தை 2 மோட்டார்சைக்கிளில் வந்த 5 பேர் கொண்ட முகமூடி கும்பல் கொள்ளையடித்து சென்றது.

    இதுகுறித்து மாதேஷ் கொடுத்த புகாரின் பேரில் பர்கூர் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதில் அந்த பகுதியில் உள்ள செல்போன் டவர்களில் பதிவான எண்களை ஆராய்ந்த போது ஓசூரை சேர்ந்த சிலர் இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    இதையடுத்து ஓசூர் சக்தி நகர் சந்தோஷ் (23), முனீஸ்வரன் நகர் கோகுல் (21), வேலூர் மாவட்டம், குடியாத்தம் சூர்யா (23) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஓசூர் வ.உ.சி. நகரை சேர்ந்த முருகேசன் (32), சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்த அருள்நிதி (36), சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலை சேர்ந்த அஜித் (27) ஆகியோருக்கும் இந்த கொள்ளையில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவர்கள் 3 பேரையும் நேற்று போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டன. கைதானவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் தெரிய வந்தன. அவை வருமாறு:-

    கைதான அஜித் சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலை சேர்ந்தவர். அவர் பர்கூர் தபால் மேடு பகுதியில் மதுக்கடை அருகில் உள்ள பாரில் வேலை செய்து வருகிறார். அவர் தினமும் விற்பனையாளர் மாதேஷ் வசூல் ஆகும் பணத்தை எடுத்து செல்வதை நோட்டமிட்டுள்ளார். இதையடுத்து அவர் சிவகங்கை மற்றும் ஓசூர் பகுதியில் உள்ள தனது கூட்டாளிகளுக்கு தகவல் கொடுத்து, மாதேவை மிரட்டி பணத்தை பறித்து செல்லாம் என திட்டம் போட்டு கொடுத்துள்ளார். அவர் வகுத்து கொடுத்த திட்டத்தின்படி 10 பேர் சம்பவத்தன்று அங்கு வந்துள்ளனர்.

    அவர்களில் ஒரு கும்பல் மாதேசை மிரட்டி பணம் ரூ.4 லட்சத்தை பறித்து சென்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கைதான அஜித் முதலில் அருள்நிதிக்கு தகவல் கொடுத்து வரவழைத்துள்ளார். பின்னர் மற்ற கொள்ளையர்கள் வந்து இந்த கொள்ளையை அரங்கேற்றி உள்ளனர். கைதான அருள்நிதி மீது சிவகங்கை உள்பட பல்வேறு பகுதிகளில் வழக்குகள் உள்ளன. இந்த கொள்ளையில் மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். அவர்கள் பிடிபட்டால் இதே போல வேறு எங்கும் கொள்ளை சம்பவத்தை அவர்கள் அரங்கேற்றி உள்ளார்களா? என தெரிய வரும்.

    • ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ந் தேதியை சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    • முன்னதாக மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் மகேஸ்குமார் வரவேற்றார்.

    கிருஷ்ணகிரி,  

    கிருஷ்ணகிரியில் மாவட்ட அளவிலான மகளிருக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தன. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ந் தேதியை சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில், கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், மாவட்ட அளவில் மகளிருக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

    இதில், 100 மீ., 200 மீ., 400 மீ., ஓட்டப் போட்டிகளும், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல் போட்டிகளும், இறகுப்பந்து விளையாட்டில் இரட்டையர் பிரிவு போட்டிகளும், கபாடி, ஜுடோ மற்றும் கயிறு இழுத்தல் போட்டிகள் நடந்தன.

    இப்போட்டிகளை கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் பரிதா நவாப் தொடங்கி வைத்தார். முன்னதாக மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் மகேஸ்குமார் வரவேற்றார்.

    அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த அனைத்து வயது பிரிவுகளிலும், 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    • தி.மு.க.வில் உறுப்பினர்கள் சேர்க்கை, பூத் கமிட்டி தொடர்பாக பேசப்படுகிறது.
    • மேலும் சென்னையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விவாதித்த விஷயங்கள் தொடர்பாக பேசப்படுகிறது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் டி.மதியழகன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் மாவட்ட அவைத் தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ் தலைமையில் நாளை (சனிக்கிழமை) காலை 10.35 மணிக்கு கிருஷ்ணகிரி தேவராஜ் மகாலில் நடைபெற உள்ளது.

    இதில் முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள், தி.மு.க.வில் உறுப்பினர்கள் சேர்க்கை, பூத் கமிட்டி தொடர்பாக பேசப்படுகிறது. மேலும் தி.மு.க. தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விவாதித்த விஷயங்கள் தொடர்பாக பேசப்படுகிறது.

    எனவே கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த மாநில நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், மற்றும் அனைத்து நிர்வாகிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், மாவட்ட ஊராட்சி குழு, ஒன்றிய குழு நிர்வாகிகள், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள், கவுன்சிலர்கள், பி.எல்.ஏ-2 உள்ளிட்ட அனைவரும் தவறாமல் இந்த மாவட்ட செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மரக்கன்றுகளை நட்டு மழை பொழிய வேண்டிய அவசியத்தை மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
    • ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் பேரூராட்சித் தலைவர் அம்சவேணி செந்தில் குமார் 100 மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

    காவேரிப்பட்டணம்,  

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் பேரூராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு தென்பெண்ணை ஆற்றங்கரையில் அமைந்துள்ள வீர ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

    இதனையொட்டி தமிழக அரசு தண்ணீர் தினம் குறித்து நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தண்ணீரை மக்கள் சிக்கனமாக பயன்படுத்தவும், தண்ணீர் மாசு ஏற்படாத வகையில் பாதுகாக்கவும் , தண்ணீரை சேமிப்பினை மேம்படுத்தவும், அனைத்து ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபா கூட்டம் நடத்திட வேண்டும்.

    மேலும் மரக்கன்றுகளை நட்டு மழை பொழிய வேண்டிய அவசியத்தை மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். என தமிழக முதல்- அமைச்சர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டதின் அடிப்படையில் காவேரிப்பட்டினம் ஊராட்சியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் பேரூராட்சித் தலைவர் அம்சவேணி செந்தில் குமார் 100 மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

    நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் செந்தில்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • ஆவேசத்துடன் சங்கரின் வீட்டு ஜன்னல் கண்ணாடிகளையும், வீட்டில் உள்ளே இருந்த பொருட்களையும் அடித்து நொறுக்கி சூறையாடினர்.
    • இந்த வழக்கில் தொடர்புடைய கரியன் என்கிற முரளி, நாகராஜ் ஆகிய 2 பேர் இன்று மதியம் சேலம் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

    காவேரிப்பட்டணம்,

    கிருஷ்ணகிரி அருகே உள்ள கிட்டம்பட்டியை சேர்ந்தவர் சின்னபையன். இவரது மகன் ஜெகன் (வயது28). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. அவதானப்பட்டி அருகே உள்ள முழுக்கான்கொட்டாயை சேர்ந்தவர் சங்கர். இவரது மகள் சரண்யா (21). ஜெகனும், சரண்யாவும் பள்ளி பருவத்தில் இருந்து காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு சரண்யாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதை மீறி சரண்யா கடந்த ஜனவரி 26-ந் தேதி ஜெகனை திருமணம் செய்தார். இந்த நிலையில் ஜெகனை நேற்று முன்தினம் அவரது மாமனார் சங்கர் (43) உள்பட சிலர் சேர்ந்து கிருஷ்ணகிரி டேம் ரோடு சாலையில் அரிவாளால் வெட்டியும், கழுத்தை அறுத்தும் கவுரவக்கொலை செய்தனர். இதுதொடர்பாக காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இந்த கொலை தொடர்பாக சங்கர், கிருஷ்ணகிரி கோர்ட்டில் நேற்று முன்தினம் சரண் அடைந்தார்.

    இதையடுத்து போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் முழுக்கான்கொட்டாயில் உள்ள சங்கரின் வீட்டிற்கு நேற்று முன்தினம் இரவு ஜெகனின் உறவினர்கள் சென்றனர். அவர்கள் ஆவேசத்துடன் சங்கரின் வீட்டு ஜன்னல் கண்ணாடிகளையும், வீட்டில் உள்ளே இருந்த பொருட்களையும் அடித்து நொறுக்கி சூறையாடினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். தொடர்ந்து அசம்பாவித சம்பவம் ஏற்படாமல் இருக்க போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

    இதையடுத்து நேற்று தனிப்படை போலீசார் ஜெகனை கொலை செய்த வழக்கில் தலைமறைவான குற்றவாளிகள் 2 பேரை போலீசார் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய கரியன் என்கிற முரளி, நாகராஜ் ஆகிய 2 பேர் இன்று மதியம் சேலம் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

    • போலீசார் பர்கூர் தேவீரஅள்ளி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • 100 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மதுவிலக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிரஞ்சிகுமார் மற்றும் போலீசார் பர்கூர் தேவீரஅள்ளி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது சந்தேகத்தின் பேரில் நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரனை நடத்தியத்தில் அதே பகுதியை சேர்ந்த சின்னசாமி மகன் சரவணன்( வயது30) என்பதும் அவரிடமிருந்து 100 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

    • மனைவி மரகதம் ஏன் தினமும் குடித்துவிட்டு வருகிறாய் என கேட்டுள்ளார்.
    • ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த சேகர் நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், மகாராஜகடை அருகே உள்ள கொட்டவூர் பகுதியை சேர்ந்த வர் சேகர்(வயது45) கூலி தொழிலாளி, இவருக்கு குடிபழக்கத்திற்கு அடிமையானவர், இந்த நிலையில் இவரது மனைவி மரகதம் ஏன் தினமும் குடித்துவிட்டு வருகிறாய் என கேட்டுள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த சேகர் நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து மகாராஜகடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கடந்த 6நாட்களான முன்னர் பெண் குழந்தை பிறந்துள்ளது.
    • குழந்தைக்கு பாலுட்டிய போது மூச்சுதனறி இறந்துள்ளது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே உள்ள சிந்தகம்பள்ளி பகுதியை சேர்ந்த ஜெயபிரகாஷ்(வயது31) இவரது மனைவிக்கு கடந்த 6நாட்களான முன்னர் பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில் குழந்தைக்கு பாலுட்டி உள்ளார். அப்போது குழந்தைக்கு மூச்சுதனறி இற்துள்ளது. பின்னர் இது குறித்து ஜெய்பிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில் பர்கூர் போலீசார் வழக்ககு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்

    ×