என் மலர்
கிருஷ்ணகிரி
- மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், நிரந்தர அதிகாரியை உடனடியாக பணி அமைத்திட வேண்டும்.
- வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை 150 நாட்கள் என உயர்த்தி, 4 மணி நேரத்திற்கு ஊதுயம் உயர்த்தி வழங்கிட வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் திருப்பதி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பெரியசாமி தொடக்க உரையாற்றினார். மாவட்ட பொருளாளர் ஜெயராமன் சிறப்புரையாற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, பல்நோக்கு அடையாள அட்டை அனைவருக்கும் வழங்க வேண்டும். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், நிரந்தர அதிகாரியை உடனடியாக பணி அமைத்திட வேண்டும். விண்ணப்பித்து பலமாதங்கள் காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு தொகை ரூ.1500 மற்றும் அலுவலத்தில் பதிவு செய்து காத்திருப்பவர்களுக்கு ரூ.2 ஆயிரம் என அனைவருக்கும் வழங்க வேண்டும்.
தமிழக அரசு உயர்த்தி வழங்கும் ரூ.500 பெறாதவர்கள் நூற்றுக்கணக்காணவர்கள் உள்ளனர். அவர்களை பரிசோதித்து ரூ.1500 உயர்த்தி வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை 52 அரசு ஆணையை முழுமையாக அமல்படுத்தி 150 நாட்கள் என உயர்த்தி, 4 மணி நேரத்திற்கு ஊதுயம் உயர்த்தி வழங்கிட வேண்டும்.
வீடு இல்லாதவர்களுக்கு வீடு, பட்டா வழங்கிட வேண்டும் என்றது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து கலெக்டரை சந்தித்து மாற்றுத்திறனாளிகள் மனு கொடுப்பதற்காக சென்றனர். மாற்றுத்திறனாளிகள் வந்த தகவல் அறிந்து கலெக்டர் கீழே வந்து மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களை பெற்றார்.
- டிரைவரான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை
- மன வருத்தத்தில் இருந்த சரவணன், வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி தாலுகா கவுண்டனூர் அருகே உள்ள மேடுகொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 30). தனியார் பள்ளியில் பஸ் டிரைவராக வேலை செய்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில் மன வருத்தத்தில் இருந்த சரவணன், வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் மத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
- சம்பவத்தன்று மஞ்சுளா வீட்டை விட்டு வெளியில் சென்று வருவதாக கூறிச் சென்றவர் நீண்ட நேரமாகியிம் வீடு திரும்பவில்லை.
- உத்தனப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அருகே உள்ள அனுமந்தப்புரம் பகுதியை சேர்ந்த படேலப்பா (வயது28. இவரது மனைவி மஞ்சுளா (23).
சம்பவத்தன்று மஞ்சுளா வீட்டை விட்டு வெளியில் சென்று வருவதாக கூறிச் சென்றவர் நீண்ட நேரமாகியிம் வீடு திரும்பவில்லை.
இது குறித்து உத்தனப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
- "ஒவ்வொரு நாளும் மாணவர்களுக்கு நல்லதொரு அனுபவமாக இந்த சிறப்பு முகாம் அமையும்.
- குடும்பத்தை விட்டுத் தனியாக இருக்கின்ற இந்த 7 நாட்களும் இன்ப, துன்பங்களைப் பகிர்ந்து கொள்கின்ற இடமாக இருக்கும் என்றார்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் எம்.ஜி.ஆர் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் தொடக்க விழா, கோபசந்திரம், காமன்தொட்டி ஆகிய கிராமங்களில் தொடங்கியது.
சிறப்பு முகாமினை, எம்.ஜி.ஆர் கல்லூரி முதல்வர் முத்துமணி தொடங்கி வைத்து பேசுகையில், "ஒவ்வொரு நாளும் மாணவர்களுக்கு நல்லதொரு அனுபவமாக இந்த சிறப்பு முகாம் அமையும். குடும்பத்தை விட்டுத் தனியாக இருக்கின்ற இந்த 7 நாட்களும் இன்ப, துன்பங்களைப் பகிர்ந்து கொள்கின்ற இடமாக இருக்கும் என்றார்.
தூய்மை பாரதம், மரம் நடு விழா, இலவச கால்நடை மருத்துவ முகாம், இலவச பொது மருத்துவ முகாம், பெண்களுக்கு உண்டான பாதுகாப்பு குறித்த கருத்தரங்குகள், முதியோர் இல்லம் சென்று நலத்திட்ட உதவிகளை செய்தல், வங்கி கணக்கில் பணம் இல்லா பரிவர்த்தனை எவ்வாறு செய்வது போன்ற கருத்தரங்குகள் ஒவ்வொரு நாளும் இம்முகாமில் நடைபெற உள்ளன.
சிறப்பு முகாமினை, எம்.ஜி.ஆர் கல்லூரி முதல்வர் முத்துமணி தலைமை தாங்கினார். காமன் தொட்டி ஊராட்சி தலைவர் ஜோதிலட்சுமி திம்மராஜ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மோகன் குமார், கோபசந்திரம் இடைநிலை ஆசிரியர் ஸ்ரீ தேவி, எம்.ஜி.ஆர் கல்லூரி பேராசிரியர்கள் மதிவாணன், ரமேஷ், வார்டு உறுப்பினர் சீனிவாசன், தூர்வாசன் ஆகியோர் முகாமை வாழ்த்தி பேசினார்கள்.
இம்முகாமில் 100 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.சிறப்பு முகாம் ஏற்பாடுகளை, திட்ட அலுவலர்கள்லெனின் மற்றும் தேன்மொழி ஆகியோர் ஏற்பாடு செய்துள்ளனர்.
- பக்தர்கள் தேர் மீது உப்பு,மிளகு, வாழைப்பழம் வீசி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
- விழாவை யொட்டி பாகலூரில், பல்வேறு இடங்களில் தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டு, பக்தர்களுக்கு குடிநீர், மோர், பானகம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பாகலூரில், 450 ஆண்டுகள் பழமையான, மிகவும் பிரசித்தி பெற்ற கிராமதேவதை ஸ்ரீ மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் தேர்திருவிழா ஆண்டு தோறும் வெகு விமர்சையாக நடைப்பெறுவது வழக்கம். அந்த வகையில், நேற்று தேரோட்டம், விமரிசையாக நடைபெற்றது.
பாகலூர் பகுதியை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்த மன்னர் காலத்தில், ஓசூரில் உள்ள கோட்டை மாரியம்மன் கோவிலில் வழிபட்டு வந்ததாகவும், பின்பு பாகலூர் கிராமத்திலேயே வழிபட இந்த கிராம தேவதை மாரியம்மன் கோவில் கட்டப்பட்டு ஆண்டுதோறும் யுகாதி பண்டிகையை முன்னிட்டு தேர்திருவிழாவை 450 ஆண்டுகளாக நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்த ஆண்டு,விழா நிகழ்ச்சிகள் கடந்த 22-ந்தேதி தொடங்கியது.தொடர்ந்து பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.நேற்று, சிகர நிகழ்ச்சியாக, தேரோட்டம் நடைபெற்றது.
சிறப்பு யாகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகளுக்கு பிறகு, அலங்கரிக்கப்பட்ட தேரில், அம்மனை வைத்து, பக்தி முழக்கங்களுடன் பக்தர்கள் தேரை இழுத்து சென்றனர். மேலும் அப்போது, பக்தர்கள் தேர் மீது உப்பு,மிளகு, வாழைப்பழம் வீசி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். விழாவில், பாகலூர், பேரிகை ஓசூர் மற்றும் 84 கிராம பொதுமக்களும் மற்றும் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா என 3 மாநிலங்களின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திரளான பக்தர்கள் நடத்தினர். விழாவை யொட்டி பாகலூரில், பல்வேறு இடங்களில் தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டு, பக்தர்களுக்கு குடிநீர், மோர், பானகம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் இரவு பல்லக்கு உற்சவமும், முக்கிய நிகழ்வாக, பச்சை கரகமும் நடைபெறுகிறது.
விழாவில், பாகலூர் ஊராட்சி தலைவர் ஜெயராமன், முன்னாள் தலைவர் முரளிகுமார் பாபு, மற்றும் முக்கிய பிரமுகர்களும், சிறப்பு விருந்தினர்களாக, ஓசூர் மேயர் எஸ்.ஏ.சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, மாநகராட்சி கவுன்சிலர்கள் ஜெயபிரகாஷ், மாதேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருநாவுக்கரசை தம்பி பெருமாள் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு விறகு கட்டையால் தாக்கினாராம்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பெருமாளை கைது செய்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த கதவணி கிராமத்தை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 45). கூலித்தொழிலாளி.
இந்த நிலையில் திருநாவுக்கரசுவுக்கும், அவருடைய தம்பி மேஸ்திரியான பெருமாள் (35) என்பவருக்கும் வீட்டுமனை தொடர்பாக தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருநாவுக்கரசை தம்பி பெருமாள் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு விறகு கட்டையால் தாக்கினாராம்.
இதனை தடுக்க வந்த தாய் ராஜேஸ்வரிக்கும் காயம் ஏற்பட்டது. திருநாவுக்கரசு சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பெருமாளை கைது செய்தனர்.
- இது வரை இந்த பொறுப்பு களுக்கு வேறு யாரும் நியமிக்கப்படவில்லை.
- கொலை வழக்கில் கைதான சங்கர் அ.தி.மு.க கிளைச் செயலாளர் பொறுப்பில் இல்லை.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அருகே காதல் திருமணம் செய்த வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சங்கர் அ.தி.மு.க.வில் எந்த பொறுப்பிலும் இல்லை. தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின் சட்டசபையில் குறிப்பிட்டுள்ள தகவல் தவறானது என கிருஷ்ணகிரி அ.தி.மு.க கிழக்கு மாவட்டச் செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
கடந்த 2021-ல் நடந்த அ.தி.மு.க. உட்கட்சி அமைப்புத் தேர்தலில் கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றியம் பெரிய முத்தூர்ஊராட்சி புளுகான்கொட்டாய் கிளை நிர்வாகிகளாக அவை த்தலைவர் கோவிந்தராஜ், செயலாளர் கண்ணாயிரம், இணைச் செயலாளர் காவேரியம்மாள், துணைச் செயலாளர்கள் மாதேஸ்வரி, கணேசன், பொருளாளர் சரவணன், மேலமைப்பு பிரதிநிதிகள் மணி, சிவரஞ்சனி, மணி ஆகியோர் மட்டுமே பொறுப்பில் நியமிக்கப்பட்டு ள்ளனர்.
இது வரை இந்த பொறுப்பு களுக்கு வேறு யாரும் நியமிக்கப்படவில்லை. நேற்று சட்டசபையில் பேசிய தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின் கொலை வழக்கில் கைதான சங்கர் அ.தி.மு.க கிளைச் செயலாளர் பொறுப்பில் இல்லை.
இவ்வாறு அதில் அவர் கூறியிருந்தார்.
- மனைவி பல்லவி ஏன் இப்படி குடித்துவிட்டு வருகிறாய் என்று கேட்டதில் தகராறு ஏற்பட்டுள்ளது.
- மன விரக்தியடைந்த மகேஷ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்தள்ளார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி தேர்நிலை தெரு பகுதியை சேர்ந்தவர் மகேஷ் (வயது31). இவருக்கு குடி பழக்கம் இருந்துள்ளது.மேலும் அதிகளவில் கடன் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அவரது மனைவி பல்லவி ஏன் இப்படி குடித்துவிட்டு வருகிறாய் என்று கேட்டதில் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் மன விரக்தியடைந்த மகேஷ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்தள்ளார். உடனடியாக கிருஷ்ணகிரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
- முரளி, நாகராஜ் ஆகிய 2 பேர் சேலம் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
- இதை போல கவுரவக்கொலைகள் தமிழ்நாட்டில் எங்கும் நடக்க கூடாது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி கிட்டம்பட்டியை சேர்ந்தவர் ஜெகன் (வயது 28). இவரும், அவதானப்பட்டி முழுக்கான் கொட்டாயை சேர்ந்த சங்கர் மகள் சரண்யாவும் கடந்த ஜனவரி மாதம் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களின் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த சரண்யாவின் தந்தை சங்கர் மற்றும் சிலர் கடந்த 21-ந் தேதி ஜெகனை வெட்டிக்கொலை செய்தனர். இதையடுத்து சங்கர் கிருஷ்ணகிரி கோர்ட்டில் சரண் அடைந்தார். முரளி, நாகராஜ் ஆகிய 2 பேர் சேலம் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
இந்த நிலையில் ஜெகனின் மனைவி சரண்யா கண்ணீர் மல்க கதறிய படி நேற்று மாலை நிருபர்களிடம் கூறியதாவது:-
எனக்கு திருமணம் ஆகி 2 மாதங்கள் கூட இன்னும் நிறைவடையவில்லை. இதற்குள் இப்படி ஆகி விட்டது. நான் திருமணமாகி சென்ற நாள் முதல் எனது வீட்டு ஞாபகம் வந்தால் தனிமையில் அழுவேன்.
அப்போது என்னை சமாதானப்படுத்தி என்னுடன் சேர்ந்து எனது கணவரும் அழுவார். அவர் என்னை ராணி மாதிரி பார்த்து கொண்டார். அப்படிப்பட்டவரை அநியாயமாக கொன்று விட்டார்களே. அதற்கு என்னை கொலை செய்திருக்கலாமே. ஜெகனை மறக்க சொல்லி எனது தாய் என்னை எட்டி உதைத்த போதும், சித்ரவதை செய்தபோதும் பொறுத்து கொண்டு திருமணம் செய்தேன். எனது வாழ்க்கையை கெடுத்து விட்டார்கள். இந்த கொலையில் தொடர்புடைய எனது தந்தை உள்பட அனைவரையும் தூக்கில் போட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதே போல ஜெகனின் தந்தை சின்னபையன், சித்தப்பா சின்னசாமி ஆகியோர் கூறுகையில், இதை போல கவுரவக்கொலைகள் தமிழ்நாட்டில் எங்கும் நடக்க கூடாது. மேலும் கணவரை இழந்து தவிக்கும் அந்த பெண்ணுக்கு அரசு வேலையும், நிவாரணமும் கிடைக்க முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- அனைவருக்கும் திருச்சி நகரில் புகழ்பெற்ற பி.ஜி நாயுடு கம்பெனியில் இருந்து கேக்குகள் வழங்கப்பட்டது.
- முழு கவனத்துடன் கல்வி பயின்று வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டும்
கிருஷ்ணகிரி,
ஐ.வி.டி.பி தொண்டு நிறுவனம் கிராமத்து பெண்களை சுயசார்புடை யவர்களாக செய்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மாற்றுவதில் பெரும் பங்காற்றி வருகிறது.
அத்துடன் கல்விப்பணி யிலும் ஐ.வி.டி.பி. தனி முத்திரை பதித்து வருவது குறிப்பிடத்தக்கது.
அவ்வகையில் கல்வி ஊக்கப்பரிசுகள், பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு கல்லூரிக் கல்வி பயில உதவித்தொகை, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு தேவையான கல்வி உபகரணங்கள், கணினி ஆய்வகங்கள், ஸ்மார்ட் உபகரணங்கள் வழங்கி பல பணிகளை ஐ.வி.டி.பி உதவி புரிவது ஆசிரியர்களை ஊக்கப்படுத்துவது போன்ற நிறுவனம் செயல்படுத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக மாணவ மாணவியரை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் தலா ரூ.40 என கிருஷ்ணகிரி புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளியின் 2100 மாணவிகளுக்கு ரூ.84 ஆயிரம், புனித அன்னாள் மெட்ரிக் பள்ளியின் 650 மாணவர்களுக்கு ரூ.26 ஆயிரம், புனித அன்னாள் அரசு உதவி பெறும் துவக்கப் பள்ளியின் 1200 மாணவர்களுக்கு ரூ.48 ஆயிரம், மற்றும் கிருஷ்ணகிரி ஆர்.சி ஆண்கள் துவக்கப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளியின் 1700 மாணவர்களுக்கு ரூ.68 ஆயிரம்,
அத்திமுகம் NSCBAV உண்டு உறைவிடப் பள்ளி 158 மாணவர்களுக்கு ரூ.6ஆயிரம், ஓசூர் புனித ஜான் போஸ்கோ பள்ளியின் 1300 மாணவ மாணவியருக்கு ரூ.52 ஆயிரம், வேலூர் அக்சீலியம் கல்லூரியின 800 மாணவிகளுக்கு ரூ.32 ஆயிரம், ஆரணி புனித ஜோசப் குழந்தைகள் இல்லத்திற்கு 200 மாணவர்களுக்கு ரூ.8 ஆயிரம்,
கிருஷ்ணகிரி மாவட்ட மாற்றுத்திறனாளி பள்ளிகளின் 500 மாணவர்களுக்கு ரூ.20 ஆயிரம், பள்ளிகொண்டா லிட்டில் பிளவர் இல்லத்தில் தங்கி பயிலும் 300 மாணவர்களுக்கு ரூ.12 ஆயிரம், கோட்டையூர் ஐ.வி.டி.பி நேதாஜி பள்ளியின் 575 மாணவர்களுக்கு ரூ.23 ஆயிரம், மைசூர், பெலகொலா, மான்ட்போர்ட் செவித்திறன் குறையுடையோருக்கான பள்ளியில் பயிலும் 150 மாணவர்களுக்கு ரூ.6 ஆயிரம் மற்றும் ஐ.வி.டி.பியின் 440 பணியாளர்களுக்கு ரூ.60 ஆயிரம் என புத்தாண்டு கொண்டாட்டமாக அனைவருக்கும் திருச்சி நகரில் புகழ்பெற்ற பி.ஜி நாயுடு கம்பெனியில் இருந்து கேக்குகள் வழங்கப்பட்டது.
அனைத்து பள்ளி மற்றும் குழந்தைகள் இல்லங்களுக்கு நேரில் சென்று கேக்குகளை வழங்கிய ஐ.வி.டி.பி நிறுவன த்தலைவர் மாணவர்கள் முழு கவனத்துடன் கல்வி பயின்று வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டும் என அறிவுரை வழங்கி ஊக்கப்படுத்தினார்.
இவ்வருடத்தில் 9923 மாணவர்களுக்கு மொத்தம் ரூ.4.43 லட்சம் மதிப்பிலான கேக் (இனிப்புகளை) ஐ.வி.டி.பி நிறுவனம் மூலம் வழங்கப்பட்டுள்ளது என்ற தகவலையும் ஐ.வி.டி.பி நிறுவனத் தலைவர் ராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ் தெரிவித்தார்.
- தலைவர் நாராயணமூர்த்தி ஆகியோர் லந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள்.
- அப்போது அவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
கிருஷ்ணகிரி,
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. அவதூறு கருத்து கூறியதாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. இதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரியில் லண்டன்பேட்டை பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட துணைத் தலைவர் ரகமத்துல்லா தலைமை தாங்கினார். நகர தலைவர் லலித் ஆண்டனி, மாவட்ட பொதுச் செயலாளர் அப்சல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில பொதுச் செயலாளர் ஏகம்பவாணன், முன்னாள் மாவட்ட தலைவர் நாராயணமூர்த்தி ஆகியோர் லந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள்.
இதில் மாநில எஸ்.சி., எஸ்.டி. பிரிவு முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஆறுமுக சுப்பிரமணி, மாவட்ட செயலாளர் சக்கரவர்த்தி, கிருஷ்ணகிரி சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் சதாம், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் செயலாளர் மாரியப்பன், இர்பான், அஜிசுல்லா, அமாவாசை, பாண்டுரங்கன், சபீர், முனுசாமி, பாஸ்கர், மகபூப், சுபேர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது அவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அந்த நேரம் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த கிருஷ்ணகிரி டவுன் போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
- மலை அடிவாரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிரஞ்சிவிகுமார் மற்றும் போலீசார் வெப்பாளம்பட்டி மலை அடிவாரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்தறிக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரனை நடத்தியத்தில் அதே பகுதியை சேர்ந்த துரைராஜ் மகன் சூரியா (வயது19) என்பதும் அவரிடமிருந்து 100 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.






