என் மலர்
உள்ளூர் செய்திகள்

வீடு இல்லாதவர்களுக்கு வீடு,பட்டா வழங்கிட வேண்டும்-மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை
- மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், நிரந்தர அதிகாரியை உடனடியாக பணி அமைத்திட வேண்டும்.
- வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை 150 நாட்கள் என உயர்த்தி, 4 மணி நேரத்திற்கு ஊதுயம் உயர்த்தி வழங்கிட வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் திருப்பதி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பெரியசாமி தொடக்க உரையாற்றினார். மாவட்ட பொருளாளர் ஜெயராமன் சிறப்புரையாற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, பல்நோக்கு அடையாள அட்டை அனைவருக்கும் வழங்க வேண்டும். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், நிரந்தர அதிகாரியை உடனடியாக பணி அமைத்திட வேண்டும். விண்ணப்பித்து பலமாதங்கள் காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு தொகை ரூ.1500 மற்றும் அலுவலத்தில் பதிவு செய்து காத்திருப்பவர்களுக்கு ரூ.2 ஆயிரம் என அனைவருக்கும் வழங்க வேண்டும்.
தமிழக அரசு உயர்த்தி வழங்கும் ரூ.500 பெறாதவர்கள் நூற்றுக்கணக்காணவர்கள் உள்ளனர். அவர்களை பரிசோதித்து ரூ.1500 உயர்த்தி வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை 52 அரசு ஆணையை முழுமையாக அமல்படுத்தி 150 நாட்கள் என உயர்த்தி, 4 மணி நேரத்திற்கு ஊதுயம் உயர்த்தி வழங்கிட வேண்டும்.
வீடு இல்லாதவர்களுக்கு வீடு, பட்டா வழங்கிட வேண்டும் என்றது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து கலெக்டரை சந்தித்து மாற்றுத்திறனாளிகள் மனு கொடுப்பதற்காக சென்றனர். மாற்றுத்திறனாளிகள் வந்த தகவல் அறிந்து கலெக்டர் கீழே வந்து மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களை பெற்றார்.