என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது செய்யப்பட்டுள்ள சங்கர் அ.தி.மு.க.வில் எந்த பொறுப்பிலும் இல்லை-அசோக்குமார் அறிக்கை
    X

    கைது செய்யப்பட்டுள்ள சங்கர் அ.தி.மு.க.வில் எந்த பொறுப்பிலும் இல்லை-அசோக்குமார் அறிக்கை

    • இது வரை இந்த பொறுப்பு களுக்கு வேறு யாரும் நியமிக்கப்படவில்லை.
    • கொலை வழக்கில் கைதான சங்கர் அ.தி.மு.க கிளைச் செயலாளர் பொறுப்பில் இல்லை.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அருகே காதல் திருமணம் செய்த வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சங்கர் அ.தி.மு.க.வில் எந்த பொறுப்பிலும் இல்லை. தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின் சட்டசபையில் குறிப்பிட்டுள்ள தகவல் தவறானது என கிருஷ்ணகிரி அ.தி.மு.க கிழக்கு மாவட்டச் செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    கடந்த 2021-ல் நடந்த அ.தி.மு.க. உட்கட்சி அமைப்புத் தேர்தலில் கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றியம் பெரிய முத்தூர்ஊராட்சி புளுகான்கொட்டாய் கிளை நிர்வாகிகளாக அவை த்தலைவர் கோவிந்தராஜ், செயலாளர் கண்ணாயிரம், இணைச் செயலாளர் காவேரியம்மாள், துணைச் செயலாளர்கள் மாதேஸ்வரி, கணேசன், பொருளாளர் சரவணன், மேலமைப்பு பிரதிநிதிகள் மணி, சிவரஞ்சனி, மணி ஆகியோர் மட்டுமே பொறுப்பில் நியமிக்கப்பட்டு ள்ளனர்.

    இது வரை இந்த பொறுப்பு களுக்கு வேறு யாரும் நியமிக்கப்படவில்லை. நேற்று சட்டசபையில் பேசிய தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின் கொலை வழக்கில் கைதான சங்கர் அ.தி.மு.க கிளைச் செயலாளர் பொறுப்பில் இல்லை.

    இவ்வாறு அதில் அவர் கூறியிருந்தார்.

    Next Story
    ×