என் மலர்
உள்ளூர் செய்திகள்

9923 பள்ளி மாணவர்களுக்கு ரூ.4.43 லட்சம் மதிப்பிலான இனிப்புகள் வழங்கல்
- அனைவருக்கும் திருச்சி நகரில் புகழ்பெற்ற பி.ஜி நாயுடு கம்பெனியில் இருந்து கேக்குகள் வழங்கப்பட்டது.
- முழு கவனத்துடன் கல்வி பயின்று வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டும்
கிருஷ்ணகிரி,
ஐ.வி.டி.பி தொண்டு நிறுவனம் கிராமத்து பெண்களை சுயசார்புடை யவர்களாக செய்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மாற்றுவதில் பெரும் பங்காற்றி வருகிறது.
அத்துடன் கல்விப்பணி யிலும் ஐ.வி.டி.பி. தனி முத்திரை பதித்து வருவது குறிப்பிடத்தக்கது.
அவ்வகையில் கல்வி ஊக்கப்பரிசுகள், பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு கல்லூரிக் கல்வி பயில உதவித்தொகை, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு தேவையான கல்வி உபகரணங்கள், கணினி ஆய்வகங்கள், ஸ்மார்ட் உபகரணங்கள் வழங்கி பல பணிகளை ஐ.வி.டி.பி உதவி புரிவது ஆசிரியர்களை ஊக்கப்படுத்துவது போன்ற நிறுவனம் செயல்படுத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக மாணவ மாணவியரை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் தலா ரூ.40 என கிருஷ்ணகிரி புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளியின் 2100 மாணவிகளுக்கு ரூ.84 ஆயிரம், புனித அன்னாள் மெட்ரிக் பள்ளியின் 650 மாணவர்களுக்கு ரூ.26 ஆயிரம், புனித அன்னாள் அரசு உதவி பெறும் துவக்கப் பள்ளியின் 1200 மாணவர்களுக்கு ரூ.48 ஆயிரம், மற்றும் கிருஷ்ணகிரி ஆர்.சி ஆண்கள் துவக்கப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளியின் 1700 மாணவர்களுக்கு ரூ.68 ஆயிரம்,
அத்திமுகம் NSCBAV உண்டு உறைவிடப் பள்ளி 158 மாணவர்களுக்கு ரூ.6ஆயிரம், ஓசூர் புனித ஜான் போஸ்கோ பள்ளியின் 1300 மாணவ மாணவியருக்கு ரூ.52 ஆயிரம், வேலூர் அக்சீலியம் கல்லூரியின 800 மாணவிகளுக்கு ரூ.32 ஆயிரம், ஆரணி புனித ஜோசப் குழந்தைகள் இல்லத்திற்கு 200 மாணவர்களுக்கு ரூ.8 ஆயிரம்,
கிருஷ்ணகிரி மாவட்ட மாற்றுத்திறனாளி பள்ளிகளின் 500 மாணவர்களுக்கு ரூ.20 ஆயிரம், பள்ளிகொண்டா லிட்டில் பிளவர் இல்லத்தில் தங்கி பயிலும் 300 மாணவர்களுக்கு ரூ.12 ஆயிரம், கோட்டையூர் ஐ.வி.டி.பி நேதாஜி பள்ளியின் 575 மாணவர்களுக்கு ரூ.23 ஆயிரம், மைசூர், பெலகொலா, மான்ட்போர்ட் செவித்திறன் குறையுடையோருக்கான பள்ளியில் பயிலும் 150 மாணவர்களுக்கு ரூ.6 ஆயிரம் மற்றும் ஐ.வி.டி.பியின் 440 பணியாளர்களுக்கு ரூ.60 ஆயிரம் என புத்தாண்டு கொண்டாட்டமாக அனைவருக்கும் திருச்சி நகரில் புகழ்பெற்ற பி.ஜி நாயுடு கம்பெனியில் இருந்து கேக்குகள் வழங்கப்பட்டது.
அனைத்து பள்ளி மற்றும் குழந்தைகள் இல்லங்களுக்கு நேரில் சென்று கேக்குகளை வழங்கிய ஐ.வி.டி.பி நிறுவன த்தலைவர் மாணவர்கள் முழு கவனத்துடன் கல்வி பயின்று வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டும் என அறிவுரை வழங்கி ஊக்கப்படுத்தினார்.
இவ்வருடத்தில் 9923 மாணவர்களுக்கு மொத்தம் ரூ.4.43 லட்சம் மதிப்பிலான கேக் (இனிப்புகளை) ஐ.வி.டி.பி நிறுவனம் மூலம் வழங்கப்பட்டுள்ளது என்ற தகவலையும் ஐ.வி.டி.பி நிறுவனத் தலைவர் ராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ் தெரிவித்தார்.






