என் மலர்
உள்ளூர் செய்திகள்

நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்
- "ஒவ்வொரு நாளும் மாணவர்களுக்கு நல்லதொரு அனுபவமாக இந்த சிறப்பு முகாம் அமையும்.
- குடும்பத்தை விட்டுத் தனியாக இருக்கின்ற இந்த 7 நாட்களும் இன்ப, துன்பங்களைப் பகிர்ந்து கொள்கின்ற இடமாக இருக்கும் என்றார்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் எம்.ஜி.ஆர் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் தொடக்க விழா, கோபசந்திரம், காமன்தொட்டி ஆகிய கிராமங்களில் தொடங்கியது.
சிறப்பு முகாமினை, எம்.ஜி.ஆர் கல்லூரி முதல்வர் முத்துமணி தொடங்கி வைத்து பேசுகையில், "ஒவ்வொரு நாளும் மாணவர்களுக்கு நல்லதொரு அனுபவமாக இந்த சிறப்பு முகாம் அமையும். குடும்பத்தை விட்டுத் தனியாக இருக்கின்ற இந்த 7 நாட்களும் இன்ப, துன்பங்களைப் பகிர்ந்து கொள்கின்ற இடமாக இருக்கும் என்றார்.
தூய்மை பாரதம், மரம் நடு விழா, இலவச கால்நடை மருத்துவ முகாம், இலவச பொது மருத்துவ முகாம், பெண்களுக்கு உண்டான பாதுகாப்பு குறித்த கருத்தரங்குகள், முதியோர் இல்லம் சென்று நலத்திட்ட உதவிகளை செய்தல், வங்கி கணக்கில் பணம் இல்லா பரிவர்த்தனை எவ்வாறு செய்வது போன்ற கருத்தரங்குகள் ஒவ்வொரு நாளும் இம்முகாமில் நடைபெற உள்ளன.
சிறப்பு முகாமினை, எம்.ஜி.ஆர் கல்லூரி முதல்வர் முத்துமணி தலைமை தாங்கினார். காமன் தொட்டி ஊராட்சி தலைவர் ஜோதிலட்சுமி திம்மராஜ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மோகன் குமார், கோபசந்திரம் இடைநிலை ஆசிரியர் ஸ்ரீ தேவி, எம்.ஜி.ஆர் கல்லூரி பேராசிரியர்கள் மதிவாணன், ரமேஷ், வார்டு உறுப்பினர் சீனிவாசன், தூர்வாசன் ஆகியோர் முகாமை வாழ்த்தி பேசினார்கள்.
இம்முகாமில் 100 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.சிறப்பு முகாம் ஏற்பாடுகளை, திட்ட அலுவலர்கள்லெனின் மற்றும் தேன்மொழி ஆகியோர் ஏற்பாடு செய்துள்ளனர்.






