என் மலர்
நீங்கள் தேடியது "17 பேர் கைது"
- ஓசூர் உட்கோட்டத்தில் பெண்களை வைத்து விபசாரம் செய்ததாக கடந்த 1 மாதத்தில் 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
- விபசார தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 20 பெண்கள் மீட்கப்பட்டு மறுவாழ்வு பெற அரசு பெண்கள் பாதுகாப்பு இல்லங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பழைய நகராட்சி அலுவலகம் எதிரில் மசாஜ் சென்டரில் விபசாரம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஓசூர் அட்கோ போலீசார் அந்த மசாஜ் சென்டரில் திடீரென சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு பெண்களை வைத்து விபசாரம் செய்வது தெரிய வந்தது. இதையடுத்து அதன் உரிமையாளர், ஓசூர் கைரளி நகர் பகுதியை சேர்ந்த பிஜு (வயது48) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் மசாஜ் சென்டரில் இருந்த 3 பெண்களை போலீசார் மீட்டு அரசு பெண்கள் பாதுகாப்பு இல்லங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதேபோல் ஓசூர் மாருதி நகரில் உள்ள மசாஜ் சென்டரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினோத்குமார் மற்றும் போலீசார் சோதனை நடத்தினர்.
அங்கு இளம்பெண்களை வைத்து விபசாரம் செய்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக மசாஜ் சென்டரின் மேலாளர் ஆனேக்கல் பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் பெங்களூருவை சேர்ந்த புரோக்கர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.ஓசூர் உட்கோட்டத்தில் பெண்களை வைத்து விபசாரம் செய்ததாக கடந்த 1 மாதத்தில் 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விபசார தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 20 பெண்கள் மீட்கப்பட்டு மறுவாழ்வு பெற அரசு பெண்கள் பாதுகாப்பு இல்லங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும் ஓசூர் உட்கோட்டத்தில் உள்ள காவல் நிலைய சரகங்களில் அனுமதியில்லாமல் ஸ்பா மற்றும் விபசாரம் நடத்துவது தெரிய வந்தால், ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கைபேசி 6383291232 என்ற எண்ணிற்கு தெரிவிக்கலாம் என்று கேட்டுக ்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், தகவல் தெரிவிக்கும் நபர்களின் விவரம், ரகசியம் காக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






