என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூரில்  கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
    X

    ஓசூரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

    • தந்தை பெரியார் சர்க்கிள் என்று பெயர் வைக்க வேண்டும்
    • மாநகராட்சி ஆணையாளர் சினேகா, மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ரிங்ரோடு அருகேயுள்ள முனீஸ்வர் நகர், நியூ ஏ.எஸ்.டி.சி.ஹட்கோ சந்திப்பு, வ.உ.சி.நகர் உள்ளிட்டவை இணையும் பகுதிகள் முனீஸ்வர் நகர் சர்க்கிள் என்றழைக்கப்பட்டு வருகிறது. இதற்கு தந்தை பெரியார் சர்க்கிள் என்று பெயர் வைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு அரசு அனுமதி கிடைத்ததையடுத்து,, ஓசூர் மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இந்த தீர்மானத்தை கைவிடக்கோரி, பா.ஜனதா கட்சி மற்றும் இந்து முன்னணி, விசுவ இந்து பரிஷத், பஜ்ரங்தள் உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் கடும் கண்டனம் தெரிவித்து,நேற்று ஓசூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில், பா.ஜனதா மாநில துணைத்தலைவர் நரேந்திரன், மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் முனிராஜ், இந்து முன்னணி கோட்ட பொறுப்பாளர் உமேஷ், பஜ்ரங்தள் அமைப்பின் மாநில நிர்வாகி கிரண் உள்பட பலர் கண்டன உரையாற்றினர். மேலும் இதில் பா.ஜனதா மாநில தொழில்துறை பிரிவு செயலாளர் கே.ராமலிங்கம், மாவட்ட பா.ஜனதா துணைத்தலைவர் முருகன், செயலாளர் பிரவீன்குமார், விசுவ இந்து பரிஷத் அமைப்பின் மாவட்ட தலைவர் தேவராஜ், மற்றும் இந்து அமைப்புகளின் நிர்வாகிகள், பா.ஜனதா கட்சியினர் திரளாக கலந்துகொண்டனர்.ஆர்ப்பாட்டத்தில், பெரியார் சர்க்கிள் என்று மாற்றப்படுவதை திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    தொடர்ந்து மாநகராட்சி ஆணையாளர் சினேகா, மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தையொட்டி ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாபு பிரசாந்த் தலைமையில் மாநகராட்சி அலுவலக பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

    Next Story
    ×