என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • இளைஞர்கள் இருவரும் வந்து பாதிக்கப்பட்ட யோகராஜிடம் விசாரித்தபோது பணத்தை திருட நடந்த கொள்ளை முயற்சி சம்பவம் என தெரிய வந்தது.
    • அடுத்த முறை தப்ப முடியாது என சினிமா பானியில் தெரிவித்துவிட்டு வாகனத்தில் வேகமாக சென்று மறைந்தனர்.

    மத்தூர்,

    தருமபுரியில் தனியார் பைனான்ஸ்-ல் பணிபுரிபவர் செந்தில்நகர் பகுதியை சேர்ந்தவர் யோகராஜ் (வயது25). வழக்கம்போல் இவர் நேற்று கலெக்சனுக்காக மத்தூர் அருகே தருமபுரி-திருப்பத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் சிவம்பட்டி ஏரிக்கரை மீது சென்றுக்கொண்டிருந்தார்.

    அப்போது இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த அடையாளம் தெரியாத இரு நபர்கள், வண்டியை வழிமறித்து, யோகராஜ் கையிலிருந்த பணத்தை கேட்டு கத்தியை காட்டி தாக்கியுள்ளனர்.

    அதற்குள்ளாக சுதாரித்துக்கொண்ட யோகராஜ், ஒரு கையால் கத்தியை கையில் பிடித்துக்கொண்டு, மற்றொரு நபர் கத்தியால் தாக்க முற்படும்போது, அவரை காலால் எட்டி உதைத்து கீழே தள்ளியுள்ளார்.

    அவர் விழும்போது அவர்கள் வந்த இரு சக்கர வாகனமும் கீழே விழுந்துள்ளது. அதற்குள் கையிலிருந்த கத்தியை தனது சக்தி கொண்டு சினிமா ஹீரோ போல் வலைத்துள்ளார்.

    இதனை தூரத்தில் இருந்து கவனித்துக்கொண்டிருந்த சிவம்பட்டி கிராமத்தை சேர்ந்த இளைஞர் இருவர் சம்பவ இடத்திற்கு வருவதை அறிந்த கொள்ளையர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த இரு சக்கர வாகனத்தில் ஏறிக்கொண்டு தப்பித்தனர்.

    இளைஞர்கள் இருவரும் வந்து பாதிக்கப்பட்ட யோகராஜிடம் விசாரித்தபோது பணத்தை திருட நடந்த கொள்ளை முயற்சி சம்பவம் என தெரிய வந்தது.

    அப்போது யாரும் எதிர்பாராத நேரத்தில் நிகழ்விடத்திற்கு மீண்டும் திரும்ப வந்த கொள்ளையர்கள், தப்பிவிட்டாய், ஆனால் அடுத்த முறை தப்ப முடியாது என சினிமா பானியில் தெரிவித்துவிட்டு வாகனத்தில் வேகமாக சென்று மறைந்தனர்.

    கத்தியால் காயமடைந்த யோகராஜ் மத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பின்னர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் மத்தூர் போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். 

    • அவர் மறைத்து வைத்திருந்த இரும்பு ராடால் உலகநாதனின் தலை மீது பலமாக தாக்கினார்.
    • போலீசார் சந்திரபிரகாஷ் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அருகே உள்ள சுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் வேணுகோபால் மகன் உலகநாதன் (வயது19) இவர் கிருஷ்ணகிரி அரசு கலை கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

    கிருஷ்ணகிரி திருவண்ணாமலை சாலை ஸ்ரீனிவாசாகாலனி பகுதியை சேர்ந்த சிவகுமார் மகன் சந்திரபிரகாஷ் இவர் சின்னபன முட்லுவில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    இவர்கள் இருவரும் கந்திகுப்பத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒன்றாக பள்ளியில் படித்துள்ளனர்.

    சந்திரபிரகாஷ் அதே பள்ளியில் படித்த 19 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார்.

    இதனையடுத்து உலகநாதனுக்கும் அந்த சிறுமிக்கும் சமீபத்தில் திருமணம் நிச்சயம் நடந்துள்ளது. இதனை அறிந்த சந்திரபிரகாஷ் நேற்று அரசு கலை கல்லூரிக்கு சென்று உலகநாதனிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

    அப்போது அவர் மறைத்து வைத்திருந்த இரும்பு ராடால் உலகநாதனின் தலை மீது பலமாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த உலகநாதனை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்த்தனர்.

    பின்னர் உலகநாதன் கொடுத்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி டவுன் போலீசார் சந்திரபிரகாஷ் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • கல்லூரி செல்ல விருப்பம் இல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.
    • கடந்த 20-ம் தேதி விரக்தியில் மகேந்திரன் விஷம் குடித்துள்ளார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அருகே உள்ள நெக்குந்தி பகுதியை சேர்ந்த வேடி மகன் மகேந்திரன் (வயது18). இவர் சூளகிரி அருகே உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் கல்லூரி செல்ல விருப்பம் இல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.

    இதனை பெற்றோர் கண்டித்துள்ளனர் கல்லூரிக்கு செல்லுமாறு கூறியுள்ளனர். இதனையடுத்து கடந்த 20-ம் தேதி விரக்தியில் மகேந்திரன் விஷம் குடித்துள்ளார். உடனடியாக அவரை கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கே.ஆர்.பி.அணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 376 மனுக்களை கலெக்டரிடம் வழங்கினார்கள்.
    • விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் நேற்று நடந்தது. இதில் பொதுமக்கள் வீட்டு மனை பட்டா, விலையில்லா தையல் எந்திரம் சலவை பெட்டி, முதியோர் உதவி தொகை, சாலை வசதி, மின்சார வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 376 மனுக்களை கலெக்டரிடம் வழங்கினார்கள்.

    மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் அதன் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நலத்துறை அலுவலர் அய்யப்பன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • நேற்று அதிகாலை வீட்டில் இருந்து சிறுமி திடீரென மாயமானாள்.
    • போலீசார் தன்னை தேடுவதை அறிந்த பிரேம்குமார் நேற்று சிறுமியை பர்கூர் பஸ் நிலையத்தில் விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இந்த சிறுமி அரசு பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வந்தாள். இதனிடையே நேற்று அதிகாலை வீட்டில் இருந்து சிறுமி திடீரென மாயமானாள்.

    இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் பர்கூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

    அப்போது பர்கூர் அடுத்த தபால்மேடு இந்திரா நகரை சேர்ந்த சரக்கு வேன் டிரைவர் பிரேம்குமார் (வயது22) என்பவர் சிறுமியை கடத்திசென்றது ெதரியவந்தது.

    போலீசார் தன்னை தேடுவதை அறிந்த பிரேம்குமார் நேற்று சிறுமியை பர்கூர் பஸ் நிலையத்தில் விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று சிறுமியை மீட்டு விசாரணை நடத்தினர். தேனி மாவட்டத்திற்கு கடத்தி சென்றது தெரியவந்தது. பின்னர் பிரேம்குமாரை கைது செய்தனர்.

    • நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவிகள், பொதுமக்கள், இளைஞர்கள் என பலரும் பங்கேற்றனர்.
    • முடிவில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    ஊத்தங்கரை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த காரப்பட்டு யுனிக் கல்லூரி சார்பில் கீழ்மத்தூர் கிராமத்தில் நடைபெற்ற நாட்டு நலப்பணித்திட்ட நிறைவு விழா நடைபெற்றது.

    கல்லூரி நிறுவனர் அருள் தலைமை தாங்கினார்.செயலாளர் தமிழரசு முன்னிலை வகித்தார். முதல்வரும், தமிழ்த்துறை தலைவருமான கிருஷ்ணகுமாரி வாழ்த்தி பேசினார். கீழ்மத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் மணிகண்டன், கொம்மம்பட்டு அரி வர்ஷன் அனிமல் பீஸ்ட் அர்ஜீனன், கீழ்மத்தூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் நிறைமதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ஏழு நாட்கள் நடந்த நிகழ்வில் நாட்டு நலப்பணி திட்டத்தின் சிறந்த சேவகர்களாக செயலபட்ட தமிழ்த்துறை இரண்டாம் ஆண்டு மாணவி கார்த்திகா, தாவரவியல் துறை இரண்டாம் ஆண்டு மாணவன் தினேஷ் ஆகியோருக்கும், நாட்டு நலப்பணித் திட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட பேராசிரியர்கள் கதிரவன், மோகனா, பிரதீஸ்வரன் ஆகியோருக்கு நிறுவனர் அருள் பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் நினைவு பரிசுகளை வழங்கினார்.

    விழாவில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள், விலங்கியல் துறைத் தலைவர் உதவிப் பேராசிரியர் குபேந்திரன், கணிதத் துறைத் தலைவர் கோவிந்தன், கணினி அறிவியல் துறைத் தலைவர் சங்கர், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவிகள், பொதுமக்கள், இளைஞர்கள் என பலரும் பங்கேற்றனர்.

    முடிவில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முன்னதாக தமிழ் இலக்கியம் இரண்டாம் ஆண்டு மாணவி கார்த்திகா வரவேற்புரை ஆற்றினார். ஆங்கிலத்துறை இரண்டாம் ஆண்டு மாணவன் சயின்ஷா நன்றி கூறினார்.

    • ஊத்தங்கரையில் அனைத்து கட்சி கூட்டம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
    • 4.38 ஏக்கர் நிலத்தில் உடனடியாக அரசு மருத்துவமனை அமைக்க பரிந்துரை செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

    ஊத்தங்கரை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் அனைத்து கட்சி கூட்டம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

    ஸ்ரீ வித்யா மந்திர் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் வே.சந்திரசேகரன் தாங்கினார். அரசுப்பள்ளிகள் வளர்ச்சி அறக்கட்டளை நிர்வாகிகள் லோகநாதன்சேகர், சதீஷ்பாபு, துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் ஊத்தங்கரை தாலுகா அரசு மருத்துவமனையை விரிவாக்கம் செய்ய மத்திய அரசு சார்பில் 21 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

    அந்த மருத்துவமனையை அதற்காக ஸ்ரீ வித்யா மந்திர் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சந்திரசேகரன் இலவசமாக வழங்கிய மூன்றம்பட்டி ஊராட்சியில் தேசிய நெடுஞ்சாலையின் அருகில் 4.38 ஏக்கர் நிலத்தில் உடனடியாக அரசு மருத்துவமனை அமைக்க பரிந்துரை செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் பேரூராட்சி தலைவர் அமானுல்லா, தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் மூன்றம்பட்டி குமரேசன், எக்கூர் செல்வம்,ரஜினி செல்வம், நகர செயலாளர் பாபு சிவக்குமார், அ.தி.மு.க. நகர செயலாளர் சிக்னல் ஆறுமுகம், அவைத் தலைவர் சுப்பிரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் குபேந்திரன்,

    ஜெயலட்சுமி, எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு அறக்கட்டளை தலைவர் டாக்டர் இளையராஜா, காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் பூபதி, விஜயகுமார், பா.ம.க.சார்பில் வக்கீல் மூர்த்தி, கிருபாகரன், இ.கம்யூனிஸ்ட் கட்சி சேகர், மா.கம்யூனிஸ்ட் கட்சி மகாலிங்கம்,

    பா.ஜ.க.சிவா, சிங்காரவேலன், இந்திய குடியரசு கட்சி மாநில நிர்வாகி கவுன்சிலர் சிவன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி செல்வராஜ், ஜெய்சங்கர், அனைத்து வணிகர் சங்க நிர்வாகி உமாபதி, டாக்டர்கள் கந்தசாமி, நடேசன், வக்கீல்கள் பெருமாள், பாலசந்தர், ஆசிரியர் வீரமணி, ஆடிட்டர் ராஜேந்திரன், பழ.பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
    • அவர்களிடம் இருந்து பணம் 300 பறிமுதல் செய்யப்பட்டது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டை போலீசார் நாயக்கனூர் பகுதியில் ரோந்து சென்றனர்.

    அப்போது அங்கு பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த சிவகுமார் (43), தர்மலிங்கம் (30), அருண்குமார் (28), பிரசாந்த் (28) ஆகிய 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து பணம் 300 பறிமுதல் செய்யப்பட்டது.

    • குடிபோதையில் பொதுஇடத்தில் ஆபாசமாக பேசிகொண்டிருந்த ராமு (36) மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
    • விவசாயி நாகமணியை ஆபாசமாக பேசிய அதே பகுதியை சேர்ந்த முனியப்பன(32) என்பவரை கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி தாலுக்கா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அறிவழகன் மற்றும் போலீசார் புதிய வீடடு வசதிவாரியம் ஆட்டோ ஸ்டேண்ட் பகுதி யில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு குடிபோதையில் பொதுஇடத்தில் ஆபாசமாக பேசிகொண்டிருந்த கிருஷ்ணகிரி கோ-ஆப் காலணி 2-வது கிராஸ் பகுதியை சேர்ந்த நித்தீஷ் (வயது 25), மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    இதேபோல் ஒசூர் டவுன் போலீசார் பெரியார் நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு குடிபோதையில் பொதுஇடத்தில் ஆபாசமாக பேசிகொண்டிருந்த ராமு (36) மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    காவேரிப்பட்டணம் போலீசார் தாசம்பட்டி கூட்டு ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு குடிபோதையில் வரட்டம்பட்டி விவசாயி நாகமணியை ஆபாசமாக பேசிய அதே பகுதியை சேர்ந்த முனியப்பன(32) என்பவரை கைது செய்தனர்.

    • குணமாக விரக்த்தியில் கடந்த 24-ம் தேதி விஷம் குடித்துள்ளார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்ற னர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் சிப்காட் ராயல்கார்டன் பகுதியை சேர்ந்த ராமநாதன், இவரது மகன் மனோ (வயது24), இவர் சற்ற மனநலம் பாதிக்கபட்டு பெங்களுரில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இதில் குணமாக விரக்த்தியில் கடந்த 24-ம் தேதி விஷம் குடித்துள்ளார். இதனையடுத்து அவரது உறவினர்கள் அவரை மீட்டு பெங்களுரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலனிள்றி பரிதாபமாக நேற்று இறந்தார்.

    இது குறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்ற னர்.

    • அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதிய விபத்தில் கிருஷ்ணமூர்த்தி படுகாயம் அடைந்தார்.
    • போ லீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே உள்ள மாடரஅள்ளி பகுதியை சேர்ந்த துணி வியாபாரி கிருஷ்ணமூர்த்தி (வயது45). இவர் நேற்று மத்தூர் -மாடரஅள்ளி சாலையில் சென்றுகொண்டிருந்தார்.

    இந்நிலையில் எதிரே அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதிய விபத்தில் கிருஷ்ணமூர்த்தி படுகாயம் அடைந்தார்.

    அவ்வழியே சென்றவர் அவரை மீட்டு சிகிச்சைகாக மத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் கிருஷ்ணமூர்த்தி இறந்தார்.

    இது குறித்து மத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ரூ.5 லட்சத்து 78 ஆயிரம் மதிப்பில் பெண்கள் கழிவறை கட்டுவதற்கான பணிகள் துவங்கப்பட்டது.
    • பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒரப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில், 2022&23ம் ஆண்டிற்கான பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.14 லட்சம் மதிப்பில் கலை அரங்கம் கட்டுதல் மற்றும் ரூ.5 லட்சத்து 78 ஆயிரம் மதிப்பில் பெண்கள் கழிவறை கட்டுவதற்கான பணிகள் துவங்கப்பட்டது.

    இந்த பணிக்கு பூமி பூஜை நடந்தது. இந்த பணியினை பர்கூர் சட்டமன்ற உறுப்பினரும், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான மதியழகன் எம்எல்ஏ., துவக்கி வைத்து, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில், கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் கிருபாகரன், பொதுக்குழு உறுப்பினர் நாகராசன், ஒன்றிய செயலாளர்கள் (வடக்கு) ராஜேந்திரன், (தெற்கு) அறிஞர், பிடிஏ தலைவர் நடராஜன், திமுக நிர்வாகிகள் பாலன், செல்வம், சவுந்திரம், கிருஷ்ணன், மகேந்திரன் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் நளினி, உதவி தலைமை ஆசிரியர் சக்திவேல், ஆசிரியர்கள் வேலன், தமிழ்செல்வன், ராஜேஸ்வரி, அந்தோணிகுரூஸ், வித்யா, அமுதா, சத்தியநாதன், எஸ்தர் மறறும் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், கவுன்சிலர்கள், இன்னாள், முன்னாள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், திமுக கிளை செயலாளாகள், பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

    ×