என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவனை  இரும்பு ராடால் அடித்தவர் கைது
    X

    காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவனை இரும்பு ராடால் அடித்தவர் கைது

    • அவர் மறைத்து வைத்திருந்த இரும்பு ராடால் உலகநாதனின் தலை மீது பலமாக தாக்கினார்.
    • போலீசார் சந்திரபிரகாஷ் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அருகே உள்ள சுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் வேணுகோபால் மகன் உலகநாதன் (வயது19) இவர் கிருஷ்ணகிரி அரசு கலை கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

    கிருஷ்ணகிரி திருவண்ணாமலை சாலை ஸ்ரீனிவாசாகாலனி பகுதியை சேர்ந்த சிவகுமார் மகன் சந்திரபிரகாஷ் இவர் சின்னபன முட்லுவில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    இவர்கள் இருவரும் கந்திகுப்பத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒன்றாக பள்ளியில் படித்துள்ளனர்.

    சந்திரபிரகாஷ் அதே பள்ளியில் படித்த 19 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார்.

    இதனையடுத்து உலகநாதனுக்கும் அந்த சிறுமிக்கும் சமீபத்தில் திருமணம் நிச்சயம் நடந்துள்ளது. இதனை அறிந்த சந்திரபிரகாஷ் நேற்று அரசு கலை கல்லூரிக்கு சென்று உலகநாதனிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

    அப்போது அவர் மறைத்து வைத்திருந்த இரும்பு ராடால் உலகநாதனின் தலை மீது பலமாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த உலகநாதனை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்த்தனர்.

    பின்னர் உலகநாதன் கொடுத்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி டவுன் போலீசார் சந்திரபிரகாஷ் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×