என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நிதிநிறுவன ஊழியரை கத்தியால் தாக்கி பணம் பறிக்க முயற்சி
    X

    நிதிநிறுவன ஊழியரை கத்தியால் தாக்கி பணம் பறிக்க முயற்சி

    • இளைஞர்கள் இருவரும் வந்து பாதிக்கப்பட்ட யோகராஜிடம் விசாரித்தபோது பணத்தை திருட நடந்த கொள்ளை முயற்சி சம்பவம் என தெரிய வந்தது.
    • அடுத்த முறை தப்ப முடியாது என சினிமா பானியில் தெரிவித்துவிட்டு வாகனத்தில் வேகமாக சென்று மறைந்தனர்.

    மத்தூர்,

    தருமபுரியில் தனியார் பைனான்ஸ்-ல் பணிபுரிபவர் செந்தில்நகர் பகுதியை சேர்ந்தவர் யோகராஜ் (வயது25). வழக்கம்போல் இவர் நேற்று கலெக்சனுக்காக மத்தூர் அருகே தருமபுரி-திருப்பத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் சிவம்பட்டி ஏரிக்கரை மீது சென்றுக்கொண்டிருந்தார்.

    அப்போது இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த அடையாளம் தெரியாத இரு நபர்கள், வண்டியை வழிமறித்து, யோகராஜ் கையிலிருந்த பணத்தை கேட்டு கத்தியை காட்டி தாக்கியுள்ளனர்.

    அதற்குள்ளாக சுதாரித்துக்கொண்ட யோகராஜ், ஒரு கையால் கத்தியை கையில் பிடித்துக்கொண்டு, மற்றொரு நபர் கத்தியால் தாக்க முற்படும்போது, அவரை காலால் எட்டி உதைத்து கீழே தள்ளியுள்ளார்.

    அவர் விழும்போது அவர்கள் வந்த இரு சக்கர வாகனமும் கீழே விழுந்துள்ளது. அதற்குள் கையிலிருந்த கத்தியை தனது சக்தி கொண்டு சினிமா ஹீரோ போல் வலைத்துள்ளார்.

    இதனை தூரத்தில் இருந்து கவனித்துக்கொண்டிருந்த சிவம்பட்டி கிராமத்தை சேர்ந்த இளைஞர் இருவர் சம்பவ இடத்திற்கு வருவதை அறிந்த கொள்ளையர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த இரு சக்கர வாகனத்தில் ஏறிக்கொண்டு தப்பித்தனர்.

    இளைஞர்கள் இருவரும் வந்து பாதிக்கப்பட்ட யோகராஜிடம் விசாரித்தபோது பணத்தை திருட நடந்த கொள்ளை முயற்சி சம்பவம் என தெரிய வந்தது.

    அப்போது யாரும் எதிர்பாராத நேரத்தில் நிகழ்விடத்திற்கு மீண்டும் திரும்ப வந்த கொள்ளையர்கள், தப்பிவிட்டாய், ஆனால் அடுத்த முறை தப்ப முடியாது என சினிமா பானியில் தெரிவித்துவிட்டு வாகனத்தில் வேகமாக சென்று மறைந்தனர்.

    கத்தியால் காயமடைந்த யோகராஜ் மத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பின்னர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் மத்தூர் போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×