என் மலர்
உள்ளூர் செய்திகள்

பைக் மோதி துணி வியாபாரி பலி
- அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதிய விபத்தில் கிருஷ்ணமூர்த்தி படுகாயம் அடைந்தார்.
- போ லீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே உள்ள மாடரஅள்ளி பகுதியை சேர்ந்த துணி வியாபாரி கிருஷ்ணமூர்த்தி (வயது45). இவர் நேற்று மத்தூர் -மாடரஅள்ளி சாலையில் சென்றுகொண்டிருந்தார்.
இந்நிலையில் எதிரே அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதிய விபத்தில் கிருஷ்ணமூர்த்தி படுகாயம் அடைந்தார்.
அவ்வழியே சென்றவர் அவரை மீட்டு சிகிச்சைகாக மத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் கிருஷ்ணமூர்த்தி இறந்தார்.
இது குறித்து மத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story






